Monday, 14 September 2015

குரு மஹிமை இளமைக்காலம் ,பட்டம்

                                                     

                                                                                                              
                                                              குருமஹிமை.

குருஜியின் இளமைக்காலம் பற்றி குடும்பத்தினருக்கும்,நெருங்கியு நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்திருக்க முடியும்.மற்றவர்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை.நமக்கு கை கொடுக்கும் அருளாளர் ஐயப்பன்  இருக்கும் பொது ஏன்ஆதங்கம்  கீழ்க்கண்ட குறியீட்டில் பார்ப்போம்.

குருஜியின் திருமண வைபவம் 

https://www.youtube.com/watch?v=78rPj6Hn9Ss&hd=1


மற்றொரு தொகுப்பு.


                                                                                           

அன்பர்களில் பலருக்கு மற்றுமொரு ஆதங்கம்.நம் குருஜிக்கு மத்ய அரசின் பத்ம விருது,மாநில அரசின் கலைமாமணி போன்ற விருதுகள் வந்து அடைய வில்லையே என்று.நெருங்கிய அன்பர்கள் ஒருவருக்கொருவர் அதை வெளிப்படுத்தியும் உள்ளனர்.அந்த மாயா உலகத்தைப்பற்றி உணர்ந்த அன்பர்கள் அத்தகைய அரசியல் விருதுகள்  நம் குருஜியை வந்து அடையாததே குருஜியின் மகத்துவம் என்று மனத்தெளிவுடன்  உள்ளனர்.

சிருங்கேரி பீடாதிபதி அபிநவ வித்யாதீர்த்த ஸ்வாமிகள் அருளுடன் வழங்கிய
"திருப்புகழ் தொண்டன் "என்ற பட்டமே உயர்ந்தது என்று கருதியவர் குருஜி அதுபோல் சிவானந்தா ஆஷ்ரமம் சிதாநன்தஜி மகாராஜ் அளித்துள்ள " பக்த ரத்னா "என்ற பட்டத்தையும் பக்தியுடன் ஏற்றுக்கொண்டார்.இவ்விரண்டும் மகான்களால் பிரசாதமாக வழங்கப்பட்ட துதான் காரணம்.

அன்பர்களால் சமர்பிக்கப்பட்ட ஒரு பட்டமும் உண்டு.அதுதான் "குகஸ்ரீ "பழனியில் 18.7.2004 அன்று நடைபெற்ற  "வள்ளி க்கல்யாணம்" வைபவம் முதல் நாள்  மாணிக்கவாசகர் பரம்பரையில் வந்த கூனம் பட்டி பீடாதிபதி தவத்திரு நடராஜ சிவாச்சாரிய ஸ்வாமிகள் திருக்கரங்களினால் வழங்கப்பட்டது.ஆயிரக்கணக்கான அன்பர்கள் அக மகிழ்ந்தார்கள்.அது "திருப்புகழ் அன்பர்கள்" வரலாற்றில் ஒரு பொன்எழுத்தக்களால் பொறிக்கப்படவேண்டிய தினம் .அதன் வீடியோ காட்சிகளை பார்க்கலாம்.


                                                             பீடாதிபதியின் வருகை.

                                                                                       

                                                                 பட்டம் பெற்ற  வைபவம்.

                                                                             
 பட்டத்தை ஏற்றுக்கொண்டபின் நம் குருஜி வழங்கிய ஏற்புரை                                                                                
https://www.youtube.com/watch?v=35CsV5NfGds&hd=1


முருகா சரணம் 

தொடரும் 

                                                                                       
                                                                                 

2 comments:

  1. குருஜியின் இளமைக்காலம் பற்றிய தொகுப்புக்கள் ஓர் இனிமையான அனுபவம்!

    ReplyDelete
  2. We are all blessed to be gifted with a precious treasure called Thiruppugazh and we are doubly blessed to be gifted with a Guruji who taught us Thiruppugazh and guided us to the path of Thiruppugazh. There is nothing else we can ask for. Let us follow the foot-steps shown by Guruji and sing Thiruppugazh with devotion and love.

    ReplyDelete