Thursday, 1 September 2016

திருப்புகழ் பன்னாட்டு சொத்து





                                                     திருப்புகழ் பன்னாட்டு சொத்து 


நமது குருஜியின் அவதார தினம்  04.09.2016 அன்று அமைகிறது.இந்த சந்தர்ப்பத்தில் அருளாளர் அய்யப்பன் அவர்கள் அனுப்பியுள்ள அருமையான செய்தியை அன்பர்களுடன் பகிந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

திருப்புகழை நாதஸ்வரம்,புல்லாங்குழல்,வீணை,வயலின் போன்ற   இசைக்கருவிகளில்  கேட்டு அனுபவிப்பது நமக்கு பழக்கமான ஒன்றுதான்.நாதஸ்வர கலைஞர்கள் "எலுப்புத்தோல் " என்று தொடங்கும் பாடலை சிந்துபைரவியில் இழைக்கும் போது  மயங்காதவர்கள் இல்லை.

 திருப்புகழ் இசை இப்பொழுது மேற்கித்திய இசைக்கருவியான " பியானோ "வையும் விட்டு வைக்க வில்லை.இசைப்பவர்களும் மேற்கிந்தியவர்கள்.அந்த வகையில்    "திருப்புகழ் பன்னாட்டு சொத்து "என்ற நிதர்சனமான உண்மையை உணர்ந்து . குருஜியின் வழியில்"பாவம் ,கமகம் "நிறைந்துள்ள இசையை அனுபவிப்போம். 

அருளாளர் ஐயப்பனின் செய்தி கீழே.

"நமது குருஜியின் அவதார தினம் இதோ 04.09.2016 அன்று. . நம்மை மேன்மேலும் திருப்புகழில் திளைக்க வைக்க அவரை வேண்டுவோம் அன்று. திருப்புகழ் பாடுவோம். அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை உள் வாங்கி அதன் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்வோம்.

அவரைப் போற்றும் வகையில் ஒரு குறு கண்காட்சியை அவரது மருமகனாரான திரு கணேஷ் அவர்கள் டெல்லியிலிருந்து அனுப்பி இருக்கிறார். அதை இதோ உங்களுக்கு அனுப்பியுள்ளேன். 

ஒரு வெளி நாட்டு அன்பர் பியானோவில் "விந்ததின் ஊறி"  எனத் தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழை வாசித்துப் பாடி இருக்கிறார். அவ்வள்வு ஊன்றி வாசித்துள்ளார். திருப்புகழ் பன்னாட்டு சொத்து என்பதற்கு இதை விட் வேறு ஒரு சான்று உண்டோ?"

முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

                                                                     இசை 

                                                https://youtu.be/xF1G1Xml16I

1 comment:

  1. வெளி நாட்டு அன்பர் பியானோவில் "விந்ததின் ஊறி" எனத் தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழை வாசித்துப் பாடி இருப்பது சிந்தைக்கும் செவிக்கும் சீரிய விருந்து.

    ReplyDelete