குருஜி ஜெயந்தி வைபவம் நிறைவு
இசைவழிபாட்டுக்கு மும்பையின் பல பகுதிகளில் இருந்தும்,புனேயிலிருந்து 20 க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்டது கோயில் நிர்வாகிகளுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது என்பதில் சந்தேகமில்லை.அவர்கள் அன்பர்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளும் செய்திருந்தார்கள்.
குரு பாலு சார் முதல் தினம் கிருஷ்ண ஜெயந்தியும்,அன்று பெருமானின் அருளால் குருஜியின் ஜெயந்தியும் அமைந்தது மிகவும் பொருத்தமானது என்று சிலாகித்தார் .அதற்கு ஏற்ப அன்றைய பாடல்களும் அமைந்தன,மற்றும் பாடிய விருத்தங்களும்,பாடல்களும் குருஜியைப்போற்றும் வண்ணம் அமைந்தன.
கோயில் நிர்வாகி பாலு சார் தம்பதிகளை கௌரவித்த பின் ,தாங்கள் பல ஆன்மீக விழாக்களையும்கலாநிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் ,எந்த இடர்ப்பாடு நேரிட்டாலும் அவைகள் தடைப்படாது என்றும்,அதற்காக பக்தர்கள் இயன்றஅளவு பொருளுதவி,மற்ற உதவிகளையும் செய்ய வேண்டினார்.நாங்களும் அதை வழி மொழி செய்கிறோம்
வைபவத்தின் சில புகைப்படக் காட்சிகள்.
முருகா சரணம்
குருஜி ஜெயந்தி வைபவம் புகைப்படக் காட்சிகள் நேரில் களைந்து கொண்ட திருப்தியை கொடுக்கின்றன. அன்பர்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளும் செய்திருந்த கோயில் நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள்.
ReplyDelete