Tuesday, 30 August 2016

குரு மஹிமை இசை.... வசந்தா ராகம்



                                                       குரு மஹிமை  இசை....  வசந்தா  ராகம் 

                                                           "இருப்பவல் "என்று தொடங்கும் பாடல்

                                                                        திருத்தணிகை திருத்தலம் 

                                                 பாடலின் பொருள்மற்றும் விளக்க உரை யும் 

                                         http://thiruppugazhamirutham.blogspot.in/2012/10/116.html



                                                                                                           

                                                    "பகர்தற்கு அரிதான "  என்று தொடங்கும் பாடல்

                                                                                 பழநி  திருத்தலம் 


                                                          பாடலின் பொருள்மற்றும் விளக்க உரை 

                                                 http/thiruppugazhamirutham.blogspot.in/2012/09/81.html



 

                                                       "குகனே குருபர "  என்று தொடங்கும் பாடல்

                                                                              சிதம்பரம் திருத்தலம் 
                                                            பாடலின் பொருள்மற்றும் விளக்க உரை 

                                                     http://www.kaumaram.com/thiru/nnt0452_u.html



                                                                                                           
                                                "இருந்த வீடும் "  என்று தொடங்கும்  பொதுப் பாடல் 

                                                              பாடலின் பொருள்மற்றும் விளக்க உரை 

                                                      http://www.kaumaram.com/thiru/nnt1072_u.html

                                                        கௌமாரம்  இணைய தளத்துக்கு நன்றிகள்


                                                                                                                                                                           
                                      "சரியையாளருக்கும் " என்று தொடங்கும் பாடல்

"இறைவனை வழிபடுபவர்கள் சரியையாளர்கள் அவர்கள் இறைவனை தாச மார்க்கம்,சத்புத்திர மார்க்கம்,யோக மார்க்கம்,ஞான மார்க்கம் மூலமாக அடைகிறார்கள்.அப்படி அடையப்படும்  முக்தி முறையே சாலோபம் சாமீபம் ,சாரூபம் சாயுச்சியம் என பெயரிட்டு அழைக்கப்படுகிறது."என்று பலவாறாக விளக்குகிறார்கள் அருளாளர்கள் சாந்தா ராஜன் தங்கள் வலைத்தளத்தில்.  


http://thiruppugazhamirutham.blogspot.in/2012/11/154.html




                                                                                                                                                                                                                                                          முருகா சரணம்                                                              .                       

Monday, 29 August 2016

குருஜியின் ஜெயந்தி விழா வைபவம் 2016 நிறைவு



                                    குருஜியின் ஜெயந்தி விழா வைபவம் 2016  நிறைவு   


நவி மும்பையில் நடைபெற்ற குருஜியின் ஜெயந்தி விழாவுக்கு மும்பையின் பல பாகங்களிலிருந்தும்,புனேவிலிருந்தும் அன்பர்கள் பெருமளவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு பெருமானின் அருளையும்,குருஜின் நல்லாசிகளையும் பெற்றார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ ?

வைபவத்தைதன் மனக்கண்களால்பார்த்து,மகிழ்ந்து,அனுபவித்து,பரவசமடைந்த அருளாளர் அய்யப்பன் கூற்றை கேட்போம்  .அதுமட்டுமல்ல.வைபவத்தில் இடம் பெற்ற அருளாளர் ராஜி மாமியின் தோடி ராக கந்தர் அலங்கார விருத்தத்தையும் 
திருப்புகழ் பாடலையும் U Tube வடிவத்தில் அளித்துள்ளார்.கேட்டு அனுபவிப்போம்.


முருகா சரணம்
அன்பர்களே,

நேற்று மும்பையில் , அன்பர்கள் , நமது குருஜியின் அவதார  தினத்தை திருப்புகழ் இசை வழிபாடு செய்து அவரை நினைவு கூர்ந்துள்ளார்கள். நமது குருஜியின் அவதாரதினம் செப்டம்பர் மாதம் நாலாந்தேதியாகும்.. அவர் அவதரித்தது பார புகழும் பரணி நக்ஷத்திரத்தில்.  அன்று விடுமுறை தினமாக இருந்தால் அனைவரும் கலந்து கொள்ள வசதியாக இருக்குமே எனும் நோக்கில் அத்தினத்திற்கு முன்னோ பின்னோ வரும் ஒரு ஞாயிறு அன்று ஏற்பாடு செய்து ,  ,இசை வழிபாடு வாயிலாக அவரை தொழுதுள்ளார்கள். புனேயிலிருந்தும் பல அன்பர்கள் இவ்விசை வழிபாட்டில் கலந்துள்ளார்கள்.

