பங்குனி உத்திரம் இந்த வருடம் (13.4.2014) அன்று வருகிறது
பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு மிக்க விரதமாகும். இவ்விரதமானது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திரத்தில்கடைப்பிடிக்கப் டுகின்றது.
(தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம்).எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தில் முருகன் கோயில்களில் அநேகமாக வருடாந்த திருவிழாக்கள் (மஹாற்சவம்) நடைபெறும்.
#பங்குனி #உத்திர நன்னாளில் சிறப்புக்கள்.
1. இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்த நன்நாள்.
2. காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது.
3. பங்குனி உத்தரத்தில் தான் தர்ம சாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் அவதரித்தார்.
4. சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார்.(ரதியின் பிரார்த்தனைக்குஇணங்க மன்மதனை சிவன் உயர்பித்த நாளும் இதுதான்).
5. பக்தியுள்ள கணவர் கிடைக்க தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பாவை என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள்.
பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்தரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார். (இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம்.)
6. மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள் இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.
7. மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்ததும், ராமர்,லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்ததும், திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமணம் நடந்ததும். ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்ததும் சிறப்பு மிக்க பங்குனி உத்தர நன்னாளில்தான்.
8. பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன் பிறந்ததும், இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்ததும் பங்குனி உத்தரம் அன்றுதான்.
9. திருமண மாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்
பக்தர்கள் தங்களை வருத்திக்கொண்டு நேர்த்திக்கடனை இந்நாளில் செலுத்துவதும் உண்டு.சென்னையில் சென்ற ஆண்டு நடைபெற்ற காட்சியைப்பாருங்கள்.
நம்முடைய வழிபாடு வழக்கம்போல் செம்பூர் சங்கராலயத்தில் 13.4.2014 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு நடை பெறுகிறது. அழைப்பிதழ் இணைத்துள்ளோம். அன்பர்கள் பெருமளவில் கலந்துகொண்டு முருகன் அருள் பெற வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment