சேவகன் திரு வகுப்பு
ஸ்ரீமத் பாகவதத்தில்மிக கொடிய செயல்களை வாழ் நாள் முழுதும் மேற்கொண்டஅஜாமிளன் என்ற பாபி கடைசியில் எமதூதர்கள் நெருங்கும் பொது பயத்தினால்தன்கடைசி பையனை "நாராயணா " என்று கூவி அழைத்தபோது விஷ்ணு தூதர்கள் ஓடிவந்து எமதூதர்களைவிரட்டிஅடித்து.கதைமுடிவில்அவரைவைகுண்டத்துக்குஅழைத்துச்செல்கின்றனர்.
அதே தத்துவம்தான் இந்த வகுப்பில் உபதேசமாக வருகிறது
அறிவொடு மதுர மொழியது குழறி
அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய்.
(புத்தியும் இனிய பேச்சும் தடுமாறி வரும் அந்தக் கடைசி நேரத்தில்
'முருகா' என உணர்ச்சியுடன் உன்னை அழைப்பேன். அந்தச் சமயம் உடனே வந்து
காப்பாற்ற வேண்டும்.)
மற்றும் சிவபெருமான் திரிபுரத்தை தன் சிரிப்பால் எரித்தது விவரிக்கப்படுகிறது.
முடிவில் முழு சேவகனுக்கு முழு விளக்கத்தையும் காணலாம்.
வளைகடல் கதற நிசிசரர் மடிய
மலையொடு பொருத முழுச்சேவகனே.
(இராவணனைக் கொன்ற திருமால் கால் சேவகன். முப்புரம்
எரித்தசிவபெருமான் அரைச் சேவகன். காம குரோதாதியான அறுபகைகள்உயிர்த்தொகைகளாகிய தினைப்பயிர்களை நாசம் செய்யாது தவம் காத்த வள்ளிமுக்கால் சேவகன். கடல் கதற மலை மடிய நிசாசரர் மாள செய்த முருகனே முழுச்சேவகன் என்பதை இந்த நான்கு அடிக ளிலும் அருணகிரியார்
வெளிப்படுத்துகிறார்.)
திருப்புகழ் அடிமை அருளாளர் நடராஜன் சார் அளிக்கும் விளக்க உரைக்கு ......குறியீடு
முருகா சரணம்
No comments:
Post a Comment