அருணகிரிநாதர் நினைவு விழா 2016 நிறைவு
மும்பை,சென்னை,பெங்களூரு தலங்களில்
மும்பை
மும்பை செட்டா நகர் திருமுருகன் திருக்கோயிலில் காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 1.30 வரை ஆறுமணி கால அளவில் 108 திருப்புகழ் திருப்பாக்களை அன்பர்கள் பரவசத்துடன் இசைத்தனர்.வழிபாட்டில் பொதுவாக இடம் பெறாத அபூர்வ பாக்கள் அன்று பெருமளவில் இடம் பெற்றன.
குரு பாலு சார் இவ்வளவு பாக்கள் இசைத்தும் காலநேரம் கருதித்தான் முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது,இல்லையேல் இன்னும் இசைத்துக் கொண்டே இருக்கலாம் என்று தாபத்துடன் கூறினார்.அன்பர்களும் அதே மனோ பாவத்துடன் தான் இருந்தார்கள் என்பதுதான் உ ன்மை நிலை.
மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பல தலங்களில் உறையும் நம் பெருமானை இங்கு தன் கைவண்ணத்தில் எழுந்தருளச்செய்யும் அருளாளர் கோபால கிருஷ்ணனை மிகவும் பாராட்டி பெருமானின் அருளை மேன் மேலும் வேண்டினார்.
மற்றபகுதிகளில்வழிபாட்டில்பெருமளவில் மழலைகள் இளம் பிராயத்தினர் கலந்து கொள்ளும் போது ., மும்பை வழிபாட்டில் ஈடுபடாதது பெரும் குறையாகவே இருந்தது. பெருமானின் அருளால் இக்குறை வரும் வழிபாடுகளில் தீரும்என்று நம்புவோம்.
சில புகைப்பட காட்சிகள் .
திருச்செம்பூர் திருமுருகன் திருக் கோயில்
அருளாளர் கோபால கிருஷ்ணன் கைவண்ணத்தில் எழுந்தருளிய பழனி /மயிலம் தலங்களின் உத்சவ மூர்த்திகள் ஒன்றாக ஜகஜ்ஜோதி பெருமானாக எழுந்தருளிய காட்சி
அருணகிரிக்கு குக்குட தீட்சை அருளிய முருகப் பெருமான்
தலை நாளில் பதமேற்றி அன்போடு உபதேசப் பொருளூட்டி மந்திர தபஞான கடலாட்டி என்றனை உன் அருளாலே

வழக்கம்போல் அருளாளர் ஐயப்பன் அனுப்பியுள்ள செய்தி
முருகா சரணம்
முருகா சரணம்
அன்பர்களே
இதோ மும்பை நகரில், அங்குள்ள செட்டாநகர் முருகன் கோவிலில் இன்று நடந்த அருணகிரி நாதர் விழாவின் போட்டோக்களும் மாமியிம் காம்போதி ராக விருத்தமும் உடுக்கத் துகில் பாடலும். நண்பர் கேஆர்பி அவர்களுக்கு நன்றிகள் பலகோடி.. இந்த பாடலை மாமி கோவையில் வைத்து பாடிக் கொடுத்தது. இன்றைய ரிக்கார்டிங்க் இனிமேல் தான் தயராக் வேண்டும். திருவாவினங்குடி குமரனை தத்துரூபமாக மும்பைக்கு அழைத்து அமர செய்து விட்டனர் அங்குள்ள அன்பர்கள்.
இன்று சென்னையில் அமைந்த இசைவழிபாடு ஆனந்த சாகரத்தில் நீந்தி அனுபவிக்கச் செய்தது .அன்பர்களை . இசை வழிபாட்டை உமாபலசுப்ரமணியன் அம்மா ஆரம்பித்தார்கள். குருஜி காட்டிய வழியில் சென்றதால் பஜனை சிறப்பாக இருந்தது அனைத்து அன்பர்களும் ராக தாள சுருதி லயம் தப்பாமல் பாடினார்கள்
இந்த வழிபாட்டிற்கு சிகரம் வைத்தார்ப் போல் 20-30 குழந்தைகள் அவ்வளவு பிரமாதமாகப் பாடினார்கள். வரும் காலம் குழந்தைகளுடையது தான். அவர்கள் வளமோடு சகல செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும். அதற்கு இந்த முயற்சி முழு பயன் அளிக்க நமது குருஜி நிச்சயம் அருள்வார்.
சில புகைப்படங்கள்
பெங்களூரு
(அருளாளர்கள் வசந்தா பஞ்சாபகேசன் ,அய்யப்பன் )
பெங்களூருவில் அருணகிரி நாதரின் நினைவு விழாவை மூன்று தினங்கள் கொண்டாடியுள்ளனர். அதில் மழலைச் செல்வங்கள் தத்தம் கொஞ்சும் மொழிகளில் திருப்புகழ் பாடியுள்ளனர். வருங்காலம் குழந்தைகளுடையது. ஆகையால் அவர்கள் மனதில் இந்த திருப்புகழ் விதைகளை விதைத்து விட்டோமேயானல் அது பெரிய விருட்சமாகி தன் நிழலால் இந்த உலகிற்கே அமைதியும் நல்வாழ்வையும் கொடுக்கும்.. நமது குருஜி நம்மை ஆசீர்வத்துக் கொண்டே இருப்பார்.
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்
மழலைகளின் சமர்ப்பணம்
மழலைகளின் சமர்ப்பணம்
https://youtu.be/fNlnQgHlgsI
கொசுறு
சிதம்பரத்தில் தேசியகொடி வழிபாடு
(அருளாளர் அய்யப்பன் )
சிதம்பரத்தில் , ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் , நமது தேசியக்கொடியை ஒரு வெள்ளி தாம்பாளத்தில் வைத்து நடராஜப் பெருமானின் திருமுன் வைத்து ப்ரத்யேக பூஜை புரஸ்காரங்கள் சிறப்பாக செய்து பின்னர் கிழக்குக் கோபுர வாசலுக்கு கொணர்ந்து கம்பத்தில் ஏற்றி கொடி பூஜையை முடிப்பார்களாம்.லோகச் சேமத்திற்காக செய்யப்படும் பூஜா புரஸ்காரங்களில் இதும் ஒரு தனி வகை எனத் தான் கொள்ள வேண்டும்.

அழகு அழகு அழகு முருகன் அழகு! அருணகிரிநாதர் நினைவு விழா 2016 நிறைவு புகைப்பட காட்சிகள் .அத்தனையும் அழகு!
ReplyDelete