குரு மஹிமை இசை ரீதிகௌளை வராளி ராகங்கள்
ரீதிகௌளை ராகம்
" இசைந்த ஏறும் " என்று தொடங்கும் பாடல்
" எலுப்புநாடிகள்" என்று தொடங்கும் பாடல்
"மனையவள் நகைக்க" என்று தொடங்கும் பாடல்
ஞான மலை தலம்
சமீபகாலம் வரை பிரபல ஞான மலை தலத்தை அடையாளம்காண முடியவில்லை.
வேலூர் மாவட்டத்தில் காவேரிபாக்கத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில்உள்ளகோவிந்தாச்சாரிகிராமத்தின்உச்சியில்சிறியகுன்றின்மேல்அமை ந்துள்ளது..ஞானமலைக்கு செல்வது அவ்வளவு சுலபமில்லை.
இந்த மலை மீது ஒரு சிறிய முருகன் கோயில் உள்ளது. 1998 ஆம் ஆண்டில் தொல்பொருள் துறை அதிகாரிகள் சில உள்ளூர் மக்கள் உதவியுடன் ஒரு தேய்ந்த கல்வெட்டை கண்டு பிடித்தனர்.
அதில்
"... அரசன் சம்புவராயர் ஆட்சி யில் அவரது மகன் இளவரசர் கலிங்கராயர் ஞானமலையை அடைய படிக்கட்டுக்கலை அமைத்தார் "
என்று அறியப்பட்டது.காலம் கி.பி. 1322-1340என்று நிர்ணயிக்கப்பட்டது. செய்தித்தாளின் மூலமாக இச்செய்தியை அறிந்த திருப்புகழ் தொண்டர் ரா.கிருஷ்ணன்,தலத்துக்குவிஜயம்செய்து, ஆய்வு நடத்திநடத்தி அருணகிரியார் தன் பாடலில் குறிப்பிட்டுள் ஞான மலை இது தான் என்று உறுதிப்படித்தினார்.
தீவிரமான நடவடிக்கைக்கு தொடர்ந்து, கடந்த சில ஆண்டு களாக அபிஷேகம்,ஆராதனை ,இசை நிகழ்சிகள் நடத்தப்பட்டு மற்றும் 15 செப்டம்பர் ஆண்டு 2000 கும்பாபிஷேகம் நடந்தேறியது.முருகப்பெருமான் வள்ளி திருமணம் முடிந்த பின் இங்கு தன் திருப் பாதங்களை பதித்ததாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
அருணகிரிநாதர் இங்கு விஜயம் செய்து தன் கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார்
"அவரது மனைவி, சொந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர்மக்கள் எல்லோராலும் வெறுக்கப்பட்ட பின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர நினைத்த அந்த நேரத்தில் முருகன் தன் தாமரை பாதங்களினால் அவரை ஆட்கொண்டதை யும், மீண்டும் அதே அருளையும் வேண்டுவதையும், "மனையவள் நகைக்க என்று தொடங்கும் பாடல் வெளிப்படுத்துகிறது"
வராளி ராகம் " "கருவடைந்து " என்று தொடங்கும் பாடல்
" வேயிசை" என்று தொடங்கும் பாடல்
முருகா சரணம்
தொடரும்
ரம்யமான ரீதிகௌளை, வசிகர வராளி ராகப் பாடல்கள்! ஞான மலை தல புராணம் ஞாலவும் நன்று!
ReplyDelete