குரு மகிமை
பழனி வள்ளி கல்யாணம்
வள்ளி கல்யாணம் இப்போது பஜனை சம்ப்ரதாயத்துடன் கூட நடைபெற்று வருகிறது.அதில் பாகவதர்கள் தங்கள் வசதிப்படி சீதா கல்யாணம் போல் முத்து குத்துதல் போன்ற நிகழ்சிகளுடன் நடத்துகிறார்கள் .அது பாட்டுக்கு நடக்கட்டும்.
நம் குருஜி அமைத்துள்ள வள்ளி கல்யாண முறையில் எந்த விதமான ஆடம்பரமும் கிடையாது.அருணகிரியாரின் நவமணிகளாகத்திகழும் ஒன்பது நூல்களிலிருந்து தொடுக்கப்பட்ட பாமாலைகளால் மட்டும் நிகழ்த்தப்படும் வைபவம் .கல்யாணத்தில் கீழ்க்கண்ட எல்லா நிகழ்ச்சிகளும் இடம் பெறும்
முருகனை அழைத்தல்
அறிமுகம்
மாலை மாற்றல்
ஊஞ்சல்
கன்னிகாதானம்
கூறை அளித்தல்
மாங்கல்ய தாரணம்
சப்தபதி
ஆசிர்வாதம்
வள்ளி தேவ சமேதராக முருகன் கொலு வீற்றிருத்தல்
பூஜா விதிகள்
கீதம்
வாத்யம் நிருத்தியம்
ஆரத்தி
கூட்டு பிரார்த்தனை
சாந்தி கீதம்
எல்லாம் அருணகிரியாரின் படைப்பிலிருந்துதான்.
இதை கடைப்பிடித்து அன்பர்கள் இன்றும் வள்ளிகல்யாணத்தை நடத்தி வருகிறார்கள்.
குருஜியின் தலைமையில் பழனியில் 19.7.2004அன்று நடந்த வள்ளி கல்யாண ம் ஒரு பொன்னான வைபவம் ,நாட்டின் பல பாகங்களிலிருந்த 2500அன்பர்கள் கலந்து கொண்டது ஒரு சரித்திரம்.திருமண மண்டபத்தை கட்டியவர் முதன் முதலாக வள்ளி கல்யாண வைபவம் தன் மண்டபத்தில் தான் நடைபெற வேண்டும் என்ற பேராவலுடன் சமர்ப்பித்து முருகன் அருள் பெற்றார்.அறுபடை வீடுகளிலிருந்து வந்த பிரசாதங்கள் அந்தந்த படை வீடுகளின் பாடல்களுடன் சமர்ப்பிக்கப்பட்டன.வைபவம் பிற்பகல் 3 மணி வரை நீடித்தது.கலந்துகொண்ட அன்பர்கள் மகா பாக்யசாலிகள்.பல காரணங்களால் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு கை கொடுக்கிறார் அருளாளர் ஐயப்பன்.
கீழ்க்கண்ட UTUBE குறியீடுகள் மூலம்
பழனி வள்ளி கல்யாணம் பகுதி 1
பழனி வள்ளி கல்யாணம் பகுதி 2
பழனி வள்ளி கல்யாணம் பகுதி 3
பழனி வள்ளி கல்யாணம் பகுதி 4
பழனி வள்ளி கல்யாணம் பகுதிகள் 4 ம் பரவசமூட்டுகின்றன !
ReplyDelete