இந்த வீடியோவில், நமது பெரு மதிப்பிற்குரிய ராஜி மாமி அவர்கள் தமக்கே உரிய இனிய குரலில் தோடி ராகத்தில் - மைவரும் கண்டத்தர் மைந்தா - எனத் தொடங்கும் கந்தர் அலங்கார பாடலை விருத்தமாகவும் - கறையிலங் - எனத்தொடங்கும் காஞ்சி திருப்புகழோடு இணைத்துப்  பாடியுள்ளார்கள். இந்தத் திருப்புகழில் வரும் அருள் வேண்டல் நமது குருஜிக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.
அது  ,
செழுமை மிக்க தமிழ்ப் பாக்களில் வரும் உனது திரு நாமாக்களை  இசைத்து, , சிறிதும் குறையாத பக்தி பூண்டு, குற்றங்களை நீக்க வல்ல பொறுமை, சகிப்புத் தன்னை போன்ற நற்குணங்கள் பெருகி வர, கீழ்த் தரமான எண்ணங்களை விலக்கி, எனது தீய குணங்கள் என்னை விட்டு நீங்கி விட, ராஜச, தாமச குணங்கட்கு அப்பாலான சாத்வீக குணங்களை அடையப் பெற்று, எல்ல பந்த பாசங்களும் நீங்கி, இறைவனை அடைவது ஒன்றையே லட்சியமாகக் கொண்ட பரிசுத்தமான அடியார்கள் இருக்கும் திருக்கூட்டத்தில் ஞானாச்சார்யப் பதவி கிடைக்க நீ அருள வேண்டும் என்பதே அந்த வேண்டுதல்.

அன்பர்கள் விருத்தங்களைக் கேட்கும் போது, கவனத்தோடு சொல்லையும் அதன் பொருளையும் இணைத்து இசையில் லயித்து கேட்டால் அவ்விசை நம்மை நிச்சயமாக இறைவனின் திருவடிகளில் சேர்க்கும். பேரானந்தத்தைத் தரும். அந்த ஆனந்தத்தைஸ் சொல்லத் தெரியவில்லையே

முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்





வைபவத்தின் சில புகைப்படங்கள்.

                                                                        

                                                                                                                                          
                                                                                                                                                                                                              
                                                             கோபுர தரிசனம்



                                                                                                              










                                         







                                                    
             

                                            முருகா சரணம் குருவே சரணம்                                                                       
                         

                                                                                                         


                                         

Friday, 26 August 2016

குரு மஹிமை இசை.... லதாங்கி ராகம்



                                                         குரு மஹிமை  இசை....  லதாங்கி ராகம்   

                                              மக்கட்குக் கூறரிதானது "  என்று தொடங்கும் பாடல்

                                                                                காஞ்சிபுரம்   திருத்தலம்


                                                                                                           

                                                                                                             
                                      மீண்டும் விருத்தத்துடன் அன்பர்களின் சமர்ப்பணம்

                                               https://www.youtube.com/watch?v=ktAShJtUF7A



                                       "தரையினில் வெகுவழி "  என்று தொடங்கும் பாடல்

                                                                     கூந்தலூர் திருத்தலம்

இத்தலம்  கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நாச்சியார் கோயிலிலிருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் உள்ளது. இனி இத்தலத்து பெருமையையும், திருப்புகழையும் அதன்  பொருளையும் காண்போம்.





                                "கிறிமொழி கிருதரை " 
 என்று தொடங்கும் பாடல் 

                                                                        திருத்தணிகை திருத்தலம் 

                                            பாடலின் பொருளுக்கும் மற்ற தகவல்களுக்கும் 

                                            திருப்புகழ் அம்ருதம்  வலைத்தளத்துக்கு நன்றி 

                             http://thiruppugazhamirutham.blogspot.in/2012/10/129.html



                                                                               
                                                                              
                                                               முருகா சரணம் 








                                                                              

Tuesday, 23 August 2016

குரு மஹிமை இசை கீரவாணி ராகம் பகுதி ....2



                                       குரு மஹிமை  இசை  கீரவாணி  ராகம்   பகுதி ....2

                                                        "இகல  வரு திரை " பாடல் மீண்டும் 


                                                                                                                                                                                                                                                                                                                       
                                                                                                           

