இசை என்றால் தமிழில் புகழ் என்று ஒரு பொருளும் உண்டு .திருப்புகழ் இசை என்றால் திருப்புகழை புகழ்ந்து பாடுவது என்ற பொருள் தானாகவே வெளிப்படுவதும் ஓர் அதிசயமே.
குருஜியின்இசையைஎப்படிஆரம்பிப்பதுஎப்படிதொடர்வதுஎன்றபயத்துடனு ம்,குழப்பத்துடனும் தவித்தபோது,வழக்கம்போல்அருளாளர் ஐயப்பன் தோன்றுகிறார்.மனம் திறந்த நிலையில் அவரது கூற்றைப் பார்ப்போம்.
"நாயேனுக்கு திருப்புகழின் மேல் நாட்டம் வருவதற்கு மூலகாரணம் நமது குருஜி அதற்கு அமைத்துப் பாடிய ராகங்களே. கேட்கக் கேட்கக் தெவிட்டாதவைகள் அவைகள். அரி அயன் அறியாதவர் எனும் வடுகூர் திருப்புகழ் ரேவதி ராகத்தில் நமது குருஜி சொல்லிக்கொடுத்த உடன் நாயேனுக்கு திருப்புகழின் மேல் நாட்டம் வருவதற்கு மூலகாரணம் நமது குருஜி அதற்கு அமைத்துப் பாடிய ராகங்களே. கேட்கக் கேட்கக் தெவிட்டாதவைகள் அவைகள். அரி அயன் அறியாதவர் எனும் வடுகூர் திருப்புகழ் ரேவதி ராகத்தில் நமது குருஜி சொல்லிக்கொடுத்துள்ளபடி நாம் பாடி வருகிறோம் நாம் . அந்தப்பாட்டு நாயேனை என்னவோ செய்து விட்டது."
மற்றொரு அன்பரும் அதே நிலையில் தான் வந்து சேர்ந்தார் அவர் கர்நாடக இசையை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பைத்தியம் போல் நாயாய்,பேயாய் அலைந்து திரிந்து தன்இசை ஞானத்தை வளர்த்ததாக எண்ணத்துடன் தான் இருந்தார்.சென்னையில் நடைபெறும் இசைவிழாவுக்கு ஆண்டுதோறும் 20நாட்களுக்கு மேல் ,சோறு தண்ணி இல்லாமல் நாள் பூராவும் அலைந்து பல சபாக்களின் நிகழ்சியில் கலந்துகொள்வார்.அவருடைய அலுவலக leave,பணம் இதிலேயே செலவாயிற்று.இருப்பினும் தாகம் அடங்க வில்லை.அந்நிலையில் அந்த நாளும் வந்தது.ஆம் திருப்புகழ் இசை வழிபாடு தான்.அக்கணமே தான் இதுவரை அன்பவித்திராத தெய்வீக இசையைக் கண்டார்.புதிய உலகத்தை தரிசித்தார்.மேடைக் கச்சேரி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.அலுவலக ஓய்வுக்குப்பின் முழுவீச்சில் ஈடுபட்டார்..இதைப்போல் இன்று பழுத்த பழமாய் விளங்கும் பெரும்பாலான அன்பர்கள் இணைந்ததற்கும் இசையே காரணம் என்று அடித்துச்சொல்ல முடியும்.
"திருப்புகழ் அன்பர்கள் பாடி வரும் ராகங்கள் எல்லாம் ஆண்டவனால் உணர்த்தப்பட்டவை அல்லாது தனிப்பட்ட ஒருவரால் அமைக்கப்பட்டவை அல்ல"
இந்த வாக்கியம் வழிபாடு புத்தகத்தில் முன்னுரையில் இடம் பெற்றுள்ளது.ஆம்.குருஜியே செந்திலாண்டவன் தான் பாடல்களுக்கு இசை அமைத்ததாக கூறுகிறார்.அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.111 ராகங்களில்,ராகமாலிகையில்,503 திருப்புகழ்,திருவகுப்பு 12,வேல மயில்,சேவல் விருத்தம் 34,கந்தர் அநுபூதி .அபிராமி அந்தாதி,பதிகம் முதலியவற்றை அமைத்தது ஓர் அசாதாரண செயல் என்று எல்லோரும் உணருகிறோம்.பல கன ராகங்கள்,குமுதக்க்ரியா,துர்கா தேனுக,நவரசகானடா,மணிரங்கு,லலிதா ,விஜயநாகிரி,ஹம்சநாதம்,ஹம்ச வினோதினி போன்றஅபூர்வராகங்கள்,சந்திரகௌனஸ்,தேஷ்,த்விஜாவந்தி,பெஹாக்,ஹமீ ர் கல்யாணி,ஹிந்தோளம் போன்ற ஹிந்துஸ்தானி ராகங்கள் இடம் பெற்றுள்ளது ஓர் அதிசயம்.அற்புதம்.மேடை கச்சேரியில் துக்கடா நிலையில் இடம் பெற்றுள்ள சிந்துபைரவியில் சித்து விளையாட்டு.சிந்து பைரவியில் இது மாதிரி வேலைப்பாடுகள் எங்கும் கிடையாது என்பதுதான் உண்மை.அதேபோல் பெஹாக் ராகம்.
