Tuesday, 20 May 2014

வைகாசி விசாகம் 2014

வைகாசி விசாகம் முருகனின் அறுபடை வீடுகளிலும் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதாரம் செய்த நாளாகும். ஆறு நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்தது விசாகம். இதனால் முருகப் பெருமானும் ஆறு முகங்களோடு திகழ்கிறார் என்பது ஐதீகம். கந்தனாகிய சக்தி வெளிப்பட்ட திருநாள். அதனால் விசாகன் என்பதும் முருகனுடைய திருப்பெயர்களில் ஒன்று. தாவரங்களும், விலங்குகளும், மனிதர்களும் ஓன்றே என்ற உண்மையின் தத்துவத்தை விளக்குதலே இந்நாளின் சிறப்பாகும். ஆறுமுகன் அவதாரம் “அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்ம ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய" என்று முருகப் பெருமானின் அவதாரத்தை கந்தபுராணம் கூறுகிறது. அசுரசக்திகளை அழிக்க பரமனின் நெற்றிக்கண்ணில் உதித்த சக்திச் சுடர்களை அக்னிதேவன் கங்கையில் சரவணப் பொய்கையில் இட, அங்கு தோன்றினர் ஆறு குமாரர்கள். கார்த்திகைப் பெண்கள் அவர்களைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். அதனால் அக்னிகர்ப்பன், காங்கேயன் (கங்கையின் மைந்தன்), சரவணன் (சரம் என்ற நாணல் புதர்கள் மண்டிய பொய்கையில் அவதரித்தவன்), கார்த்திகேயன் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவன்) ஆகிய திருநாமங்களால் முருகப் பெருமானை வணங்குகிறோம். பரம்பொருளாகிய பிரம்மமே திருமுருகனாகி உலகைக் காக்கின்றது. சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்றது என்பதனை, “ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே" என்று அருணகிரியார் பாடுவார். மாசியில் சிவபிரான் மன்மதனை எரித்துப் பின்னர் உயிர்ப்பித்த காமதகனம் (ஹோலி, காமன் பண்டிகை). பின்னர் பங்குனி உத்திரம், சித்திரா பௌர்ணமியில் சிவ-பார்வதி திருக்கல்யாணம். வைகாசி விசாகத்தில் குமரன் உதயம். அழகாக, தொடர்ச்சியாக இந்த தெய்வத் திருவிழாக்கள் வருகின்றன. அறுபடை வீடுகளில் திருவிழா ஆறுபடைவீடுகளிலும் விசாகத்திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்கின்றனர். இரண்டாம் படை வீடான கடலாடும் திருச்செந்தூரில் விசாகப் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வசந்த விழாவாக கொண்டாடப்படும் ப‌த்து நா‌ட்களு‌ம், முருக‌ப் பெருமானு‌க்கு ‌சிற‌ப்பு பூஜைக‌ள் நடைபெறு‌ம். மாலை‌யி‌ல் ‌திரு‌‌வீ‌தி உலாவு‌ம் நடைபெறு‌ம். அத‌ன்படியே, முருக‌ப் பெருமா‌ன் மாலை‌யி‌ல் ‌சிற‌ப்பு பூஜைக‌ள் நட‌ந்த ‌பி‌ன்ன‌ர் வச‌ந்த ம‌ண்டப‌த்தை 11 முறை வல‌ம் வருவா‌ர். சுவா‌மி வச‌ந்த ம‌ண்டப‌த்தை சு‌ற்‌றி வல‌ம் வரு‌ம் போது ஒ‌வ்வொரு சு‌ற்றுக‌ளி‌ன் முறையே வேதபாராயண‌ம், தேவார‌ம், ‌திரு‌ப்புக‌ழ், ‌பிர‌ம்ம தாள‌ம், ‌ந‌த்‌தி ம‌த்தள‌ம், ச‌ங்கநாத‌ம், ‌பி‌ள்ளை‌த் த‌மி‌ழ், நாகசுர‌ம், ‌வே‌ல்வகு‌ப்பு, ‌வீர வா‌ள் வகு‌ப்பு, க‌ப்ப‌ல் பா‌ட்டு உ‌ள்‌ளி‌ட்ட பா‌ட‌ல்க‌ள் இசை‌க்க‌ப்படு‌ம். “துள்ளியோடும் மீன்களின் விளைடாட்டால் செந்தூரின் வயல்கள் அழிந்தன. அவன் கடம்பமலர் மாலையின் மயக்கும் வாசத்தால் பூங்கொடிபோன்ற பெண்கள் மனம் அழிந்தது. மயிலேறிவரும் அந்த மாவீரனின் வேல் பட்டு கடலும், மலையும், சூரனுமாய் வந்த அசுர சக்திகள் அழிந்தன. அவன் திருவடிகள் பட்டு பிரமன் என் தலைமேல் எழுதியிருந்த தலையெழுத்து அழிந்து விட்டது" என்று அருணகிரிநாதர் முருகனை வணங்கித் தான் உயர்வு பெற்றதைக் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கம்போல் நம்  வைகாசி விசாகம்11.06.14 புதன் கிழமை அன்று காலை 8.00 மணி சுப்ரமணிய சஹஸ்ரநாம அர்ச்சனையுடன் தொடங்கி சுப்ரமண்ய புஜங்கம் பாராயணம் முடிந்தபின், திருப்புகழ் இசை வழிபாடு நடைபெறும். அன்பர்கள் முன்னதாகவே வந்து அர்ச்சனையில் கலந்துகொள்ள வேண்டுகின்றோம். அன்பர்களின் வசதிக்காக சுப்பிரமணிய புஜங்கத்தின் மூலம்,பொருள்  தமிழிலும் ஆங்கிலத்திலும் Link கீழே கொடுத்துள்ளோம்.

