ஆடி வெள்ளி
ஆடி மாதம் பிறந்ததுமே அன்பர்கள் மனம் குதூகலிக்கும்.நாட்டின் பல பாகங்களில் தேவியைப் போற்றும் ஸ்ரீ துர்கா சந்திரகலா ஸ்துதி அபிராமி அந்தாதி வழிபாடுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பக்திப் பரவசத்துடன் நடை பெறுகின்றன இந்த சந்தர்ப்பத்தில் நம் பங்காக இவ்விரண்டின் ஒலிப்பதிவுகளை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
முதலில் மகான் ஸ்ரீ அப்பைய தீக்சிதர் அருளியுள்ள ஸ்ரீ துர்கா சந்திரகலா ஸ்துதி யை அனுபவிப்போம்.
http://youtu.be/I_ATKXctspE
நாட்டின் பல பாகங்களில் அபிராமி அந்தாதி துதிக்கப்பட்டு வந்தாலும் பல பாகத்தில் இருந்து வந்து ஆயிரக்கணக்கில் கூடி ஒரே குரலில் துதித்து பரவசமடைந்த வைபவம் சென்னையில் வெகு சிறப்பாக நம் ஆன்மீக விழா வின் முதல் நாள் 13 ஜூலை 2013 காலை முதல் நிகழ்ச்சியாக இடம் பெற்றது. அபிராமி அந்தாதி அன்பர்கள் உள்ளத்தி னில் கங்கை
பிரவாகமாக பெருக்கெடுத்தது.ஆயிரம் ஆயிரம் குரல்கள் ஒரே குரலில்
ஒரே துதியில் ஒலித்து ஒரு மணி நேரம் அன்னையின் சந்நிதானத்துக்கு
சென்றுகலந்துஉள்உருகி.விழிநீர்மல்கி.மெய்புலகம்அரும்பி,ஆனந்தமாகி
,
அறிவிழந்துமொ ழிதடுமாரி,பித்தராகி முடிவில்அபிராமி சமயம் நன்றே
என்றுதீர்மானித்தது.கொடியே,இளவஞ்சிக்கொம்பே,நாயகியே,நான்முகி
யே,நாராயணியே,சாம்பவியே,சங்கரியே,சியாமளையே,மாலினியே,வா
ராகியே,சூலினியே,மாதங்கியே,பைரவியே,என்றுபலவாறு துதித்துநனறே
வருகினும்,தீதே விளைகினும்நான்அறிவதுஒன்றேயும்இல்லை.உனக்கே
பரம் எனக்குள்ளவெல்லாம் அன்றே உனதென்றுஅளித்து விட்டேன்
என்று அர்ப்பணித்தார்கள்.பாபநாசம் சிவன் " உன்னைஅல்லால் "என்ற
கீர்த்தனையில் "நீயே மீனாட்சி ,காமாட்சிநீலாயதாட்சி எனபலபெயருடன்
எங்கும் நிறைந்தவள் என் மனக்கோயிலிலே எழுந்தருளிய தாயே "
என்ற வரிகளை நினைவு கூர்ந்தோம். ஒரேகுரலில்ஒலித்தஅந்தாதியை
மீண்டும் அனுபவிப்போம்.
குருஜியின் அருளுரை (பதிவு)
துயர்பட்ட உள்ளங்களுக்கு துள்ளும் மகிழ்ச்சியளிக்கும் துர்கா சந்திரகலா ஸ்துதி! அல்லல்படும் மனிதர்களுக்கு அருமருந்து அபிராமி அந்தாதி! ஆடி வெள்ளியை ஒட்டி இந்த பதிவுகளைப் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்!
ReplyDelete