மற்றும் ஒரே பாடல் இரண்டு ராகங்களில்.ராகமாலிகை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அளவே இல்லை.இத்தகைய தெய்வீக சக்தியால் ,இசை நோக்கோடு அன்பர்கள் திருக்கூட்டத்தில் ஆட்கொள்ளப்பட்ட அன்பர்கள் வந்த பின் என்ன ஆயிற்று?
அன்பர்கள் துவக்கத்தில்நம் திருப்புகழ் இசையின் ஓசை நயத்தாலும் ,சொல் வளத்தினாலும் மட்டுமே கவரப்பட்டு வந்தனர்.ஆனால் திருப்புகழில் ஆழமாக செல்ல செல்ல வேதங்கள்,ஆகமங்கள்,புராணங்கள், காவியங்கள் போன்றவை அனைத்தின் சாரத்தையுமே அவை தம்முள் அடக்கி வைத்திருந்தன என்று கண்டு கொண்டனர்.குழந்தை ஒன்று அரிச்சுவடியில் ஆரம்பித்து படிப்படியாக மேலேறி உலகம் போற்றும் விஞ்ஞானியாக பரினமிப்பதைப்போன்று அன்பர்கள் அருணகிரியாரின் அறிய தத்துவங்களை ஜீவாதாரமாகக் கொண்டு தம் வாழ்க்கையின் பல படிகளைக் கடந்து இன்று மிக மிக உன்னதமான நிலையை அடைந்துள்ளனர் என்பாதை கண்கூடாக காண்கிறோம்.இவையெல்லாம் பெருமானின் கருனையைத்தவிர வேறு ஒன்றும் இல்லை.
பிரபல வித்வான்கள் தேவகோட்டை சுந்தரராஜ ஐயங்கார்,நட்டுவனார் சிக்கல் ராமஸ்வாமி பிள்ளை அவர்களும் குருஜியுடன் இணைந்து சந்தங்களை ஆய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினர்.மிருதங்க வித்வான் ராமநாதபுரம் ஈஸ்வர ஐயர் ,ஹார்மோனியம் நிபுணர் கே.பி.நாராயணன் அவர்களும் தம் இறுதி காலம் வரை யில் குருஜியின் தொண்டுக்கு பக்க பலமாக இருந்தனர். அன்று சங்கீத உலகத்தை தம் பொறி பறக்கும் விமர்சனங்களினால் கலக்கிய சுப்புடு நம் வழிபாடுகளில் பெட்டிப்பாம்பு.குருஜிக்கு அனுசரணையாக ஹார்மோனியம் வாசித்தார்.
குருஜியின் அந்த கால வழிபாடுகளில் இந்த கூட்டணியின் தெய்வகானத்தை அனுபவித்தவர்கள் பாக்யசாலிகள்.அதிர்ஷ்ட வசமாக அவை திருப்புகழ் நவமணி குறுந்தகடுகளில் இடம் பெற்றுள்ளது நம் பாக்கியம்.
தொடர்வதற்கு முன் சந்திர கௌன்ஸ் ராகத்தில் அமைந்துள்ள மூன்று பாடல்களை கேட்போம். பஜனைகளில் எப்போதாவது இடம் பெறும்அல்லது கச்சேரிகளில் ராகமாலிகையில் மெல்லிசை பாணியில் இடம் பெறும் இந்த ராக ம் எப்படி கையாளப்பட்டுள்ளது என்பதை அனுபவித்தால் தான் உணர முடியும்.
தாரணி
அழுதும்
கொடிய மறலியும்
https://www.youtube.com/watchv=VRjhfgjnbi0&hd=1
தொடரும்
முருகா சரணம்
அருளாளர் ஐயப்பன் கூற்று ஆழ் மனதை தொடுகின்றது! சந்திர கௌன்ஸ் ராகத்தில் அமைந்துள்ள மூன்று பாடல்களும் சிந்தனைக்கு சிலிர்ப்பூட்டுகின்றன!
ReplyDelete