Thursday, 24 September 2015




                                                                             


பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்  ஜீவன் முக்தி அடைந்துள்ள தருணத்தில் நினைவுகள் பின் நோக்கி செல்கின்றன.ஆன்மிகம்,சமூக சேவை ,கல்விப்பணி முதலியவற்றில் சிகரமாக விளங்கிய அந்த மகான் ,திருப்புகழிலும் ஈடுபாடு உள்ளவர் என்றும்,நம் குருஜியின் பால் எவ்வளவு அன்பும் பெரு மதிப்பும் வைத்திருந்தார் என்பது 2013 ல்சென்னையில் நம் அமைப்பின் ஆன்மீக விழாவை தொடங்கி வைத்து அருளுரை ஆற்றிய பொது வெளிப்பட்டது.

அனுக்ரஹ பாஷனையில் சுவாமி தயானந்த சரஸ்வதி ",நம்  குருஜியை 
முதற்கண் நினைவு கூர்வது நம் தலையாய கடமை" என்றும் "அவரது 
சேவை ஈடு இணையற்றது "என்றும்",சங்கீத மும்மூர்த்திகளுக்கு 
ஒப்பானவர்" என்றும் புகழாரம் சூட்டினார்.பின்னர்  ஆறுமுகம் ஆறுமுகம்
 என்று தொடங்கும் பாடலை சுட்டி காட்டி,அதில் 96 தத்துவங்கள் 
அடங்கியுள்ளது என்றார் எதிர்பாராதநிலையில் அந்த பாடலை பாட 
அழைத்தார். அருளாளர்கள்  சித்ரா முர்த்தியும்,,உமாபாலசுப்ரமணியமும்
 பாடிமகிழ்வித்தார்கள்

.சுவாமிகளின் உரையை விரிவாக கேட்போம்.



முருகா சரணம் 

1 comment:

  1. பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் திருப்புகழ் ஈடுபாடு அவரின் தெவிட்டாத உரையில் வெளிப்படுகிறது. அன்னாரது மறைவு ஆன்மீக உலகிற்கு ஈடு செய்ய இயலாத இழப்பு!

    ReplyDelete