Tuesday, 24 November 2015

திருக்கார்த்திகை அண்ணாமலை தீபம்




                                                  திருக்கார்த்திகை அண்ணாமலை தீபம் 





                                அருணகிரிப் பெருமானைப்போற்றுவோம்




இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித்
     திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே

பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா
     அரனருள் சற்புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே.

அடிமை கொடுநோய் பொடிகள் படவே
     அருண கிரிவாழ் ...... பெருமாளே.


அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்

     றருணையிற் கோபுரத் ...... துறைவோனே


சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்
     சுடரயிற் சரவணப் ...... பெருமாளே.

அருண ரவியினுமழகிய ப்ரபைவிடு
     கருணை வருணித தனுபர குருபர
          அருணை நகருறை சரவண குரவணி ...... புயவேளே

திருவுலாவு சொணேசரணாமலை
     முகிலு லாவு விமானந வோநிலை
          சிகர மீது குலாவியு லாவிய ...... பெருமாளே.

அமரர் வணங்கு கந்தா குறத்தி கொங்கை
     தனில்முழுகுங் கடம்பா மிகுத்த செஞ்சொ
          லருணை நெடுந்தடங் கோபுரத்த மர்ந்த
          ...... அறுமுகப் பெருமாளே

நற்பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக்கு 
     அருணையிற் கோபுரத் ...... துறைவோனே

அதிக தேவரே சூழ உலக மீதி லேகூறும்
     அருணை மீதி லேமேவு ...... பெருமாளே.

அமுதாசனத்தி குற மடவாள் கரிப்பெணொடும்
     அருணாசலத்திலுறை ...... பெருமாளே.

அதிக வானவர் கவரி வீசவே
     அரிய கோபுரந் தனில்மேவி

அருணை மீதிலெ மயிலி லேறியே
     அழகதாய்வரும் ...... பெருமாளே.

                                             பாடல் இசையுடன் 

செயசெய அருணாத் திரிசிவ யநமச்
     செயசெய அருணாத் திரிமசி வயநச்
          செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... திருமூலா

செயசெய அருணாத் திரியந மசிவச்
     செயசெய அருணாத் திரிவய நமசிச்
          செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி

செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்
     தரகர சரணாத் திரியென உருகிச்
          செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச்

சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்
     சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
          திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ

செயசெய சரணாத் திரியென முநிவர்க்
     கணமிது வினைகாத் திடுமென மருவச்
          செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ...... சுடும்வேலா

திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
     கடிதலை தெரியாப் படிநிண அருணச்
          சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே

செயசெய சரணாத் திரியெனு மடியெற்
     கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
          றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா

திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
     குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
   சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே.



                                                                   

                                                                     ஓம் நமசிவாய

                                                                     முருகாசரணம் 

1 comment:

  1. திருக்கார்த்திகைத் திருநாளில் தீபச் சுடரில் ஒளிரும் திருவண்ணாமலை கோபுரப் புகைப்படம் கண் கொள்ளாக் காட்சி! அருணகிரிப் பெருமான் அருளிய திருவருணை திருப்புகழ் பாடல்களின் தொகுப்பு பக்திப் பரவசமூட்டுகிறது.

    ReplyDelete