Monday, 2 March 2015


திருச்செந்தூர்  -வள்ளிகல்யணம்

அருளாளர் ஐயப்பன்அனுப்பியுள்ள வேண்டுகோளுடன் அவர் அனுப்பியுள்ள  வள்ளி கல்யாண பாடல்களை  புத்தக வடிவில் வெளியிட்டுள்ளோம்.அவர்கூறியுள்ளபடி இந்தபாடல்களின் வரிகள்அருணகிரியாரின்  திருப்புகழ் பாடல்,விருத்தம்,பதிகம் முதலிய படைப்புகளிருந்துதான் எடுத்து தொகுக்கப்பட்டுள்ளன.அவர் வேண்டுகோலின் படி திருப்புகழ் பாடல்களை மனனம் செய்தவர்களுக்கு வரிகள்  சுலபமாக வெளிப்படும்.என்பதில் ஐயமில்லை.

 அருளாளரின் வேண்டுகோள் 


முருகா சரணம்,
அன்பர்களே,
2001 ம் ஆண்டில் திருப்புகழ் அன்பர்கள் , " அருணகிரிநாத சுவாமிகள் அருளிய நவமணிகளாகத் திகழும் ஒன்பது  படைப்புகளிலிருந்து தொகுக்கப் பட்ட பாடல் கண்ணிகள் அடங்கிய        --  வள்ளி கல்யாணம் - " எனும் சிறு நூலின் ஸ்கேண்டு காப்பிகளை இத்துடன் இணைத்துள்ளென். இதில் காணும் அனைத்து பாடல்களையும் பாட நமக்கு நேரம் இல்லாத காரணத்தினால், இதிலிருந்து தெரித்து எடுக்கப்பட்ட கண்ணிகளையே ஒவ்வொரு வள்ளி கல்யாணத்திலும் பாடுவார் நமது குருஜி. அந்த வகையில் திருச்செந்தூரில் நடக்க இருக்கும் வள்ளி கல்யாணத்திலும் இது மாதிரியே தொகுக்கப்பட்ட லிஸ்ட் ஒவ்வொருவருக்கும் கிட்டும் விரைவில். அதுவரையில் இந்தப் பிரதிகள் உங்களுக்கு பயன் படுமே எனும் நோக்கில் தான் இவைகளை அனுப்புகிறேன். முருகப்பெருமானின் வரவிலிருந்து அவருக்கு வாழ்த்துப் பாடும் வரை எல்லாப் பாடல்களையும் நன்கு பாட, மனப்பாடமாகப் பாட, பயிற்சி செய்து கொள்ள வேண்டுகிறேன். பாட்டு மனப்பாடம் செய்யப்பட்டால் தான் முழு மனத்தையும் முருகன் பால் செலுத்த இயலும். அதிலும் பொருள் தெரிந்து மனப்பாடம் செய்தால் இந்த ஜென்மத்தில் அது மறக்காது.  மனப்பாடம் செய்ய ஒரு எளிய வழி அருணை முனிவர் சொல்லித் தந்தது.
எழுதி எழுதி படியுங்கள்.
பழுது இல் நின் சொல் சொல்லி எழுதி
   நித்தம் உண்மை பகர்வதற்கு நன்மை தருவாயே

இகல் வெற்றி சத்திக் கிரணமும்
  இரணித்த பச்சைப் புரவியும்
  இரவிக் கைக்குக்குட துவசமும்   மற மாதும்
இடை வைத்து சித்ரத் தமிழ் கொடு
  கவி மெத்தச் செப்பி பழுதற
  எழுதி கற்பித்துத் திரிபவர்        பெருவாழ்வே ( மதாணி 1171 வது திருப்புகழ்)

நாயேன் படிக்கிற காலத்திலும் எனது ஆசிரியர் இதனையே கூறியுள்ளார். நாயேன் இதே வழியை பின்பற்றிய காரணத்தினால் திருவகுப்புகள் பூராவும், பல திருப்புகழ் பாக்கள் பாராயணத்திற்கு மனப்பாடம் இந்த மறதி மிகுத்துள காலத்திலும் கூட. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. நீங்களும் இந்தவழியை பின்பற்றி எல்லாத் திருப்புகழ் பாக்களையும் மனப்பாடம் செய்து பகவானிடம் சமர்ப்பிக்க நான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் குழந்தைகள் பேரன் பேத்திகளையும் பாடம் படிக்க  இந்த வழியை பின்பற்ற சொல்லுங்கள். காரணம் எதிர்காலம் அவர்கள் கையில் தான் உள்ளது. அவர்களை வல்லமை மிக்க சான்றோர்களாக்குவது நமது கடமை
முருகா சரணம், முருகா சரணம், முருகா சரணம்,







mm
























No comments:

Post a Comment