அமரர் A.S.சுப்ரமணிய ஐயர் நினைவு நாள் விழா நிறைவு
அமரர் A.S.சுப்ரமணிய ஐயர் நினைவு நாள் விழா நிறைவு
விழாவின் தொடக்கமாக பாலு சார் ,திருப்புகழுக்கு தன்னை அர்ப்பணித்த மஹான் சுப்ரமணிய ஐயர் தமது கடும் உழைப்பினால் திருப்புகழ் இயக்கத்தை மும்பையில் பரவச் செய்தார்.அவர் வழி வகுத்த வழிபாட்டு முறைகள் பூஜை முறைகள் கட்டுப்பாட்டு நெறிகள் இன்றளவும் அன்பர்களால் கடை பிடிக்கப்பட்டு தொடர்ந்து விமரிசையாக நடந்து வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று குறிப்பிட்டார்.
அன்னாரின் நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு அமைகிறது என்றும் அதை பெருமளவில் கொண்டாட அன்பர்கள் அனைவரும் ஈடுபட அழைப்பு விடுத்தார்.
விழாவுக்கு அன்னாரின் குடும்ப வாரிசுகள் பெரியவர்கள் முதல் குழைந்தைகள் வரை முழுமையாக கலந்து கொண்டனர்.வழிபாடுகளில் பொதுவாக அதிகம் இடம் பெறாத பாடல்கள் அன்றைய வழிபாட்டில் இடம் பிடித்தது சிறப்பு அம்சம்
இந்த சந்தர்ப்ப பத்தில் ,அருளாளர் அய்யப்பன் அருமையான கீழ்க்கண்ட செய்தியை அனுப்பியுள்ளார்.
"மும்பையில் , 07-08-2016 நமது குருஜியின் அண்ணாவின் (மாடுங்கா மாமா) நினைவு பஜன்"
விழாவுக்கு அன்னாரின் குடும்ப வாரிசுகள் பெரியவர்கள் முதல் குழைந்தைகள் வரை முழுமையாக கலந்து கொண்டனர்.வழிபாடுகளில் பொதுவாக அதிகம் இடம் பெறாத பாடல்கள் அன்றைய வழிபாட்டில் இடம் பிடித்தது சிறப்பு அம்சம்
இந்த சந்தர்ப்ப பத்தில் ,அருளாளர் அய்யப்பன் அருமையான கீழ்க்கண்ட செய்தியை அனுப்பியுள்ளார்.
"மும்பையில் , 07-08-2016 நமது குருஜியின் அண்ணாவின் (மாடுங்கா மாமா) நினைவு பஜன்"
"அன்பர்களே
திருப்புகழ் அன்பர்களின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்ட மஹானுபாவுலு பலர். பெங்களூருவில் ஒரு வெங்கடராமன் சார் என்றால் மும்பையில் இவர் நமது குருஜின் அண்ணா, மாடுங்கா மாமா என அன்போடு அழைக்கப்படுபவர். அவரை அன்பர்கள் மறக்கவே மாட்டார்கள். அத்தனைக்கு முக்கியமாக அன்று பஜனைகளையும் விழாக்களையும் நடத்தித் தந்தவர். அவர் இன்று நம்மோடு இல்லை தான். இருப்பினும் அன்னாரது எண்ணம் மட்டும் அன்பர்கள் உள்ளத்தில் நந்தா விளக்காக திருப்புகழ் ஒளியை பரப்பிக் கொண்டே இருக்கிறது. இருக்கும். திருப்புகழ் உள்ள வரை இவர்கள் பெயரும் நிலைத்திருக்கும்.
இந்த வீடியோவில் ராஜி மாமி அவர்கள் 18.03.1984 அன்று மும்பை சஞ்சீவினி பில்டிங்கில் நடந்த இசைவழிபாட்டில் பாடிக் கொடுத்த சுத்த தன்யாஸி ராகத்தில் திருவடியும் எனத் தொடங்கும் கந்தர் அலங்கார பாடலை விருத்தமாகப் பாடி அத்தோடு தலைவலயத்து எனத் தொடங்கும் காஞ்சிபுர திருப்புகழும் இடம் பெறுகிறது. கேட்கக் கேட்கத் தெவிட்டாத அமிர்தமாக இனித்துக் கொண்டே இருக்கிறது.
வாருங்கள் கேட்போம் பிரார்த்தனை செய்வோம்
காஞ்சி கவுரி கோட்டத்தில் சானித்தியமாக வீற்றிருந்து அருட் பாலிக்கும் கந்தப் பெருமாளே !
முதல் நிலையில் உள்ள புலவர்கள் பலரும் அடியேனை புகழ்ந்து போற்றவும், உனது மயிலையும், க்ரவுஞ்சத்தை பிளந்த சக்தி வேலையும் வெட்சி மலர்கள் சூடிய திருத் தோள்களையும், வள்ளி தேவசேனையையும் சிவந்த தமரை மலரனைய திருவடிகளையும் வைத்து பெரும் காவியங்களை இயற்ற வல்ல பெரும் புலவன் இவனே என போற்றவும், இவனே உண்மை ஞானத்தை அறிந்த தலவன் என்று புகழவும், சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ள தர்மங்களை செய்யும் சத் புருஷன் இவன் தான் எனும் பாராட்டைத் தரும் பிறப்பை அடியேன் பெற நீ அருள மாட்டாயா ???
மேலும் இவன் பொறுமையின் சிகரமானவன் என்றும், பொய்யான வழ்க்கையை வெறுத்து ஒதுக்கி விலகிப் போகும் தவசி இவன் என்றும், இவ்வுலகம் புகழ்வது ஆச்சரியம் ஒன்றும் இல்லை தான். அத்தகைய அறிவைத் தந்து அருள வேண்டும் ஐயா சரவணா ! , சண்முகா !! , வேலவா !!!
இப்படி கேட்ட நமது பரம குருநாதருக்கு, முருகன் என்னவெல்லாம் கொடுத்தான் என்பதை" ஆனாத ஞான புத்தியைக் கொடுத்ததும் "எனும் பாடலில் பட்டியலிடுகிறார் படியுங்கள் ப்ளீஸ்
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்"
அமரர் A.S.சுப்ரமணிய ஐயர் நினைவு நாள் விழா நிறைவு புகைப்படங்களும்,அருளாளர் அய்யப்பன் செய்தியும் அருமை!
ReplyDelete