நிறுவனர் அமரர் பிரம்ம ஸ்ரீ A.S.சுப்ரமணிய ஐயர் நினைவு விழா 2015
நமது அமைப்பின் நிறுவனர் பிரம்ம ஸ்ரீ சுப்ரமணிய ஐயரின் நினைவு விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சிறப்பாக நடை பெற்று வருகிறது .அவருடைய கடும் உழைப்பினாலும் ,ஈடுபாட்டினாலும் தான் நமது அமைப்பு உருவாக்கப்பட்டதையும்,தொடர்ந்து தெய்வீக நிகழ்சிகளும் வழிபாடுகளும் பெருமான் அருளால் வெகு சிறப்பாக நடை பெற்று வருகிறது .
இத்தருணத்தில் அவரைப்பற்றி சில வார்த்தைகள் கூறுவது எங்கள் தலையாய கடமை என்று கருதுகிறோம்.ஆரம்பத்தில் சில சங்கீத வித்வான்களும்,மாணவர்களும் விரும்பி நம் குருஜியின் வழியில் திருப்புகழ் பாடல்களை கற்க ஆரம்பித்தனர்.நாளடைவில் பஜனையும் சுக்கிலஷஷ்டிஅன்றுசெம்பூரில்நடைபெற்றது.அதுஇன்றும்தொடர்கிறது.ஐயரின் விடா முயற்சியாலும் ,உந்துதலாலும் பல அன்பர்கள் திருப்புகழை கற்கவும் பிறருக்கு கற்பிக்கவும் ஆரம்பித்தனர் .முறையாக 1972 ம் ஆண்டு கோலிவாடா மற்றும் செம்பூர் பகுதியில் வகுப்புக்கள் தொடங்கப்பட்டன.
படிப்படியாக வளர்ந்து செந்தில் ஆண்டவன் அருளால் மும்பையின் பல சமுக ,ஆஸ்தீக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ,1975ம் ஆண்டு அருணகிரிநாதரின் 6வது நூற்றாண்டும் கலந்ததன் பொருட்டு அருணகிரிநாதரின் விழா தொடங்கப்பட்டது.ஒவ்வொரு ஆகஸ்ட் மாதம்
15ம் நாள் 108திருப்புகழ் பாடல்களுடன் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
சக்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் , சிருங்கேரி ஆசாரிய சுவாமிகள் அருளாசியுடன் 1981 ம் ஆண்டு குருஜி தலைமையில் படி விழா தொடங்கப்பட்டது.
இவைஎல்லாம்பெருமானின்அருளாலும்மனிதஅளவில்அமரர்ஐயரின்தன்னலமற்றசேவையாலும்,அயராத உழைப்பினாலும்,யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற பரந்த மனப்பான்மையாலும் தான் சாத்தியமாயிற்று என்பது மறுக்க முடியாத உண்மை.
இவற்றையெல்லாம் விட நாங்கள் மேன்மையாகவும் , உன்னதமாகவும், புனிதாகவும் கருதுவது ,இந்த தெய்வீகப்பணி தொடர தம் குடும்ப வாரிசுகளை முழுமையாக அர்ப்பணித்ததுதான்.இப்பொழுதும் அன்னாரின் துணைவி தள்ளாத வயதிலும் வழிபாடுகளில் ஈடுபடுவது அன்பர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
மாதுங்காவில் அவரது இல்லம் முருகப்பெருமானின் உறைவிடமாகவே உணரப்படுகிறது.மாதுங்கா செல்லும் அன்பர்கள் இங்கு வந்து பெருமானை தரிசனம் செய்து அவன் அருள் பெறுவது நடை முறை வழக்கம்.அன்னாரின் இல்லமே நம் அமைப்பின் அலுவலகமாக செயல் படுவது பெருமைக்குரிய விஷயம்.
பௌராணிகர்கள் கூறுவார்கள் இராமாயணக்கதை உபன்யாசம் எங்கு நடக்கிறதோ அங்கு ராம பக்த ஹனுமான் கலந்து கொண்டு அனுபவிக்கிறார் என்று.அதுபோல் நம் அமரர் ஐயர் அவர்களும் குருஜியும் ஒவ்வொரு வழிபாட்டிலும் பிரசன்னமாகி நம்மை வழி நடத்துகிறார் என்றே கருதுகிறோம்.அவரது நெருங்கிய நண்பர்கள் அவருக்கு பேரானந்தத்தை அளித்தது வழிபாடுகளுக்கு பெருமளவில் வரும் அன்பர்களின் திரு கூட்டம் தான் என்று கூறுகிறார்கள்.அதை தொடர்ந்து காப்பாற்ற வேண்டியது அன்பர்களின் தலையாய கடமை மட்டும் அல்ல.நாம் செலுத்தவேண்டிய காணிக்கையும் கூட
இந்த ஆண்டு அன்னாரின் நினைவு நாள் ஆகஸ்ட் 2 ஞாயிறு அன்று காலை காலை 9.30 அளவில் பூஜை வழிபாடு கீழ்க்கண்ட விலாசத்தில் நடை பெறுகிறது. அன்பர்கள் திரளாக வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்,
Date 2nd August 2015 (Sunday)
Time 9,30 A.M
Venue Bunglow No. 12
Green Garden Apt
Acharya Nagar
Waaman thukaaraam patil Marg
Deonar
Mumbai 400088
Landmark .....Amar Theatre /.....Lucky Restaurant
Telephone No 25529112
அருளாளர் ரமேஷ் அவர்களுக்கு நாம் வைபவத்தில் கலந்து கொள்வதே
நாம் அவருக்கு செலுத்தும் நன்றிக் கடனாகும்.
முருகாசரணம்
அருளாளர் ரமேஷ் அவர்களுக்கு நாம் வைபவத்தில் கலந்து கொள்வதே
நாம் அவருக்கு செலுத்தும் நன்றிக் கடனாகும்.
முருகாசரணம்
"என் கடன் பணி செய்து கிடப்பதே!" என்ற மூதுரைக்கிணங்க திருப்புகழ் தொண்டு செய்த அமரர் அய்யரும் அமரர் குருஜியும் என்றென்றும் திருப்புகழ் அன்பர்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்று நிலைப்பார்கள்! வாழ்க அவர்கள் நாமம் ! ஓங்குக அவர்கள் புகழ்! அவர்கள் வழியில் தொடர்ந்து தொண்டாற்றும் அன்னாரின் வாரிசுகளுக்கு ஆண்டவன் அனைத்து நலன்களையும் அருள்வாராக! "அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே!" ஓம் முருகா சரணம் !
ReplyDelete