Sunday, 8 November 2015

பெங்களூர் வைபவம் வள்ளிகல்யாணம் செய்திதொடர் 1



பெங்களூர் வைபவம்  வள்ளிகல்யாணம் செய்திதொடர்   1

அருளாளர் ஐயப்பன் அளித்துள்ள  செய்தி 
"முருகா சரணம் 
அன்பர்களே,
முருக வழிபாடுகளில் அதி முக்கியமானது மகா சஷ்டி வழிபாடு எனலாம் அதற்கு அடுத்து நமக்கு நமது குருஜி அருளியது திருப்புகழ் இசை வழிபாடே. அவற்றுள் அதிமுக்கியமானது வள்ளி கல்யாணம் எனக் கூறுவதில் தவறில்லை என்பது நாயேனின் கருத்து. அப்படி பட்ட வள்ளி கல்யாணத்தை நமது குருஜி திருச்செந்தூரில் நடத்தி அருளினார் அவருடைய  அருவ நிலையிலேயெ வீற்றிருந்து. அன்றே இப்படிப்பட்ட திருக்கல்யாணம் பெங்களூருவிலும் நடத்தப்பட வேண்டும் எனும் விதையை விதைத்து  விட்டவர் நமது கேஎன்கே சார். இந்த வள்ளி கல்யாணத்தின் போது நடத்தப்பட உள்ள கலந்துரையாடல், சுப்பிரமணிய திரிசதி பூஜை ஆகியவை சிறப்பம்சமாகும். இவ்வைபவத்தில் கலந்து கொண்டு பயனடைய திருப்புகழ் அன்பர்கள் மற்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கில் வருவார்கள். யார் யார் வருகிறார்கள் என்பதை முன் கூட்டியே தெரிந்தால் தானே அவர்கட்கு உணவு உறைவிடம் ஏற்பாடுகள் செய்ய இயலும். அதற்காகவே தான் திருச்செந்தூர் வள்ளி நாச்சியாரின் திருக்கல்யாணத்தில் செய்தது மாதிரியே ஒரு கூகிள் பக்கம் கீழே தரப்பட்டுள்ளது எதை அனைவருமே பார்த்துக் கொள்ளலாம். தாங்கள் தங்கள் விபரங்களை எழுதி அனுப்பலாம். அல்லது கீழ் காணும் அன்பர்களுடன் கை பேசியில் தொடர்பு கொண்டு தெரிவுக்கலாம். இதை உடனே செய்து விட பிரார்த்தனை செய்கிறேன் 

For further details on the accommodation the following persons can be contacted.

Sriyuths.  R.Nagesh (09448089383), T.Ashogan (09972982988), Kuppusubramanian   

    (09483249771)"

Link for Google Sheet

https://docs.google.com/spreadsheets/d/1CxSXYb7gdtDi0gdLaMvnCTwPh3x6XJZXRW-LnhsUsqg/edit#gid=0


கலந்துகொள்ள விழையும் அன்பர்கள் விரைவில் தகவல்களை அளிக்க அன்புடன் வேண்டுகிறோம்.





1 comment:

  1. பெங்களூர் வைபவம் வள்ளிகல்யாணம் இப்பொழுதே களைகட்டத் தொடங்கிவிட்டது.
    கூகிள் பக்கம் அன்பர்கள் அட்டவணை அருமையான முயற்சி! வள்ளி கல்யாணம் வைபோகமே!

    ReplyDelete