குரு மஹிமை இசை கீரவாணி ராகம் பகுதி ....2
"இகல வரு திரை " பாடல் மீண்டும்
"உததியறல் கொண்டு " என்று தொடங்கும் பாடல்
திருச்செந்தூர் திருத்தலம்
அருணகிரியாரின் இறைஞ்சல்
கடலின் நீரை மொண்டுகுடித்துக் கருக் கொண்டகரிய மேகம் போல இருண்ட நீல நிறம் மிகுத்த ஒளி வீசும், வாசனைநிறைந்த கூந்தல் நரைத்து பஞ்சு போல் வெளுத்ததாய், இரத்த ஓட்டம்நிறைந்து, பரிசுத்தமான வேல் போன்ற விழிக்கடைகளில் நெருங்கி,துர் நாற்றம் கொண்ட தயிர்த்துளிகள் சிதறினவோ என்று சொல்லும்படி கொடிய மாமிச நாற்றம் உடையதாய்,
மதநீர் பாயும் சுவடுகொண்ட யானையின் வாயில் சொருகியுள்ள பிறைச் சந்திரனைப் போன்றவடிவம் உடைய தந்தங்களில் செய்யப்பட்ட சூதாடு பகடைகளின்வடிவு கொண்டனவாய் குடங்களைத் தகர்த்துவளர்ந்த மார்பகங்கள் வெறும் தோலாய்,அழகு குலைந்து போன மங்கையர்களான விலைமாதர்களுடையஅழகின் நிலையாமை நிலையை உணர்ந்து,
உனதுதிருவடியையே சிந்தனை செய்யும் ,
வழி அடிமையாகிய நான்அன்பு வளரும் அந்த வழியையே நினைக்க மாட்டேனோ?
"சீரான கோலாகலன்" என்று தொடங்கும் பாடல்
விராலிமலை திருத்தலம்
அருணகிரியாரின் வேண்டல்
ஒவ்வொரு "மகுடங்களிலும் " நாமும் வேண்டுகிறோம்
வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற
பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும்,
பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு
முகங்களையும்,சிறப்பு உற்றுஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு தோள்களையும்,நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடிரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும், முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம்மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடையஅழகிய பெண்ணாகிய தேவயானையும்,பக்தர்களின்
பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும், இடது பாகத்திலும்
உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும், நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும்உனது வேலையும் மயிலையும், ஞான ஸ்வரூபியான
கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும், மிகக்
கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும் மேற்சொன்ன
அனைத்தையும்தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற
வேண்டுகிறேன்.
"நித்தப் பிணிகொடு"என்று தொடங்கும் பாடல்
கருவூர் திருத்தலம்
நாள்தோறும்நோய்களுடன் கூடியது இவ்வுடலாகும்.இது நீர், மண்,
காற்றுடன், நெருப்பும், உள்ளதான பொலிவுள்ள ஆகாயம் எனப்படும்
ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டாகித் தோன்றி நிற்பதாகும்.
உலகத்தை எல்லாம் ஆளவேண்டும், விண்ணவர் இருக்கும்
இடத்தையும் கொள்ளவேண்டும் என்று ஆசை கொண்டு அதற்காக
எங்கும் ஓடி அலையும். செருக்குடன் அணி கலன்களையும் ஆடைகளையும்
அணிந்து "நான்" என்கின்ற முட்டாள்தனமான அகங்காரத்துடன்
ஏமாற்றித் திரியும். இது ஒருபோதும் பொய்யாகாமல்
நிலைத்திருக்கும் என்று திடமாக நினைத்து, தெளிவான உண்மையை
உணராமல் மெய்ஞ்ஞானத்தை விரும்ப அறியாமல் பொய்யான உலக
மாயைகளில் அலைச்சல் உறுகின்ற என்னை, தந்திரமாகவாவது ஆட்கொண்டு,உன் அடியார்களுடன் என்னைக் கொண்டு சேர்ப்பித்து, உன்
திருவருளால் சிறந்த ஞான அமுதத்தைத் தந்து திருவடியாகிய சிறந்தவாழ்வை நான் அடையும்படி இனிதே ஆண்டருள்வாயாக.
முருகா சரணம்
மனதைப் பக்தியினால் ஈர்க்கும் கீரவாணி ராகப் பாடல்கள்!
ReplyDelete