படி விழா மும்பை ..1.1.2015.நிறைவு
திருசெம்பூர் திருமுருகன் திருக்கோவில் முகப்பு
மும்பை படிவிழா குரு பாலு சார் தலைமையில் காலை 7.30மணிக்கு இனிதே தொடங்கி யது..நம் குருஜியும் அருவமாக வழி நடத்திச்சென்றார் என்பதை கூற த்தேவையில்லை.மும்பையின் பல பகுதி களிலிருந்து கூடிய அன்பர்களுடன் புனே .,பெங்களூர் .கோயம்புத்தூர் அன்பர்களும் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டனர்
படிகள் நூற்று எட்டை கடந்து மூலவர் சந்நிதானத்தை அடைந்து தரிசனம் செய்தபின் உத்சவப்பெருமானின் திவ்ய அபிஷேகத்தை அன்பர்களின் வேல் மயில் விருத்தம் ,வகுப்புக்கள் பாடலுடன் பக்தர்கள் பரவசத்துடன் பெருமானுடன் ஒன்றினர்.திருப்பழனி வகுப்பு முடிவில் "முருகேசனே வரவேணுமே " என்று ஒரே குரலில் கூவி அழைத்தவுடன் பெருமான் அலங்காரங்கள் முடிந்து .ஜகஜ்ஜோதியாக தரிசனம் தந்தார்.`
குரு பாலு சாருக்கு ஆலய மரியாதை யைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாத விநியோகத்துடன் படிவிழ இனிதே நிறைவடைந்தது.
மற்றும் சில படி விழா புகைப்படங்களை அன்பர்கள் பார்வைக்கு அளிக்கிறோம்.
புகைப்பட உதவி .அருளாளர்அருளாளர் கே.ஆர் .பாலசுப்ரமணியம் அவகளுக்கு நன்றிகள் பல/
No comments:
Post a Comment