Wednesday, 15 July 2015




குருஜியின் குடும்ப திருமண /உபநயன  வைபவம் 
 திருப்புகழ் இசை வழிபாடு

திருப்புகழ் அன்பர்கள் குடும்பத்தில் எந்த சுப நிகழ்சிகள் நடந்தாலும் இசைவழிபாட்டுடந்தான் நடக்கும் என்பது மரபு.அவ்வாறு நம்  குருஜியின்குடும்பத்து அனைத்து வைபவங்களிலும் ,நாட்டின் பல பாகங்களிலிருந்தும்அன்பர்கள் திரளாக வந்து மிகுந்த ஈடுபாட்டுடன் வழிபாட்டில் உற்சாகத்துடன்கலந்துகொண்டு பெருமான் அருளுக்கும் குரு அருளுக்கும் பாத்திரமாகிரார்கள்என்பது வரலாறு.

அந்த வகையில் சென்ற வாரம் குருஜியின் மூத்த புதல்வியின் புத்திரனின்திருமண வைபவமும் (8.7.2015) குருஜியின் மகன் ராஜூ என்று பாசத்துடன்அன்பர்களால் அழைக்கப்படும் சுப்ரமணியத்தின் சுபத்திரன் சிரஞ்சீவி நீலகண்டனின் உபநயனம் வைபவமும் (10.7.2015) சிறப்பாக நடந்தேறியது

மணமக்களையும்,பிரம்மோபதேசம் பெற்ற குழந்தையையும் வாழ்த்தி அருளாசி
வழங்கும் வகையில் 10ந தேதி அன்று சென்னை TAG CENTERல் திருப்புகழ் இசைவழிபாடு மூன்று மணி கால அளவு நடைபெற்றது.

வழிபாட்டில் அருளாளர்கள் மும்பை குரு பாலசுப்ரமணியம் சார் --ராஜி மாமி மும்பை மணி சார் ,டெல்லி மணி சார் ,டெல்லி ஜிக்கி சார் ,பெங்களூர் பாலாஜிசார் மற்றும் பலஅன்பர்கள் கலந்துகொண்டனர்.

அருளாளர் ஐயப்பன் "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்ற உன்னத நோக்குடன்  இசை வழிபாட்டைமுழுவதும் ஆடியோ வடிவில் அன்பர்களுக்கு வழங்கியுள்ளார்.

நாம் அவற்றை தொகுத்து  U TUBE வடிவில் கீழ்கண்ட குறியீட்டில் வழங்குவதை பெரும் பாக்யமாக கருதுகிறோம்.

http://www.youtube.com/attribution_link?a=z89fTceWOeE&u=/watch%3Fv%3D8Tm1AKZcp9Y%26feature%3Dem-upload_owner

அருளாளர் ஐயப்பனின் உணர்வு பூர்வமான செய்தி

.
"முருகா சரணம்
அன்பர்களே
 திருப்புகழ்  அன்பர்கள் குடும்பத்தினருக்கு நேற்றைய தினத்தை ஒரு
வரலாற்றுச்  சிறப்பு மிக்கதாக  ஆக்கித் தந்த செந்திலாண்டவனை மறக்காமல்அவனுடைய திருப்புகழையே பாடிக்கொண்டிருப்போம் .அது  கண்டு நமது  குருஜிமகிழ்ந்து ஆசிர்வதித்துக் கொண்டே இருப்பார் . நேற்றைய இசை வழிபாடு எப்படிமுக்கியத்துவம் பெற்றது எனில் பழுத்த மனத்தினர் பலர் கலந்து கொண்டுவிருத்தங்களை அதிகமாகப் பாடி நமது குருஜியையும் செந்திலாண்டவனையும்திருப்தி அடையச் செய்தனர். அதை அவசியம் நீங்களும் கேட்க வேண்டுமே .
அதற்காக வேண்டியே 3 மணி  நேர பஜனையை  18 எம்பி க்களாக  மாற்றி இந்தமெயிலுடன் இணைத்துள்ளேன். அதை பதிவிறக்கம் செய்து , கேட்டு , நமதுகுருஜி, செந்திலாண்டவனின் திருவருளுக்கு பாத்திரரர்களாக நீங்கள் ஆகி விடஇந்த திருப்புகழ் தெய்வங்களைப் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்"
ஐயப்பன்
முருகா சரணம்  முருகா சரணம்  முருகா சரணம்
.
அருளாளர் G.V.நீலகண்டனிடமிருந்து வந்துள்ள மற்றொரு செய்தி


"On the occassion of Guruji's grandson (son of Sri.
Subramanian.R.RAJU) Chiranjeevi. Nilakantan's Upanayanam
Thiruppupugazh IVP was there at TAG CENTER Chennai. The notable one
was Guru sthuthy by sri RAJU-- this maiden attempt by Sri Raju is
rendered extremely very well" .

அன்பர்களோடு சேர்ந்து மணமக்களையும் ,பிரம்மோபதேசம் பெற்ற சிரஞ்சீவி நீலகண்டனையும் வாழ்த்தி முருகன் அருள் வேண்டுகிறோம்.

முருகா சரணம் 

1 comment:

  1. மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! பிரம்மோபதேசம் பெற்ற சிறுவன் ராஜு வின் குரு ஸ்துதி மிகவும் அருமை ! அந்த குழந்தைக்கு ஆண்டவன் அனைத்து நலன்களையும் அருள்வாராக! திருப்புகழ் இசை வழிபாட்டை ஆடியோ வடிவில் வழங்கிய அருளாளர் ஐயப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!அதை U Tube வடிவில் வழங்கியதற்கு பாராட்டுக்கள்! முருகா சரணம்!

    ReplyDelete