குருமஹிமை இசை மாண்ட் ராகம்
(நிரவலுடன் )
"மாலாசை கோப " என்று தொடங்கும் விராலிமலை பாடல்
"கானவோனாதது " என்று தொடங்கும் தேவனூர் பாடல்
தேவனூர் திருத்தலம்
தேவனூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு வடகிழக்கில் 5 மைல்தொலைவில் திருக்கோவிலூருக்கு 2 மைலில் உள்ள தலமாகும்.
"இருவினைப் பிறவி "என்று தொடங்கும் பாடல்
திருப்பாண்டி கொடுமுடி திருத்தலம்
(இன்றைய கொடுமுடி )
https://www.youtube.com/watch? v=K39hqG1MwG8
"உரிய தவ "என்று தொடங்கும் பாடல்
குடந்தை திருத்தலத்தில் அமைந்துள்ள சோமேஸ்வரர் ஆலயம்
மற்ற விபரங்களுக்கு
http://temple.dinamalar.com/ New.php?id=366
வேல்,மயில் விருத்தம் 8
சேவகன் வகுப்பு 7
முருகா சரணம்
"விரல் மாறன் " என்று தொடங்கும் திருசெந்தூர் பாடல்
(நிரவலுடன் )
"மாலாசை கோப " என்று தொடங்கும் விராலிமலை பாடல்
"கானவோனாதது " என்று தொடங்கும் தேவனூர் பாடல்
தேவனூர் திருத்தலம்
தேவனூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு வடகிழக்கில் 5 மைல்தொலைவில் திருக்கோவிலூருக்கு 2 மைலில் உள்ள தலமாகும்.
இப்பொழுது கோயில் பாழடைந்த நிலைமையில் உள்ளது.உள்ளே விக்ரகங்கள் ஒன்றும் இல்லை.
மேலும் விபரம் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
"இருவினைப் பிறவி "என்று தொடங்கும் பாடல்
திருப்பாண்டி கொடுமுடி திருத்தலம்
(இன்றைய கொடுமுடி )
ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மி. தொலைவிலும், கரூரிலிருந்து வடமேற்கே சுமார் 26 கி.மி. தொலைவிலும் கொடுமுடி உள்ளது. கொடுமுடி ரயில் நிலயம் திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது. ரயில் நிலயம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 முதல் 10 நிமிட நடை தொலை
பாண்டிய மன்னர்களின் கொடையினால், இத்தலம் பாண்டிக்கொடுமுடி எனப்படுகிறது
இங்குகோவில் கொண்டுள்ள பிரம்மனும்,திருமாலும் ஈசனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. எனவே இது திரிமுர்த்தி கோவில் எனப்படுகிறது. அகத்தியர் இங்கு வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
தல வரலாறு
ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த பேட்டி விதிமுறைகளின்படி ஆதிசேஷன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி வாயுதேவன தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்த் பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும் ஒரு தலமானது.
சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீல மணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின. மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும். மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார்
அகத்தியர் புவியின் நிலை காக்கத் தென்னகம் வந்த புராணம் பாண்டிக்கொடுமுடியுடன் தொடர்புடையதாகும்; அவரது கமண்டல நீர், கீழ்த்திசை உழவோர் நலன்காக்க, இங்கிருந்து காவிரியாக ஓடியதாக நம்பப்படுகிறது. இங்குள்ள விநாயகர், காவிரி கண்ட விநாயகர் எனப்படுகிறார். பாண்டிய மன்னர்களின் கொடையினால், இத்தலம் பாண்டிக்கொடுமுடி எனப்படுகிறது. இங்கு பல்வேறு மன்னர்களின் கொடைகள் பற்றிய பல கல்வெட்டுகள் உள்ளன.சிங்க முகத் தூண்கள் பல்லர்வர்களின் கொடைகளைப் பறைசாற்றுகின்றன.
திருஞானசம்பந்தர் மகுடேசுவரர் மேல் பதினோரு பதிகங்கள் பாடியுள்ளார். அப்பர் ஐந்து பாடல்களையும், சுந்தரர் பத்துப் பாடல்களையும் (நமச்சிவாய பதிகம்) பாடியுள்ளனர்.மேலும், அருணகிரி நாதர் இங்குள்ள முருகப்பெருமான் மேல் திருப்புகழ் பாடியுள்ளார் .
தனிச் சிறப்புகள்
- இங்குள்ள வன்னி மரம் பூக்காமலும், காய்க்காமலும் இருப்பது ஓர் அற்புதமாகும்.
- இங்குள்ள குஞ்சிதபாத நடராஜர், தன் வலது காலைத் தூக்கி இருப்பதற்கு மாறாக, இரு கால்களையும் தரையில் வைத்துள்ளார்.
- கதிரவனின் கிரணங்கள் (ஒளி) பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் நான்கு நாட்களுக்கு, சிவன் மற்றும் அம்பாள் சந்நிதிகளை ஒளிரச்செய்கிறது.
மற்ற விபரங்களுக்கு
காணொளி காட்சி
குடந்தை திருத்தலத்தில் அமைந்துள்ள சோமேஸ்வரர் ஆலயம்
சோமீச்சுரம்
கும்பகோணம் வியாழச் சோமேஸ்வரர் கோயிலில் உள்ள ஆறுமுகன்.
போளூர் அருகில் உள்ள சோமேசர் கோயிலே அருணகிரியார் பாடிய தலம் எனக் கருத இடமிருக்கிறது என்பது வலையப்பட்டி கிருஷ்ணன் கருத்து மற்ற விபரங்களுக்கு
http://temple.dinamalar.com/
வேல்,மயில் விருத்தம் 8
சேவகன் வகுப்பு 7
முருகா சரணம்