Saturday, 20 August 2016

குரு மஹிமை இசை கீரவாணி ராகம் பகுதி ....1


குரு மஹிமை  இசை  கீரவாணி  ராகம்   பகுதி ....1

                                               "இகல வரு திரை " என்று தொடங்கும் பாடல்

                                                                      திருமயிலை திருத்தலம்

இன்றைய கபாலீஸ்வரர் கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், அது  மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டிணமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது.
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகlilபல்லவர்காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார்.
பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசியர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். 
கடற்கரையிலிருந்து  1 கிலோமீட்டர்தொலைவில்அமைந்துள்ளஇன்றைய  கோயில் 
விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறிகிறோம்.

அருணகிரியார் இத்தலத்துக்கு 1540ல் வந்து தரிசித்துள்ளார்.
இத்தலம் வாயிலார் நாயனார் அவதாரத் தலம்.


மற்ற தகவல்களுக்கு 


இந்த பாடல் சற்று கடினமாக அமைந்துள்ளதால் பதம் பிரித்து பொருளுடன் அளிக்கிறோம்.

கௌமாரம் வலைத்தளத்துக்கு மிக்க நன்றி.

இகல வருதிரை பெருகிய சலநிதி ... மாறுபட்டு எழும் அலைகள்
பெருகிய கடல்கள்

நிலவும் உலகினில் இகமுறு பிறவியின் இனிமை பெற ...
சூழ்ந்த இவ்வுலகில் இம்மையிலுள்ள பிறப்பின் இன்பத்தைப் பெறவும்,

வரும் இடருறும் இருவினை யதுதீர ... வருகின்ற துன்பத்தோடு
மோதும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகள் நீங்கவும்

,இசையு முனதிரு பதமலர் தனை ... இணைந்த உன்னிரு பாதமலர்களை
மனமிசைய நினைகிலி ... மனம் பொருந்த நினையாதவன் யான்

இசையு முனதிரு பதமலர் தனை ... இணைந்த உன்னிரு பாதமலர்களை
மனமிசைய நினைகிலி ... மனம் பொருந்த நினையாதவன் யான்.இதமுற வுனதருள் இவர வுருகிலி ... இன்பமுற உன் திருவருள்கைகூட உருகித் துதியாதவன் யான்.
அயர்கிலி தொழுகிலி ... பக்தியால் தளர்ச்சி அடையாதவனும்,
கைகூட உருகித் துதியாதவன் யான்.
உமைபாகர் மகிழு மகவென அறைகிலி ... உமாதேவியைப்பாகத்தில் வைத்த சிவபிரான் மகிழ்கின்ற குழந்தையே என்று கூறாதவன்யான்.
நிறைகிலி மடமை குறைகிலி ... திருப்தியே இல்லாத, பேதைமைகுறையாதவன் யான்.
மதியுணர் வறிகிலி ... அறிவும், தெளிவும் அறியாதவன் யான்

.வசன மறவுறு மவுனமொடு உறைகிலி ... பேச்சற்றுப்போய் மெளனநிலையினில் இருக்காதவன் யான்.
மடமாதர் மயமது அடரிட ... அழகிய பெண்களின் மயக்கும்எழிலானது மனத்தில் இடம் பிடிக்க,
இடருறு மடியனும் ... அதனால் துன்பம் அடைகிற அடியேனும்,

இனிமை தருமுனது அடியவ ருடனுற மருவ ... இன்பத்தைநல்கும் உன் அடியார்களுடன் கூடிப் பொருந்தும்
அருள்தரு கிருபையின் மலிகுவ தொருநாளே ... திருவருளைத்தரும் உன் கிருபைக்கு ஆளாகும் ஒரு நாளும் கிடைக்குமோ?
சிகர தனகிரி குறமகள் இனிதுற ... உயர்ந்த மார்பினளானகுறப்பெண் வள்ளி இனிமை அடையுமாறு
சிலத நலமுறு சிலபல வசனமு ... தோழன் போன்று அவளிடம்நன்மைமிக்க சில பல வார்த்தைகளை
திறைய அறைபயில் அறுமுக ... அமுதமென அள்ளி வீசி, பேச்சுப்பயின்ற ஆறுமுக வேளே,
நிறைதரும் அருள் நீத ... நிறைந்து விளங்கும் அருள் கொண்டநீதிமானே,
சிரண புரண விதரண ... பெருமை நிறைந்த பூரண நிறைவே, தயாள
குணமுடையோனே,

