கந்த சஷ்டி விழா நிறைவு (மும்பை )
கந்த சஷ்டி விழா பூஜா விதிகளுடன் பிற்பகல் 4.00 மணி அளவில் தொடங்கி யது.குரு பாலு சார் அன்று பெருமானின் திருவடிகளை சென்றடைந்த அருளாளர் பித்துக்குளி முருகதாஸ் நினைவாக வழிபாடு அமைந்து சாந்தி ஸ்லோகத்துடன் முடிய பிரார்த்தித்தார்.மேலும் முருகதாஸ் தை பூசத்தில் பிறந்தது மகா சஷ்டியில் முக்தி அடைந்ததும் பெருமானின் அருள் என்று கூறியபோது அன்பர்கள் மனம் நெகிழ்ந்தனர்.
மேலும் பாலு சார் டிசம்பர் 24 /25 தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ள வள்ளி திருமண வைபவத்துக்கும் ,கலந்துரையாடலுக்கும் அன்பர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டினார்,
சில புகைப்பட காட்சிகள்
.
முருகா சரணம்
கந்த சஷ்டி விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கந்தன் கருணையினால் கிட்டியது. கல் நெஞ்சங்களையும் கரைந்துருகச் செய்த இசை வழிபாடு. கச்சிதமான புகைப்படங்கள்.
ReplyDelete