                                             "உததியறல்  கொண்டு "   என்று தொடங்கும் பாடல்

                                                                            திருச்செந்தூர் திருத்தலம்  

                                                                    அருணகிரியாரின் இறைஞ்சல் 

கடலின் நீரை மொண்டுகுடித்துக் கருக் கொண்டகரிய மேகம் போல இருண்ட நீல நிறம் மிகுத்த ஒளி வீசும், வாசனைநிறைந்த கூந்தல் நரைத்து பஞ்சு போல் வெளுத்ததாய், இரத்த ஓட்டம்நிறைந்து, பரிசுத்தமான வேல் போன்ற விழிக்கடைகளில் நெருங்கி,துர் நாற்றம் கொண்ட தயிர்த்துளிகள் சிதறினவோ என்று சொல்லும்படி கொடிய மாமிச நாற்றம் உடையதாய்,
மதநீர் பாயும் சுவடுகொண்ட யானையின் வாயில் சொருகியுள்ள பிறைச் சந்திரனைப் போன்றவடிவம் உடைய தந்தங்களில் செய்யப்பட்ட சூதாடு பகடைகளின்வடிவு கொண்டனவாய் குடங்களைத் தகர்த்துவளர்ந்த மார்பகங்கள் வெறும் தோலாய்,அழகு குலைந்து போன மங்கையர்களான விலைமாதர்களுடையஅழகின் நிலையாமை நிலையை உணர்ந்து,
உனதுதிருவடியையே சிந்தனை செய்யும் , 

வழி அடிமையாகிய நான்அன்பு வளரும் அந்த வழியையே நினைக்க மாட்டேனோ?


                                            



                                            "சீரான கோலாகலன்" என்று தொடங்கும் பாடல்

                                                                  விராலிமலை திருத்தலம்

                                                           அருணகிரியாரின் வேண்டல் 

                          ஒவ்வொரு "மகுடங்களிலும்  " நாமும் வேண்டுகிறோம் 

வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற
பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும்,
பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு
முகங்களையும்,சிறப்பு உற்றுஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு தோள்களையும்,நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடிரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும், முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம்மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடையஅழகிய பெண்ணாகிய தேவயானையும்,பக்தர்களின்
பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும், இடது பாகத்திலும்
உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும், நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும்உனது வேலையும் மயிலையும், ஞான ஸ்வரூபியான
கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும், மிகக்
கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும் மேற்சொன்ன
அனைத்தையும்தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற
வேண்டுகிறேன்.



                                                                                                          


                "நித்தப் பிணிகொடு"என்று தொடங்கும் பாடல்

                                                                   கருவூர் திருத்தலம்   

நாள்தோறும்நோய்களுடன் கூடியது இவ்வுடலாகும்.இது நீர், மண்,
காற்றுடன், நெருப்பும், உள்ளதான பொலிவுள்ள ஆகாயம் எனப்படும்
ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டாகித் தோன்றி நிற்பதாகும்.
 உலகத்தை எல்லாம் ஆளவேண்டும், விண்ணவர் இருக்கும்
இடத்தையும் கொள்ளவேண்டும் என்று ஆசை கொண்டு அதற்காக
எங்கும் ஓடி அலையும். செருக்குடன் அணி கலன்களையும் ஆடைகளையும்
அணிந்து "நான்" என்கின்ற முட்டாள்தனமான அகங்காரத்துடன்
ஏமாற்றித் திரியும். இது  ஒருபோதும் பொய்யாகாமல்
நிலைத்திருக்கும் என்று திடமாக நினைத்து, தெளிவான உண்மையை
உணராமல் மெய்ஞ்ஞானத்தை விரும்ப அறியாமல் பொய்யான உலக
மாயைகளில் அலைச்சல் உறுகின்ற என்னை, தந்திரமாகவாவது ஆட்கொண்டு,உன் அடியார்களுடன் என்னைக் கொண்டு சேர்ப்பித்து, உன்
திருவருளால் சிறந்த ஞான அமுதத்தைத் தந்து திருவடியாகிய சிறந்த
வாழ்வை நான் அடையும்படி இனிதே ஆண்டருள்வாயாக. 




                                                                                                                     


                                                            முருகா   சரணம்                                                             
                                                                                                                                                                                                 
                         
                                                                                                                                                                               


                                                                             

                                                                                       

Monday, 22 August 2016



                                                  குருஜியின் ஜெயந்தி விழா வைபவம் 2016

                                                                                                       


                                                                                                      

                                                                                                     
வழக்கம் போல் குருஜியின் ஜெயந்தி விழா வைபவம் இந்த ஆண்டு 28 AUGUST 2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 அளவில் பூஜா விதிகளுடன் தொடங்கி இசைவழிபாட்டுடன் நடை பெற உள்ளது.