சுப்பிரமணிய புஜங்கம்  மூலம் 



பொருள் தமிழில் (கவிதை வடிவில் )



Meaning  in English
  


இசை வடிவில் பாராயணம் 




அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது




கௌமாரம், சிருங்கேரி இணைய தளத்துக்கு இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்குகொள்கிறோம்..

முருக சரணம்!

Tuesday, 29 April 2014

செம்பூர் செட்டாநகர் திருப்புகழ் வகுப்பு -வெள்ளி விழா

மும்பையில் 40க்கும் மேற்பட்ட திருப்புகழ் வகுப்புக்கள் நடை பெற்று வருவது அன்பர்கள் அறிந்ததே.வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் பல இன்னல்களை மேற்கொண்டு வகுப்புக்களை தவறாமல் நடத்தி வருகிறார்கள்.அதை நன்கு உணர்ந்த அன்பர்களும் தவறாமல் கலந்துகொண்டு ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள்.இது ஆசிரியர்களுக்கு மிக்க மன மகிழ்ச்சியை அளித்து வருகிறது.

அத்தகைய வகுப்புக்களில் ஒன்று செட்டாநகர் பகுதியில் 25 ஆண்டுகளாக நடை பெற்று வரும் வகுப்பு 24.3.1989 புனித வெள்ளி அன்று தொடங்கப்பட்ட வகுப்பு பல சிறப்புக்கள் கொண்டது.பாலு சார்/மாமி இருவரும் கற்பிக்கும் ஒரே வகுப்பு. இதில் கலந்துகொள்வது தங்கள் பாக்கியம் என்றே மாணவர்கள் உணர்ந்து கற்று வருகிறார்கள் இடையில் வகுப்புக்கு விடுமுறை என்பதே கிடையாது.சார்/மாமி தவிர்க்க முடியாத காரணங்களால் வர முடியா விட்டால் மற்ற ஆசிரியர்கள் நடத்துகிறார்கள்.சொல்லப்போனால் சில ஆசிரியர்களே இங்கு மாணவர்கள்.செம்பூர் பகுதிகளுக்கு  வர நேரும்  மற்ற ஆசிரியர்களும், அன்பர்களும் வகுப்பில் கலந்து கொள்வதை தங்கள் முதல் கடமையாக கருதுகிறார்கள்.மற்றும் பாடல்களுக்கு வகுப்பு மாணவர்கள் சிலர்  அவ்வப்போது பொருள் /விளக்க வுரை கூறி மற்றவர்களின் பாராட்டுக்களை பெறுகிறார்கள்.

வகுப்பின் ஆண் டு  விழா ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி யன்று வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு வெள்ளி விழாவாக அமைந்ததால்  மிக சிறப்பாக வழிபாட்டுடன் கொண்டாடப்பட்டது. அஹமதாபாத் குடி பெயர்ந்துள்ள கல்யாணி மாமி கலந்து கொண்டது அன்பர்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது.சார்/மாமி கௌரவிக்கப்பட்டார்கள்.

செம்பூர் /காட்கோபர்  பகுதில் உள்ள மற்ற அன்பர்களும் ,குறிப்பாக  இளைய தலைமுறையினரும் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பெருமான் அருள்பெற வேண்டுகிறோம் .

முகவரி 

Smt. Brinda Karthik
3.Vanamaali Bldg
Cheddanagar
Mumbai 400089
 Tel.25258215

சில புகைப்படங்கள் அன்பர்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளன.









Thursday, 10 April 2014

பங்குனி உத்திரம் 2014

              
‪‎பங்குனி‬ உத்திரம் இந்த வருடம் (13.4.2014) அன்று வருகிறது

பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு மிக்க விரதமாகும். இவ்விரதமானது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திரத்தில்கடைப்பிடிக்கப்டுகின்றது.
(தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம்).எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தில் முருகன் கோயில்களில் அநேகமாக வருடாந்த திருவிழாக்கள் (மஹாற்சவம்) நடைபெறும்.

#பங்குனி ‪#‎உத்திர‬ நன்னாளில் சிறப்புக்கள்.

1. இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்த நன்நாள்.
2. காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது.
3. பங்குனி உத்தரத்தில் தான் தர்ம சாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் அவதரித்தார்.
4. சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார்.(ரதியின் பிரார்த்தனைக்குஇணங்க மன்மதனை சிவன் உயர்பித்த நாளும் இதுதான்).
5. பக்தியுள்ள கணவர் கிடைக்க தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பாவை என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள்.
பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்தரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார். (இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம்.)
6. மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள் இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.
7. மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்ததும், ராமர்,லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்ததும், திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமணம் நடந்ததும். ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்ததும் சிறப்பு மிக்க பங்குனி உத்தர நன்னாளில்தான்.
8. பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன் பிறந்ததும், இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்ததும் பங்குனி உத்தரம் அன்றுதான்.
9. திருமண மாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம் 

பக்தர்கள் தங்களை வருத்திக்கொண்டு நேர்த்திக்கடனை இந்நாளில் செலுத்துவதும் உண்டு.சென்னையில் சென்ற ஆண்டு நடைபெற்ற காட்சியைப்பாருங்கள்.



 நம்முடைய வழிபாடு வழக்கம்போல் செம்பூர் சங்கராலயத்தில் 13.4.2014 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு நடை பெறுகிறது. அழைப்பிதழ் இணைத்துள்ளோம். அன்பர்கள் பெருமளவில் கலந்துகொண்டு முருகன் அருள் பெற வேண்டுகிறோம்.
 

Monday, 24 March 2014

நெடிய மலை முருகன் கோயில்

இது ஒரு மலைக்கோவில், திருத்தணியிலிருந்து சுமார் 20 கிமி தொலைவில் நகரிக்கு பக்கத்தில் உள்ளது. அருணகிரியார் திருத்தணியையும் நெடியத்தையும் சேர்த்தே பாடியுள்ளார் எனை அடைந்தகுட்டம் எனத் தொடங்கும் திருத்தணி திருப்புகழில். முருகப் பெருமானை "  நிலைபெறும் திருத்தணியில் விளங்கி சித்ர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே " என்கிறார். நெடியத்தைத் தரிசித்தப் பிறகே திருத்தணியை தரிசிக்க வேண்டும் என்பது ஒரு நடைமுறை வழக்கம்.

அண்மையில் அருளாளர் ஐயப்பன் அன்பர்களுடன் தரிசனம் செய்ததை அபிஷேக ஆராதனைகளுடன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.விஷேசம். குருஜி மும்பை படிவிழாவில் (26.1.1984 )நெஞ்சுருகி  சீர்பாத வகுப்பை விருத்தமாக சிந்து பைரவியில் பாடியுள்ளதை கேட்டுக்கொண்டே நாமும் தரிசனம் செய்வோம்.

அவர் அனுப்பியுள்ள குருஜியின் மற்றொரு குருஜியின் விருத்தத்தையும் கேட்டு அனுபவிப்போம். அருளாளர் ஐயப்பனுக்கு நன்றி கூறத்தேவையில்லை .அருள் வேண்டுவோம்.

Thursday, 20 March 2014


திருப்புகழ் பாடல்கள் 431முதல் 475 வரை இணைய தளத்தில்

 சென்னை அருளாளர்G .V  நீலகண்டன் அவர்கள் அன்பர்களின் சௌகரியம் கருதி ,குருஜி கற்பிக்கும் திருப்புகழ் பாடல்கள் 431முதல் 475  (7ம் பதிப்பு இசை வழிபாடு நூல்  எண் வரிசை)வரை இணைய தளத்தில் அளித்துள்ளார்கள்.அவற்றை எளிமையாக பதவிறக்கமும் ( download)செய்யலாம்.அதன் தொடர்பு குறி கீழே 

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற குறிக்கோளுடன் பெருமானின் கட்டளையுடன் இயங்கும் அருளாளர் நீலகண்டனுக்கு தலை வணங்குகிறோம்.அவரிடமிருந்து அடுத்து ,476--503 பாடல்களின் பதிவை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.

Comments are welcomeand may be given  if desired

Monday, 17 March 2014

கந்தர் அலங்காரம்

திருப்புகழ்அன்பர்களில்பலர்அயராதுபாடுபட்டுஅன்பர்களின்சௌகரியத்துக்காக பலஅரியதொண்டுகளிலஈடுபட்டுள்ளார்கள்.அவ்வகையில் அருளாளர் சித்ரா மூர்த்திஅவர்கள்  மிக அழகாக பதம் பிரித்து  தக்க உச்சரிப்புடன் எளிய முறையில் "கந்தர் அலங்காரம்" பாடல்களை  "முருகன் பக்தி" இணைய தளத்தின் மூலம்  வெளியிட்டுள்ளார்கள்.அதன் link கீழே கொடுத்துள்ளோம்


அன்பர்கள் கேட்கும் போதும்.தாங்கள் அவ்வாறு படிக்கும் போதும்,பாராயணம் செய்யும் போதும்   உட் பொருளையும்  கூடவே அனுபவிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

அன்பர்கள்  பெருமளவில் பயன்படுத்தவும் தங்களின் மேலான கருத்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவிக்க வும் வேண்டுகிறோம்.