குரு மஹிமை... இசை.... பெஹாக் ராகம் பகுதி 1
"துப்பாரப்பா" என்று தொடங்கும் பாடல்
திருத்தணி திருத்தலம்
பாடலின் பொருளை மிக அருமையாக விளக்குகிறார்
அருளாளர் புனே ஜானகி மாமி
முருகா சரணம்.
-
"துப்பா ரப்பா " என்று தொடங்கும் திருத்தணித் தலப் பாடல் .
இதன் சந்தம் தத்தா , தத்தா , தத்தா , தத்தா , தத்தா தனனத் தனதான
இதன் சந்தம் தத்தா , தத்தா , தத்தா , தத்தா , தத்தா தனனத் தனதான
சந்தத்திற்காகச் சொற்கள் பிரிந்து பிரிந்து வர அர்த்தத்திற்காக அவற்றைப் பொருத்த வேண்டும் பகுதி, பகுதியாகப் பார்ப்போம்.
"துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால் சொற்பா வெளி முக் குணமோகம்"
பிரித்துப் பார்த்தால் --- "துப்,பார், அப்பு, ஆடற் தீ, மொய்க்கால், சொற் பாவெளி, முக்குண மோகம்" _ -
பிரித்துப் பார்த்தால் --- "துப்,பார், அப்பு, ஆடற் தீ, மொய்க்கால், சொற் பாவெளி, முக்குண மோகம்" _ -
உணவளிக்கும் மண், நீர், அசைகின்ற தீச்சுடர், மேனியில் வந்து மோதும் காற்று, பரந்த திறந்த வெளி யாம் வானம் , ஆகிய ஐந்து பூதங்களும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களும், மண், பெண், பொன் என்ற மூன்று ஆசை களும்
" துற்றா யப்பீ றற்தோ லிட்டே சுற்றா மதனப் பிணி தோயும் "
பிரிக்கும் பொழுது , "துற்றாயப், பீறல், தோலிட்டே, சுற்றா, மதனப் பிணி தோயும் "
பிரிக்கும் பொழுது , "துற்றாயப், பீறல், தோலிட்டே, சுற்றா, மதனப் பிணி தோயும் "
மேலே சொன்ன, பஞ்ச பூதங்களும் நெருக்கமாய் வைக்கப்பட்டுக் கந்தல் போல் ஒன்பது வாசல் கொண்ட தோலால் சுற்றப்பட்டு, காம நோய், கொண்டதாக உள்ள - - _
இப்பா வக்கா யத்தா சைப்பா டெற்றே யுலகிற் பிறவாதே"
பிரிக்கும் பொழுது "இப் பாவக், காயத்து, ஆசைப்பாடு எற்றே, உலகிற் பிறவாதே" - -
இப்பா வக்கா யத்தா சைப்பா டெற்றே யுலகிற் பிறவாதே"
பிரிக்கும் பொழுது "இப் பாவக், காயத்து, ஆசைப்பாடு எற்றே, உலகிற் பிறவாதே" - -
இந்தப் பாவம் நிறைந்த உடல் மீது ஆசை வைத்து, அந்த ஆசையெனும் வாசனையுடன் , உலகில் , மீண்டும், மீண்டும் வந்து நான் பிறக்காமல்
எத்தார் வித்தா ரத்தே கிட்டா எட்டா அருளைத் தர வேணும்.
பிரித்தால் "எத்தார்,வித்தாரத்தே , கிட்டா, எட்டா, அருளைத் தர வேணும். _
உன்னைத் துதிக்காதவர்கள், எத்தனை, கல்வி கேள்வி க ளில், சிறந்த, வித்தகர்களாக இருந்தாலும், அவர்களுக்குக் கிடைக்காத உன் பேரருளைத் தர வேண்டும். (பக்தி இல்லாத கல்வி அறிவால் ஒரு Uயனும் இல்லை என்கிறார்)
"தப்பா மற்பா டிச்சே விப்பார் தத் தாம் வினயைக் களைவோனே" பிரித்தால் :
"தப்பாமற் , பாடிச் சேவிப்பார், தத்தாம் , வினையைக் களைவோனே"
அனுதினமும், உன்னைத் தவறாமல் பாடிப் பணிவோருக்கு, அவரவர்
முந்தைவினைகளை முற்றிலும் நீக்குபவனே
முந்தைவினைகளை முற்றிலும் நீக்குபவனே
" தற்கா ழிச் சூர் செற்றாய் மெய்ப் போ தத்தாய் தணிகைத் தனிவேலா"
பிரிப்போம் :
பிரிப்போம் :
தற்கு, ஆழிச் சூர் , செற்றாய் மெய்ப் போதத்தாய் தணிகைத் தனி வேலா" _
தற்பெருமையும், தன் ஆணைக்கு உட்பட்ட சக்கரமும் கொண்டு, ஆணவத்துடன் போர் புரிந்த சூரனை அழித்தாய். மெய்யறிவு என்பது உன்னைஅறிவதுசிவஞானம்என்பது உன்னைஉணர்வது..தணிகைமலையில் கோயில் கொண்ட, தன்னிகரில்லா வடிவேலா.
"அப்பா கைப் பா லைப் போல் சொற் காவற் பா வைதனத் தணைவோனே"
சர்க்கரைப் பாகு போலவும், பாலைப் போலவும் பேசுகின்ற , தினைப் புனம் காக்கின்ற வள்ளியை , அன்புடன் அணைப்ப வனே,
"அத்தா, நித்தா, முத்தா, சித்தா, அப்பா, குமரப் பெருமாளே"
ஐயனே, நித்திய சத்தியமே, முக்தி தருபவனே, அடியார் சித்தத்தில் உறைபவனே, என்அப்பனே, குமரா சரணம். _
ஜானகி ரமணன்.
ஜானகி ரமணன்.
"பங்கையனார் " என்று தொடங்கும் பாடல்
காளஹஸ்தி திருத்தலம்
பாடலின் பொருள் விளக்கம்
"கருமமான " என்று தொடங்கும் பாட ல் காஞ்சிபுரம் திருத்தலம்
பாடலின் பொருள் விளக்கம்
http://www.kaumaram.com/thiru/
முருகா சரணம்
அகம் மகிழ்விக்கும் பெஹாக் ராகப் பாடல்கள்!
ReplyDelete