திருசெந்தூர் வள்ளி கல்யாணம்
தொடரும் செய்திகள்
தொடர்ந்து அருளாளர் ஐயப்பன் அனுப்பியுள்ள செய்தியை மிக்க மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்.
முருகா சரணம்
அன்பர்களே
நேற்று, 150224, புதன் கிழமை மாசி கிருத்திகைத் திருநாளாகும்.இந்நாளில் அனைத்து திருக்கோவில்களிலும் விஷேச வழிபாடுகள் நடக்கிறது. இதை உணராமலே நமது செந்திலாண்டவன் நம்மை அவனது திருமண அழைப்பிதழை அவனது திருவடியில் சமர்ப்பிக்க அருள் புரிந்தான். நாயேன், அன்பர்கள் பாலு, சேஷாத்திரி உஷா அம்மா நாலவரும் அழைப்பிதழை எடுத்துக்கொண்டு அசோக் நகரிலுள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவிலுக்குச் சென்றோம். அனைத்து மூர்த்திகளுமே அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு தரிசனம் தந்தார்கள். அன்பர் ரமேஷ் குருக்கள் அவ்வளவு உதவி எங்களுக்கு தரிசனம் செய்து வைக்க. முதலில் விநாயகர், சிவனார், அம்பாள், செல்வமுத்துக்குமாரசுவாமி, மகாவிஷ்ணு, தாயார் ஹயக்ரீவர் எனும் அனைத்து சன்னதிகளிலும் சுவாமியின் பாதாரவிந்தங்களில் அழைப்பிதழை சமர்ப்பித்து வள்ளி முருகன் திருக்கல்யாண வைபவம் செவ்வனே நடைபெற அனைத்து அன்பர்கள் சார்பிலும் பிரார்த்தனைகளை சமர்ப்பணம் செய்தோம்.
சம்ரதாயப்படி அனைத்து அன்பர்கட்கும் இதோ அழைப்பிதழ் அனுப்புகிறோம். மகாப் புனிதம் தங்கும் செந்திலில் நடைபெற இருக்கும் இந்த திருக்கலியாண வைபவத்திற்கு அனைத்து அன்பர்களும் வந்திருந்து கலியாண சுபுத்திரனான அந்த வள்ளிமணாளப் பெருமாளின் திருவருளையும் நமது குருஜியின் ஆசீர்வாதங்களையும் பெற்று சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு, தகைமை சிவஞானம் முக்தி, பரகதியும் பெற்று வாழ பிரார்த்தனை செய்கிறோம்
எல்லா அன்பர்கட்கும் இவ்வழைபிதழ் கிடைக்கச் செய்ய இதை பெறும் ஒவ்வொரு அன்பரையும் சிரம் தாழ்த்தி வணங்கி விண்ணப்பம் செய்கிறோம்
அழைப்பிதழை ஆக்கித் தந்த கல்பாக்கம் அன்பர் திரு ஜெயராமனுக்கு நன்றி
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

No comments:
Post a Comment