Tuesday, 10 February 2015

வேல் வகுப்பு

       

முருகனின் ஆயுதமான வேலின் மகத்துவத்தைப்பற்றி விருத்தம் பகுதியில்  கீழ்க்கண்ட சில விளக்கங்களை   அறிந்தோம்

செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி
   திடர்அடைய நுகரும் வடிவேல்

குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள்
   குலையவிடு கொடியவேல் 

சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
   தனிஆண்மை கொண்ட நெடுவேல்

சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
   செம்பொற் றிருக்கை வேல் 

அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை
   அருந்திப் புரந்தவைவேல்

புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன்
   புங்கவன் செங்கை வேல் 

மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
   வகைவகையி னிற்சுழலும் வேல்

கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
   கணவன் அடல் கொண்ட வேல் 

முடிவிலா நந்த நல்கும் பதமளித்தெந்த
   மூதண்டமும் புகழும் வேல்

தனிநடம் புரி சமர முருகன் அறுமுகன்குகன்
   சரவணக் குமரன் வேல் 

தன்னைஅன் பொடு பாடி ஆடும ப்ரதாபமும்
   தலைமையும் பெற்ற வைவேல்

கூதாள மலரும் தொடுத்து அணியும் மார்பினன்
   கோலத் திருக்கை வேல் 

கநகாசலத்தைக் கடைந்து முனை யிட்டுக்
   கடுக்கின்ற துங்க நெடுவேல்

மதுமலர்க் கண்துயில் முகுந்தன் மருகன் குகன்
   வாகைத் திருக்கை வேல் 

உடைய கீரன்தனது பாடல்பெற் றுலகுதனில்
   ஒப்பில் புகழ்பெற்ற வைவேல்

தேவ நந்தனகஜா நந சகோதர குகன்
   செம்பொற்றிருக்கை வேல் .

நிபிடமுடி நெடியகிரி எந்தமைக்கா வனவும்
   நிகழ்கின்ற துங்கநெடுவேல்

சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன்
   சண்முகன் தன்கை வேல் 

வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல்
   உலாவிய நிலாவு கொலைவேல்

விலாழி இனில் ஆழி அகல் வானில் அனல் ஆரவிடு
   வேழம் இளைஞன் கை வேல் 

வேல் வகுப்பைப்பற்றி .

"வேல் வகுப்பு ஒளஷதம் போன்றது. ஒரு மருந்து நோய்களை தீர்ப்பது போல இந்த வகுப்பு புற நோயை நீக்கும். பிறவிப் பிணியை போக்கும். வேல் ஞானம் ஆதலால் அதைப் படிப்பவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து பேரின்ப வாழ்வைக் கொடுக்கும். முருகன் வேறு வேல் வேறு அல்ல. கந்தக் கடவுள் பவரோக வைத்தியநாதப் பெருமாள் ஆகையினால் வேலாயுதமும் பிறவியை அழிக்கும் பெரிய மருந்து என்பார் தணிகைமணி அவர்கள். மேலும் இவ்வகுப்பு 'ப' - வில் ஆரம்பித்து 'லே' - வில் முடிவதினால், இதை 'பலே' வகுப்பு என்பார் அவர்."



என்ற முன்னுரையுடன் ஆரம்பித்து ,பதம் பிரித்து அருமையாக விளக்கமளிக்கிறார் அருளாளர் திருப்புகழ் அடிமை நடராஜன் சார்..குரியீட்தை  க்ளிக்  செய்யவும். 

http://www.kaumaram.com/vaguppu/vgp03.html

இறை தொண்டாக வெளியிட்டுள்ள கௌமாரம் இணைய தளத்துக்கு தலை வணங்குகிறோம

முருகனும் ஒன்றுதான்.வேலும் ஒன்றுதான் .அதனுடன் நாமும் ஒன்றி துதிப்போம் 


குருஜியுடன் சேர்ந்து போற்றி துதிப்போம்:








 வகுப்பு தொடரும் 

முருகா சரணம்!

No comments:

Post a Comment