விசிரவண சரணு சரவண பவகுக ... நிரம்பிய கேள்வி உடையவனே,அடைக்கலம் புகுதற்குரிய இறைவனே, சரவணப்பொய்கையில்தோன்றியவனே, குகனே,
சயனொளி திரவ பர ... சிவபிரானின் ஒளியின் சாரமே, பரனே,
உடையோனே, வேதத்தின் முடிவான பொருளாக விளங்கும் நீதியனே,
அகர உகரதி மகரதி சிகரதி ... அகரம் போன்ற முதற்பொருளே,உகர சிவசக்தியாக விளங்கும் நல்லறிவே, மமகாரமாகிய ஆணவத்தைத்தகிப்பவனே, சிவமாகிய தூய அறிவே,
யகர அருளதி தெருளதி ... யகரமாகிய ஜீவாத்மாவில் விளங்குபவனே,
அதிகமான அருளே, மிகுந்த ஞானமே

,வலவல அரண முரணுறும் ... மிகுந்த வல்லமை படைத்த காவற்கோட்டையில் இருந்த பகைமை பூண்ட
அசுரர்கள் கெடஅயில் விடுவோனே ... அசுரர்கள் அழியும்படிவேலைச் செலுத்தியவனே,
அழகும் இலகிய புலமையு மகிமையும் ... அழகும், விளங்கும் கல்விஞானமும், பெருமையும்,
வளமும் உறைதிரு மயிலையில் அநுதினம் ... செழிப்பும் நிலைத்தமயிலாப்பூரில் நாள் தோறும்
அமரும் அரகர சிவசுத அடியவர் பெருமாளே. ... வீற்றிருக்கும்,ஹர ஹர கோஷத்துக்கு உரியவருமான, சிவபிரானின் மைந்தனே,அடியவர்கள்தம் பெருமாளே.

                                                                                       பாடல் 
                                                       

                             "தசையாகிய கற்றையினால் " என்று தொடங்கும் பாடல்

                                                                                கருவூர் திருத்தலம் 

                                                                                    விளக்கவுரை 


"சதையின்திரளால்முழுமையும்தலைமுதல்கால்வரைஅலங்காரமாகவே அமையப்பெற்று,சஞ்சலம் என்பது கொஞ்சமேனும்ஒருநாள் கூடஇந்த உலகைவிட்டுநீங்காத (எப்போதும் தடுமாறும்) உடம்பை உடைய அடி நாயேன்அகங்காரத்தையும், பந்தங்களையும் விட்டுஞானத்தால் அறியப் பெறுகின்றபூரணமானதும், உருவம் இல்லாததும்ஆகியபரம்பொருளாம் கடவுள் தியானத்தைமேற்கொண்டு,அந்தஅனுபவ ஞானத்தில் என் சிந்தனை மாறாத வண்ணம் அப்படியசேர்ப்பித்து அருள் புரிவாயாக."

                                                                                 பாடல் 

                                                                             
               "ஆராதனர் ஆடம்பரத்தும் "என்று தொடங்கும்  பொதுப் பாடல்

                                                                      பாடலின் தத்துவம்

 "பூஜை செய்வோரது ஆடம்பரத்தோற்றத்தைக் கண்டும்,இடைவிடாது செய்யும் ஜபத்திலுள்ளஆசையினாலும்,தெய்வம் எழுந்தருளவேண்டிச் செய்யும் சிறந்த தகட்டு யந்திரங்களைக் கண்டும்,பதினாறுகால்கள் கொண்ட பெரிய மண்டபக் காட்சியாலும்,வேதம், ஆகமம் இவை முழங்கும்இடத்தைக் கண்டும்,யாகங்களுக்குவேண்டிய நெருப்பில் இடும் சமித்துக்களைக் கண்டும் பிரமித்துஅவற்றில் மயங்காமல்,
அடியார்களின்கண்ணீர் பெரிதாகப்பெருகும் அபிஷேகத்தைக் கொள்பவனே,"

"சிறப்புமிக்க ஓம் என்னும் தாரக மந்திரத்துக்கு உரியவனே,மலைகளுக்கு உரியவனே
,நீ என்றும் நான் என்றும் உள்ள த்வைதபாவம் நீங்க அத்வைத நிலையைப் பெறஅன்னியம் இல்லாமல்உறவோடு நீ வா என்று இங்கு நீ என்னை அழைத்துகடல் போன்று பெரிதான ஆனந்தநிலையையும்,உடனே பரமானந்தமாகியமுக்தி நிலையையும் தந்தருள வேண்டுகிறேன்."

                                                                                                                                                                     

கீரவாணி ராகம் தொடரும் 

முருகா சரணம்                                                                                    

                                       
                                                                                                                                              

1 comment:

  1. சீரும் சிறப்பும் கொடுக்கும் கீரவாணி ராகப் பாடல்கள்!

    ReplyDelete