- திருப்புகழ்வழிபாடுபுத்தகத்தில்
புதிதாகசேர்க்கப்பட்டுள்ள பாடல் கள் (476 முதல் 503 வரை)
விருத்தாசலம்
- பழமலைநாதர்கோயில் என்று அழைக்கப்படும் இந்த ஆலயம் மாநிலத்தின்கடலூர்மாவட்டத்தில்உள்ளவிருத்தாச்சலத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். மூலவர் விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர், தாயார்விருத்தாம்பிகை(எ)பெரியநாயகிமற்றும்பாலாம்பிகை(எ)இளையநாயகிஆவர்.
- கோயில் அமைப்புபுறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் நான்கு புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது.
- இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோயிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்புக் கொண்டது.
- நான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் விருத்தாம்பிகை சந்நிதி உள்ளது.
- ஆழத்து விநாயகர்
- முதல் வெளிப் பிரகாரத்தில் ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
- சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில்அமைந்துள்ளன.இதில் தெற்கு வரிசையில்உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்
- கோயில் சிறப்பு
- இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம் , 5 நந்தி , 5 தேர் 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.
- இந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.
- காசியை விட ஒரு படிபுண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு.
- பிற தகவல்கள்
- இக்கோயிலிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆஸ்த்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள நியு சவுத் வேல்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதுபல கட்ட விசாரணைகள் மற்றும் முயற்சிகளுக்குப்பின் ஆஸ்த்திரேலிய பிரதமர் டோனி அபாட்(Tony Abbot) அவர்களின் 2014 இந்திய வருகையின் போது இச்சிலை இந்தியாவிடம் ஓப்படைக்கப்பட்டது.
பாடல் வரிசை எ ண் 18 புத்தக வரிசை எண் 311
ராகம் ரேவதி தாளம் ஆதி கண்ட நடை
பாடல்
பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
பறியக்கை சொறியப்பல் ...... வெளியாகிப்
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க
பழமுற்று நரைகொக்கி ...... னிறமாகி
விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு
மெலிவுற்று விரல்பற்று ...... தடியோடே
வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை
விடுவித்து னருள்வைப்ப ...... தொருநாளே
அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி
னடல்வஜ்ர கரன்மற்று ...... முளவானோர்
அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்
அதுலச்ச மரவெற்றி ...... யுடையோனே
வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற
வடிவுற்ற முகில்கிட்ணன் ...... மருகோனே
மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்
வளர் விர்த்த கிரியுற்ற ...... பெருமாளே.
சொல் விளக்கம்
பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி ...
ஈரப்பசையற்ற இவ்வுடல் வற்றிப்போகச்செய்தவினைமுதிர்ச்சிஅடைந்து, நடையும் தள்ளாடுதலை அடைந்து,
பறியக் கை சொறியப் பல் வெளியாகி ...
நிலை தடுமாறி, கைசொறிதலையே தொழிலாகக் கொண்டு, (ஈறுகள் தேய்தலால்) பற்கள்வெளியே நீண்டு வர,
படலைக்கு விழி கெட்ட குருடு உற்று ...
கண் பூ விழுந்துமறைப்பதால் பார்வை இழந்து குருடாகி,
மிக நெக்க பழம் உற்று நரை கொக்கின் நிறமாகி ...
மிகவும்நெகிழ்ந்து பழம் போலப் பழுத்து, மயிர் நரைத்து கொக்கைப் போல்வெண்ணிறமாகி,
விசை பெற்று வரு பித்தம் வளியைக் கண் நிலை கெட்டு ..
.
வேகத்துடன் வருகின்ற பித்தத்தாலும், வாயுவினாலும், கண் இடமும்
நிலையும் தடுமாறிக் கெட்டு,
மெலிவு உற்று விரல் பற்று தடியோடே ...
உடல் மெலிதலைஅடைந்து, கைவிரல்களினால் பிடிக்கப்பட்ட தடியுடன்,
வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தைவிடுவித்து ...
வெளியே தனியனாக நிற்கின்ற தன்மை மிகும்படியாகதுன்பமே கொண்ட பிறப்பைத் தவிர்த்து,
உன் அருள் வைப்பது ஒரு நாளே ...
உன் திருவருளைத் தருவதும்ஒரு நாள் உண்டாகுமோ?
அசைவு அற்ற நிருதர்க்கு மடி உற்ற பிரியத்தில் அடல் வஜ்ர
கரன் மற்றும் உள வானோர் ...
கலக்கம் இல்லாத அசுரர்கள் மடிந்துஇறந்தொழிய, அதனால் மகிழ்ந்த, வலிய வஜ்ராயுதக் கையனனாகியஇந்திரனும் மற்றும் உள்ள தேவர்களும்,
அளவு அற்ற மலர் விட்டு நிலம் உற்று மறையச் செய் அதுலச்
சமர வெற்றி உடையோனே ...
பூக்களைப் பொழிந்து பூமி முழுதும்மறையும்படிச் செய்கின்ற நிகர் இல்லாதவனே, போரில் வெற்றிஉடையவனே,
வசை அற்று முடிவு அற்று வளர் பற்றின் அளவு அற்ற வடிவு
உற்ற முகில் கிட்ணன் மருகோனே ...
பழிப்புக்கு இடம் இல்லாமல்,முடிவில்லாது வளர்ந்திருந்த (பாண்டவர் மீது இருந்த) நேசத்தின்காரணமாக, கணக்கற்ற வடிவங்களைக் கொண்ட* மேக நிறக்கண்ணனது மருகனே,
மதுரச் செம் மொழி செப்பி அருள் பெற்ற சிவ பத்தர் வளர் ...
இனிமை தரும் செம்மையான புகழ் மொழிகளைச் சொல்லி உனது
திருவருளைப் பெற்ற சிவ பக்தர்கள் நிரம்பியுள்ள
விர்த்த கிரி உற்ற பெருமாளே. ...
முது குன்றம் எனப்படும்விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* சகாதேவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு பாரதப் போருக்கு முன்பும்,
அர்ச்சுனனுக்கு கீதோபதேசத்தின் போதும், கண்ணன் விசுவரூப தரிசனம்
பாடல்
இதே ராகத்தில் அமைந்துள்ள மற்றொரு பாடல்
முருகா சரணம்
ரம்மியமான ரேவதி ராகப் பாடல் மணி மாமா எங்களுக்குக் கற்பித்தது! இதே ராகத்தில் அமைந்துள்ள மற்றொரு பாடல் வித்யா மேடம் பல வருடங்கள் முன்பு படிப்பித்தது! ரசனைக்குரிய ரேவதி!
ReplyDelete