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது
                                                                                                     



அன்பர்கள்  பெருமளவில் கலந்து கொண்டு  நம் பெருமானின் அருளையும் குருஜியின் ஆசிகளையும் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

முருகா சரணம் 

Saturday, 20 August 2016

குரு மஹிமை இசை கீரவாணி ராகம் பகுதி ....1


குரு மஹிமை  இசை  கீரவாணி  ராகம்   பகுதி ....1

                                               "இகல வரு திரை " என்று தொடங்கும் பாடல்

                                                                      திருமயிலை திருத்தலம்

இன்றைய கபாலீஸ்வரர் கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், அது  மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டிணமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது.
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகlilபல்லவர்காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார்.
பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசியர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். 
கடற்கரையிலிருந்து  1 கிலோமீட்டர்தொலைவில்அமைந்துள்ளஇன்றைய  கோயில் 
விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறிகிறோம்.

அருணகிரியார் இத்தலத்துக்கு 1540ல் வந்து தரிசித்துள்ளார்.
இத்தலம் வாயிலார் நாயனார் அவதாரத் தலம்.


மற்ற தகவல்களுக்கு 


இந்த பாடல் சற்று கடினமாக அமைந்துள்ளதால் பதம் பிரித்து பொருளுடன் அளிக்கிறோம்.

கௌமாரம் வலைத்தளத்துக்கு மிக்க நன்றி.

இகல வருதிரை பெருகிய சலநிதி ... மாறுபட்டு எழும் அலைகள்
பெருகிய கடல்கள்

நிலவும் உலகினில் இகமுறு பிறவியின் இனிமை பெற ...
சூழ்ந்த இவ்வுலகில் இம்மையிலுள்ள பிறப்பின் இன்பத்தைப் பெறவும்,

வரும் இடருறும் இருவினை யதுதீர ... வருகின்ற துன்பத்தோடு
மோதும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகள் நீங்கவும்

,இசையு முனதிரு பதமலர் தனை ... இணைந்த உன்னிரு பாதமலர்களை
மனமிசைய நினைகிலி ... மனம் பொருந்த நினையாதவன் யான்

இசையு முனதிரு பதமலர் தனை ... இணைந்த உன்னிரு பாதமலர்களை
மனமிசைய நினைகிலி ... மனம் பொருந்த நினையாதவன் யான்.இதமுற வுனதருள் இவர வுருகிலி ... இன்பமுற உன் திருவருள்கைகூட உருகித் துதியாதவன் யான்.
அயர்கிலி தொழுகிலி ... பக்தியால் தளர்ச்சி அடையாதவனும்,
கைகூட உருகித் துதியாதவன் யான்.
உமைபாகர் மகிழு மகவென அறைகிலி ... உமாதேவியைப்பாகத்தில் வைத்த சிவபிரான் மகிழ்கின்ற குழந்தையே என்று கூறாதவன்யான்.
நிறைகிலி மடமை குறைகிலி ... திருப்தியே இல்லாத, பேதைமைகுறையாதவன் யான்.
மதியுணர் வறிகிலி ... அறிவும், தெளிவும் அறியாதவன் யான்

.வசன மறவுறு மவுனமொடு உறைகிலி ... பேச்சற்றுப்போய் மெளனநிலையினில் இருக்காதவன் யான்.
மடமாதர் மயமது அடரிட ... அழகிய பெண்களின் மயக்கும்எழிலானது மனத்தில் இடம் பிடிக்க,
இடருறு மடியனும் ... அதனால் துன்பம் அடைகிற அடியேனும்,

இனிமை தருமுனது அடியவ ருடனுற மருவ ... இன்பத்தைநல்கும் உன் அடியார்களுடன் கூடிப் பொருந்தும்
அருள்தரு கிருபையின் மலிகுவ தொருநாளே ... திருவருளைத்தரும் உன் கிருபைக்கு ஆளாகும் ஒரு நாளும் கிடைக்குமோ?
சிகர தனகிரி குறமகள் இனிதுற ... உயர்ந்த மார்பினளானகுறப்பெண் வள்ளி இனிமை அடையுமாறு
சிலத நலமுறு சிலபல வசனமு ... தோழன் போன்று அவளிடம்நன்மைமிக்க சில பல வார்த்தைகளை
திறைய அறைபயில் அறுமுக ... அமுதமென அள்ளி வீசி, பேச்சுப்பயின்ற ஆறுமுக வேளே,
நிறைதரும் அருள் நீத ... நிறைந்து விளங்கும் அருள் கொண்டநீதிமானே,
சிரண புரண விதரண ... பெருமை நிறைந்த பூரண நிறைவே, தயாள
குணமுடையோனே,

