ஆடி கிருத்திகை 2015
நிறைவு
ஆடி கிருத்திகை வைபவம் நேருல் முருகன் ஆலயத்தில் வெகு விமரிசையாக நடந்தேறியது .மும்பையின் பல பகுதிகளில் இருந்து அன்பர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு பெருமானின் பரிபூர்ண அருள் வேண்டி இசை வழிபாட்டில் மெய் மறந்து வழிபட்டனர்.
சில புகைப்பட காட்சிகள்
கோபுர தரிசனம்
ஆலயத்தில் அருள்பாலிக்கும் சில தெய்வங்கள்
மயில் பீலிகளின் பின்னணியோடு எழுந்தருளிய பெருமான்
முருகா சரணம்
ஆடி கிருத்திகை இசை வழி பாடு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் அருளாளர் கே.ஆர் .பாலசுப்ரமணியம் கை வண்ணத்தில் மிளிர்கின்றன! அறுமுகப் பெருமானின் புகழ் பாடி அடைந்த அக நிறைவு அனைத்து அன்பர்களின் முகங்களிலும் பிரதிபலிக்கின்றது!
ReplyDeleteஆண்டாண்டு காலமாய் இத்தகைய அனபர்கள் கூட்டத்தை அருள் பெற அறுமுகவன் அருகே அழைத்து செல்லும் முதிய தம்பதியர் பாலு மாமா & மாமி குழுவினரின் சீரிய திருப்புகழ் தொண்டு மென்மேலும் சிறக்க சிக்கல் சிங்கார வேலனை வேண்டுவோமே!
"மாமயிலில் நித்தம் வருவோனே! தாள் தர நினைத்து வர வேண்டும்!" ஓம் முருகா சரணம்!