கந்த சஷ்டி விழா இசை வழிபாடு வழக்கம்போல் பூஜைகளுடன் தொடங்கி சிறப்பாக நடை பெற்றது.அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் .குறிப்பிடதக்க அம்சம் மராத்தி மொழியை தாய் மொழியாகக்கொண்ட சாகர் என்ற அன்பர் "தாரணிக்கதி பாவியாய் '
பாடலை பாடி அன்பர்களை ஆனந்தக்கடலில் ஆழ்த்தினார்.வழிபாட்டின் இடையில் பேசுவதை தவிர்க்கும் குரு பாலு சார் அன்று சாகரின் ஈடுபாட்டையும்,வழிபாடுகளில் தவறாமல் கலந்து கொள்ளும் கட்டுப்பாட்டையும் ,தமிழ் உ ச் சரிப்பையும் சிலாகித்து பாராட்டினார்.
மற்றொரு சிறப்பு அம்சம் . இசை வழிபாடு நூலின் 10ம் பதிப்பு வெளியீட்டு விழா, முதல் பிரதி நம் அமைப்பின் நிறுவனர் அமரர் சுப்ரமணிய ஐயரின் துணைவி லக்ஷ்மி அம்மையாருக்கு, .அவர் தள்ளாமை காரணமாக நிகழ்ச்சிக்கு வர இயலாத காரணத்தால்,அவர் இல்லத்திலேயே வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மற்ற பிரதிகள் மும்பை அன்பர்களிலேய மிக மூத்த வயதினர்களான மங்களம் சேஷன் அம்மையாருக்கும்,திருவாளர் ரங்கநாதனுக்கும் வழங்கப்பட்டன .
மங்களம் சேஷன் அம்மையார்:
பிரார்த்தனையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment