குருஜியின் ஜெயந்தி விழா வைபவம் 2016 நிறைவு
நவி மும்பையில் நடைபெற்ற குருஜியின் ஜெயந்தி விழாவுக்கு மும்பையின் பல பாகங்களிலிருந்தும்,புனேவிலிருந்தும் அன்பர்கள் பெருமளவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு பெருமானின் அருளையும்,குருஜின் நல்லாசிகளையும் பெற்றார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ ?
வைபவத்தைதன் மனக்கண்களால்பார்த்து,மகிழ்ந்து,அனுபவித்து,பரவசமடைந்த அருளாளர் அய்யப்பன் கூற்றை கேட்போம் .அதுமட்டுமல்ல.வைபவத்தில் இடம் பெற்ற அருளாளர் ராஜி மாமியின் தோடி ராக கந்தர் அலங்கார விருத்தத்தையும்
திருப்புகழ் பாடலையும் U Tube வடிவத்தில் அளித்துள்ளார்.கேட்டு அனுபவிப்போம்.

முருகா சரணம்
அன்பர்களே,
நேற்று மும்பையில் , அன்பர்கள் , நமது குருஜியின் அவதார தினத்தை திருப்புகழ் இசை வழிபாடு செய்து அவரை நினைவு கூர்ந்துள்ளார்கள். நமது குருஜியின் அவதாரதினம் செப்டம்பர் மாதம் நாலாந்தேதியாகும்.. அவர் அவதரித்தது பார புகழும் பரணி நக்ஷத்திரத்தில். அன்று விடுமுறை தினமாக இருந்தால் அனைவரும் கலந்து கொள்ள வசதியாக இருக்குமே எனும் நோக்கில் அத்தினத்திற்கு முன்னோ பின்னோ வரும் ஒரு ஞாயிறு அன்று ஏற்பாடு செய்து , ,இசை வழிபாடு வாயிலாக அவரை தொழுதுள்ளார்கள். புனேயிலிருந்தும் பல அன்பர்கள் இவ்விசை வழிபாட்டில் கலந்துள்ளார்கள்.
இந்த வீடியோவில், நமது பெரு மதிப்பிற்குரிய ராஜி மாமி அவர்கள் தமக்கே உரிய இனிய குரலில் தோடி ராகத்தில் - மைவரும் கண்டத்தர் மைந்தா - எனத் தொடங்கும் கந்தர் அலங்கார பாடலை விருத்தமாகவும் - கறையிலங் - எனத்தொடங்கும் காஞ்சி திருப்புகழோடு இணைத்துப் பாடியுள்ளார்கள். இந்தத் திருப்புகழில் வரும் அருள் வேண்டல் நமது குருஜிக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.
அது ,
செழுமை மிக்க தமிழ்ப் பாக்களில் வரும் உனது திரு நாமாக்களை இசைத்து, , சிறிதும் குறையாத பக்தி பூண்டு, குற்றங்களை நீக்க வல்ல பொறுமை, சகிப்புத் தன்னை போன்ற நற்குணங்கள் பெருகி வர, கீழ்த் தரமான எண்ணங்களை விலக்கி, எனது தீய குணங்கள் என்னை விட்டு நீங்கி விட, ராஜச, தாமச குணங்கட்கு அப்பாலான சாத்வீக குணங்களை அடையப் பெற்று, எல்ல பந்த பாசங்களும் நீங்கி, இறைவனை அடைவது ஒன்றையே லட்சியமாகக் கொண்ட பரிசுத்தமான அடியார்கள் இருக்கும் திருக்கூட்டத்தில் ஞானாச்சார்யப் பதவி கிடைக்க நீ அருள வேண்டும் என்பதே அந்த வேண்டுதல்.
அன்பர்கள் விருத்தங்களைக் கேட்கும் போது, கவனத்தோடு சொல்லையும் அதன் பொருளையும் இணைத்து இசையில் லயித்து கேட்டால் அவ்விசை நம்மை நிச்சயமாக இறைவனின் திருவடிகளில் சேர்க்கும். பேரானந்தத்தைத் தரும். அந்த ஆனந்தத்தைஸ் சொல்லத் தெரியவில்லையே
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்
வைபவத்தின் சில புகைப்படங்கள்.
கோபுர தரிசனம்
முருகா சரணம் குருவே சரணம்
அருளாளர் அய்யப்பன் கூற்று அருமை!அருளாளர் ராஜி மாமியின் தோடி கோடி பெறும்.
ReplyDeleteவைபவத்தின் புகைப்படங்கள். கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன!