Wednesday, 9 December 2015

குரு மகிமை இசை சுத்த தன்யாசி ராகப் பாடல்கள்



                       குரு மகிமை  இசை  சுத்த தன்யாசி  ராகப் பாடல்கள


பிள்ளைத் தமிழ் இலக்கியம்!
பிள்ளைத்தமிழ் இலக்கியமானது, தமிழில் (96) தொன்னூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும்.

பிள்ளைத் தமிழ் இலக்கியமானது,
இறைவனையோ, இறைவனை ஒத்த சிறப்புடைய மானிடரையோ சிறு குழந்தையாய் பாவித்து அவர்கள் மேல் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியம் ஆகும்.

குழந்தையும் அழகு, தமிழும் அழகு; அழகான குழந்தையை அழகியத் தமிழில் பாடப்படும் இந்த பிள்ளைத் தமிழ் இலக்கியம் பேரழகு மிக்கது. அதைப் படிக்கும் போது நமக்குள்ளேயே தாய்மைப் பொங்கிவருவதை உணராது இருக்க முடியாது.


பிள்ளைத் தமிழ் இலக்கியமானது 

1. ஆண்பால் பிள்ளைத் தமிழ்;

2.பெண்பால் பிள்ளைத தமிழ் என இரண்டு வகைப்படும்.

ஆண்பால் பிள்ளைத் தமிழ்:

1. காப்பு,2. செங்கீரை,3. தால்,4. சப்பாணி,5. முத்தம்,6. வாரானை,7. அம்புலி,8. சிற்றில்,9. சிறுபறை,10. சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களையுடையது.

பெண்பால் பிள்ளைத் தமிழ்:


காப்புப் பருவம் முதல் அம்புலி பருவம் ஈறாக உள்ள ஆறு பருவங்களும் இருபாலார்க்கும் பொதுவானது; ஆண்பால் பிள்ளத் தமிழில் கடைசியாக உள்ள சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் மூன்று பருவங்களுக்குப் பதிலாக

8. கழங்கு,9. அம்மானை10. ஊசல் ஆகிய மூன்று பருவங்களும் பெண்பால் பிள்ளைத் தமிழில் வரும்.


விளக்கம்:


1. காப்புப் பருவம் - இது குழந்தையின் இரண்டாவது மாதத்தில் பாடுவது.
எந்த குழந்தையாயினும் முதலில் அதற்கு எந்த தீங்கும் நேர்ந்திடா வண்ணம், சிவன், பார்வதி, விநாயகர், திருமால், முருகன் என்று பலத் தெய்வங்களும் குழந்தையைக் காக்க வேண்டி,அவர்கள் மீது பாடல்கள் பாடி, குழந்தைக்குக் காப்பிட வேண்டும்.

2. செங்கீரைப் பருவம் - இது குழந்தையின் ஐந்தாம் மாதத்தில் பாடுவது.
இந்த பருவத்தில், குழந்தை ஓரளவு தவழவும் முயற்சிக்கும். 

அதாவது, குழந்தை தன் ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி, இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித் தலையை நிமிர்த்தி முகமாட்டும் பருவம். குழந்தை இவ்வாறு செய்யும் போது, அது செங்கீரைக் காற்றில் ஆடுவது போன்று மிகவும் அழகாக, மனமும் அதோடு சேர்ந்து ஆடுற மாதிரி இருக்கும்.

3. தாலப் பருவம் - இது குழந்தையின் ஏழாம் மாதத்தில் பாடுவது.
தால்~நாக்கு. தாய் தன் தாலை ஆட்டிப் பாடும் போது, நாக்கின் அசைவுகளைக் குழந்தைகள் கவனித்துக் கேட்கும்.(தாலாட்டுப் பாடும் பருவம்)

4. சப்பாணிப் பருவம் - இது ஒன்பதாம் மாதம் பாடப்படும்.
சப்பாணி என்றால் - கைகளைத் தட்டுதல்; குழந்தைத் தன் இரு கைகளையும் ஒன்றாகச் சேர்த்துத் தட்டி ஆடும் பருவம்.

5. முத்தப் பருவம் - இது குழந்தையின் பதினோறாம் மாதத்தில் பாடுவது.
பெற்றோர், தங்களுக்கு முத்தம் தருமாறு குழந்தையிடம் கெஞ்சும் பருவம்.

6. வாரானைப் பருவம் (வருகை) - இது குழந்தையின் 13ம் மாதத்தில் பாடுவது. குழந்தை தன் ஒரு வருட காலத்தின் நிறைவில் அவர்கள் செய்யும் சாகசம், தளிர் நடைப் போடுதல்.

ஓரளவு நடக்கத் தெரிந்த தன் குழந்தையை, தாய் தன் இரு கைகளையும் முன்னே நீட்டி, தன்னிடம் நடந்து வருமாறு அழைக்கும் பருவம்.

7. அம்புலிப் பருவம் - இது குழந்தையின் பதினைந்தாம் மாதத்தில் நிகழ்வது.

அம்புலி என்றால் நிலா. நிலவை நோக்கிக் கை நீட்டி, தன் குழந்தையுடன் விளையாட வருமாறு அம்புலியை அழைக்கும் பருவம்.

8. சிற்றில் பருவம் - இது குழந்தையின் பதினெட்டாம் மாதத்தில் பாடப்படுவது.