விசிரவண சரணு சரவண பவகுக ... நிரம்பிய கேள்வி உடையவனே,அடைக்கலம் புகுதற்குரிய இறைவனே, சரவணப்பொய்கையில்தோன்றியவனே, குகனே,
சயனொளி திரவ பர ... சிவபிரானின் ஒளியின் சாரமே, பரனே,
உடையோனே, வேதத்தின் முடிவான பொருளாக விளங்கும் நீதியனே,
அகர உகரதி மகரதி சிகரதி ... அகரம் போன்ற முதற்பொருளே,உகர சிவசக்தியாக விளங்கும் நல்லறிவே, மமகாரமாகிய ஆணவத்தைத்தகிப்பவனே, சிவமாகிய தூய அறிவே,
யகர அருளதி தெருளதி ... யகரமாகிய ஜீவாத்மாவில் விளங்குபவனே,
அதிகமான அருளே, மிகுந்த ஞானமே

,வலவல அரண முரணுறும் ... மிகுந்த வல்லமை படைத்த காவற்கோட்டையில் இருந்த பகைமை பூண்ட
அசுரர்கள் கெடஅயில் விடுவோனே ... அசுரர்கள் அழியும்படிவேலைச் செலுத்தியவனே,
அழகும் இலகிய புலமையு மகிமையும் ... அழகும், விளங்கும் கல்விஞானமும், பெருமையும்,
வளமும் உறைதிரு மயிலையில் அநுதினம் ... செழிப்பும் நிலைத்தமயிலாப்பூரில் நாள் தோறும்
அமரும் அரகர சிவசுத அடியவர் பெருமாளே. ... வீற்றிருக்கும்,ஹர ஹர கோஷத்துக்கு உரியவருமான, சிவபிரானின் மைந்தனே,அடியவர்கள்தம் பெருமாளே.

                                                                                       பாடல் 
                                                       

                             "தசையாகிய கற்றையினால் " என்று தொடங்கும் பாடல்

                                                                                கருவூர் திருத்தலம் 

                                                                                    விளக்கவுரை 


"சதையின்திரளால்முழுமையும்தலைமுதல்கால்வரைஅலங்காரமாகவே அமையப்பெற்று,சஞ்சலம் என்பது கொஞ்சமேனும்ஒருநாள் கூடஇந்த உலகைவிட்டுநீங்காத (எப்போதும் தடுமாறும்) உடம்பை உடைய அடி நாயேன்அகங்காரத்தையும், பந்தங்களையும் விட்டுஞானத்தால் அறியப் பெறுகின்றபூரணமானதும், உருவம் இல்லாததும்ஆகியபரம்பொருளாம் கடவுள் தியானத்தைமேற்கொண்டு,அந்தஅனுபவ ஞானத்தில் என் சிந்தனை மாறாத வண்ணம் அப்படியசேர்ப்பித்து அருள் புரிவாயாக."

                                                                                 பாடல் 

                                                                             
               "ஆராதனர் ஆடம்பரத்தும் "என்று தொடங்கும்  பொதுப் பாடல்

                                                                      பாடலின் தத்துவம்

 "பூஜை செய்வோரது ஆடம்பரத்தோற்றத்தைக் கண்டும்,இடைவிடாது செய்யும் ஜபத்திலுள்ளஆசையினாலும்,தெய்வம் எழுந்தருளவேண்டிச் செய்யும் சிறந்த தகட்டு யந்திரங்களைக் கண்டும்,பதினாறுகால்கள் கொண்ட பெரிய மண்டபக் காட்சியாலும்,வேதம், ஆகமம் இவை முழங்கும்இடத்தைக் கண்டும்,யாகங்களுக்குவேண்டிய நெருப்பில் இடும் சமித்துக்களைக் கண்டும் பிரமித்துஅவற்றில் மயங்காமல்,
அடியார்களின்கண்ணீர் பெரிதாகப்பெருகும் அபிஷேகத்தைக் கொள்பவனே,"

"சிறப்புமிக்க ஓம் என்னும் தாரக மந்திரத்துக்கு உரியவனே,மலைகளுக்கு உரியவனே
,நீ என்றும் நான் என்றும் உள்ள த்வைதபாவம் நீங்க அத்வைத நிலையைப் பெறஅன்னியம் இல்லாமல்உறவோடு நீ வா என்று இங்கு நீ என்னை அழைத்துகடல் போன்று பெரிதான ஆனந்தநிலையையும்,உடனே பரமானந்தமாகியமுக்தி நிலையையும் தந்தருள வேண்டுகிறேன்."

                                                                                                                                                                     

கீரவாணி ராகம் தொடரும் 

முருகா சரணம்