குரு மஹிமை இசை நாட்டைக்குறிஞ்சி ராகப் பாடல்கள்
விருத்தம்
"ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் " என்று தொடங்கும் பாடல்
தேவனூர் திருத்தலம்
தேவனூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு வடகிழக்கில் 5 மைல்
தொலைவில் திருக்கோவிலூருக்கு 2 மைலில் உள்ள தலமாகும்.
இப்பொழுது கோயில் பாழடைந்த நிலைமையில் உள்ளது.உள்ளே விக்ரகங்கள் ஒன்றும் இல்லை.
மேலும் விபரம் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
பாடலில் முதல் வரிகள் 96 தத்துவங்களை குறிக்கின்றன.
ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும்
ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் அறுநாலும் ஆறுமாய ... மொத்தம்
தொண்ணூற்றாறு (6+6+5+5+6+6+5+5+6+6+5+5+24+6=96) ஆகிய
சஞ்சலஞ்கள் ... துன்பங்களுக்கு காரணமான தத்துவங்களுக்கும்*
96 தத்துவங்கள் பின்வருமாறு:
36 பரதத்துவங்கள் (அகநிலை):
ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.
ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை):
மண், தீ, நீர், காற்று, வெளி.
ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
"ஆறுமுகம் " என்று தொடங்கும் பாடல்
பழனி திருத்தலம்
"சுருதிமுடி "என்று தொடங்கும் பாடல்
பழனி திருத்தலம்
"ஆணாத பிறவி" என்று தொடங்கும் பாடல்
சுவாமிமலை திருத்தலம்
"ஈனமிகுத்த" என்று தொடங்கும் பாடல்
அறுபடை வீடுகளில் அருள்பாலிக்கும் நம் பெருமானை போற்றும் ஒரே பாடல்
"திரைவஞ்ச" என்று தொடங்கும் பொதுப் பாடல்
முருகா சரணம்
கேட்டைக் களையும் நாட்டைக்குறிஞ்சி ராகப் பாடல்கள் - வருத்தம் தீர்க்கும் விருத்தம்! தேவனூர் திருத்தலக் கோவிலின் தற்போதைய நிலைமை தருவது துயரம்!
ReplyDeleteதத்துவ விளக்கம் தரமான தகவல்!