திருத்தணியில் வள்ளி கல்யாண வைபவம்
நம் பெருமானின் அருளாணையின் வண்ணம்அடுத்த வள்ளி கல்யாண வைபவம் திருத்தணி திருத்தலத்தில் வரும் டிசம்பர் மாதம் 18 ம் நாள் ஞாயிற்றுக் கிழமை அன்று அன்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்பர்கள் பெருமளவில் கலந்துகொண்டு பெருமானின் பேரருளை பெற பிரார்த்திக்கிறோம்.
மற்ற விபரங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.
அருளாளர் ஐயப்பனின் அழைப்பு
முருகா சரணம்
அன்பர்களே,
அன்பர்களே,
நமது பரம குருநாதரான அருணகிரிநாதருக்கு மிகவும் அபிமானமான திருமுருக ஷேத்ரங்களுள் முதன்மையானது திருத்தணியே. இவ்வுண்மயை அவர் வேட்டிச்சிக் காவலன் வகுப்பில் - அருணையில், இடைக்கழியில், உரககிரியில் , புவியில் அழகிய செருத்தணியில், வாழ் கற்பகாடவில் - என்றும், திருவேளைக்காரன் வகுப்பில், - ஏரகம் இடைக்கழி , சிராமலை , திருப்பழநி , செருத்தணியில் - என்றும் மற்றும் பல இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார். அருணகிரியார், திருவண்ணாமலைக்கு அடுத்த படியாக அதிக நாட்களைக் கழித்ததும் திருத்தணியில் தான். அப்படி அவர் திருத்தணியில் தங்கி இருக்கும் போது தான் பல அற்புதமான படைப்புக்களை அருளி இருக்கிறார் . தத்துவ உபதேசங்கள் பலவற்றை உள்ளடக்கிய திருப்புகழ் பாக்கள் , திருவிருத்தங்கள் , திருவகுப்புகள் , பற்பல பொதுப்பாடல்களை திருத்தணிகேசரின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்துள்ளார். குறிப்பிட்டு சொல்லப் புகுந்தால், இருமலும் ரோகமும், ஏது புத்தி ஐயா, நிலையாத சமுத்திரமான, வேல் வகுப்பு இத்தியாதி பட்டியல் நீளும்.
எலுப்பு நாடிகள் எனத் தொடங்கும் திருத்தணி திருப்புகழில் , - வனத்தில் வாழும் மயில் குலம் ஒத்திடும் குறத்தியாரை மயக்கி , அணைத்து , உளம் மகிழ்ச்சியோடு திருத்தணி பற்றிய பெருமாளே - என்பார். வள்ளிக்கும் முருகனுக்கும் ஒரு பிணப்பை ஏற்படுத்திய திருத்தலம் திருத்தணி. இது லேசாக எண்ணி விடக் கூடிய தலம் அல்ல.. இது திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி.
இன்னும் எவ்வளவோ பெருமைகளை தன்னகத்தே கொண்டு விளங்கும் தலம் இந்த திருத்தணி. அந்த தலத்தில் தான் நமது முருகனுக்கும் எங்கள் வள்ளி நாச்சியாருக்கும் திருக்கல்யாண மஹோத்சவம் திருப்புகழ் தொண்டராம் நமது குருஜியின் அருளாசிகளோடு திருத்தணிகேசரின் சித்தப்படி 18.12.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியிலிருந்து அங்குள்ள செங்குந்தர் திருமண மாளிகையில் நடை பெற உள்ளது. திருச்செந்தூருக்கு வந்து இதை அன்று நடத்திக்கொடுத்தது போல் எல்லா அன்பர்களும் இந்த வள்ளி கல்யாணத்திற்கு வந்திருந்து திருப்புகழ் பாடி , நமது அகத்தில் உள்ள குழந்தைகட்கு அவரவர்கள் விருப்பம் போல் வரன்கள் அமையப்பெற்று அத்தம்பதியர் சகல செல்வ யோக மிக்க பெரு வாழ்வு வாழ கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
பூனே மும்பை மற்றும் தூர இடங்களில் இருந்து வரும் அன்பர்கள் இன்றே ரயிலில் ரிசர்வேசன் செய்து விட வேண்டுகிறேன். இப்போதெல்லாம் 120 நாட்கட்கு முன்னரே ரிசர்வேசன் செய்ய வசதி உள்ளது. இந்த செய்தியை படிக்கும் அன்பர்கள் மெயில் வசதி உள்ள மற்ற அன்பர்களுக்கு இச்சேதியை FORWARD செய்ய வேண்டுகிறேன். இது பற்றி இனி வரும் நாட்களில் நிறையவே பேசிக்கொண்டே இருப்போம்.
குருவருளும் திருவருளும் நமக்கு பக்க துணையாய் இருந்து இச்செயலை செய்து தர பிரார்த்தனை செவோம்.
குருவருளும் திருவருளும் நமக்கு பக்க துணையாய் இருந்து இச்செயலை செய்து தர பிரார்த்தனை செவோம்.
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்
No comments:
Post a Comment