ஆண்பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் வேறுபடுவது இந்த பருவத்தில் இருந்துதான். 

(சிற்றில் - சிறு+இல் - சிறிய வீடு)பெண்பிள்ளைகள் மணலில் சிறுவீடு கட்டி விளையாடும் பொழுது, அவர்கள் மண்வீட்டைத் தன் சிறு பொற் பாதத்தால் உதைத்துக் கலைக்கும் பருவம்.


9. சிறுபறைப் பருவம் - இது குழந்தையின் பத்தொன்பதாம் மாதத்தில் பாடப்படும்.

ஒரு சிறிய பறையையும் குச்சியையும் வைத்து பறை கொட்டி விளையாடும் பருவம்.

10. சிறுதேர் பருவம் - இது குழந்தையின் இருபத்திஒன்றாம் மாதத்தில் பாடப்படுவது.

இப்பல்லாம்,  குழந்தைகள் கடைக்குப் போனாக் கூட, அம்மா க்கா..., க்கா.... அப்படின்னு ஒரே அடம் பண்ணுவதை . அதாவது கார் வேணுமாம். 'க்கா ன்னா கார்'. என்பதைக் காணலாம்.

அந்த காலத்துல கார் இல்லாததால தேர். பொம்மைத் தேரை உருட்டி விளையாடும் பருவம்.

பெண்பால் பிள்ளைத் தமிழ்:

கழங்காடல் - அதாவது, தாயக்கட்டை மாதிரி ஒன்ன வெச்சுக்கிட்டு உருட்டி விளையாடுவது.


அம்மானை ஆடல் அம்மானை ன்னா பந்து. பெண்பிள்ளைகள் ஒரு பாட்டு பாடிக் கொண்டே பந்து விளையாடுவாங்க. அப்பொழுது பாடும் பாட்டு 'அம்மானைப் பாட்டு'.


ஊசலாடும் பருவம்ஊஞ்சல் ஆடி விளையாடும் பருவம்.


அதுமட்டுமல்லாது, நீராடல் பருவம் என்றும் ஒரு பருவம் உண்டு.இவை அனைத்தும் ஒரு பொதுவான பருவம் தான் என்றாலும், அவ்வப் பொழுது வெவ்வேறு பருவங்களும் சேர்த்து, வெவ்வேறு பருவ காலத்தில் பிள்ளைத் தமிழ் பாடுவர்.

எப்படி இருந்தாலும், குழந்தையின் இரண்டாம் மாதம் முதல் இருபத்தி ஒன்றாம் மாதம் வரை உள்ள இந்த பத்துப் பருவங்களும் பிள்ளைத்தமிழ் பாடும் பருவங்களாகும். 


நம் குருஜி நம் முருகனை குழைந்தையாக பாவித்து பாடியுள்ள ஒரு பிள்ளைத்தமிழ் பகுதியைவிருத்தமாகப்பாடிஅனுபவித்திருக்கிறார்.அருள் விளக்கமும் அளித்துள்ளார்.அனுபவிப்போம். 


பாடல் வரிகள்.



கமலமட மங்கை வதனத்தழகு காண்பள்; அக் கரிய முகில் வண்ணனும் செங் கண்ணழகு காண்பன்! வளர் கலைவாணி சொல்லழகு காண்பள்! முக்கண் தாதையும் விமலமுறு சொற்பொருளின் அழகு காண்பன்; விதி வியன் கரத்தழகு காண்பான்! வீறு தோள் அழகிந்திராணி காண்பாள்! உம்பர் வேந்து வேல் அழகு காண்பான்; நிமலமன அடியார் அடி அழகு காண்பார்! கவுரி நின்று பின்னழகு காண்பாள்! நின்னொத்த தித்தன் வடிவழகு காண்பன்! ஒரு நீயுமவருடன் குழுமியே அமலமென் னகையழகு காணலாம்! சமயமீ தம்புலீ யாட வாவே! அம்புய தடங் குலவு கம்பை வளர் கந்தனுடன் அம்புலீ யாட வாவே!"



                                                                      விருத்தம்


                                                                               
                                                                     விளக்கம்


                                                                           

                

         மற்றும் "வண்டுபோல் சாரத்தருள் தேடி "  என்று தொடங்கும் பாடல் 


                                                  திருவெஞ்சமாக்கூடல் திருத்தலம்

 இத் தலம் கரூர் ரயில் நிலையத்துக்குத் தெற்கே 12 மைலில் உள்ளது.

                                                        முருகன் -ஆறுமுகம் 
                                                         ஈஸ்வரன் -கல்யாண விக்ருதீஸ்வரர் 
                                                        அம்பிகை -மதுர சுபாஷினி 


                                                                      கோபுர தரிசனம்     


                                                                                  




                                                               

                                                       குருஜியின் குரல் இசையில் 
ரல் இசையிலம 


                                                    "இருக்கும் காரண" என்று தொடங்கும் பாடல்


                                                                               
                                                  "தலை வலையத்து "என்று தொடங்கும் பாடல்
                                 
                                                   https://www.youtube.com/watch?v=KMwKGpfmVRM                           

 
                                                                      முருகா சரணம் 




1 comment:

  1. உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் பிள்ளைத் தமிழ் இலக்கிய, பருவ விளக்கம்; சுகமான சுத்த தன்யாசிப் பாடல்கள்!

    ReplyDelete