Tuesday, 20 May 2014

வைகாசி விசாகம் 2014

வைகாசி விசாகம் முருகனின் அறுபடை வீடுகளிலும் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதாரம் செய்த நாளாகும். ஆறு நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்தது விசாகம். இதனால் முருகப் பெருமானும் ஆறு முகங்களோடு திகழ்கிறார் என்பது ஐதீகம். கந்தனாகிய சக்தி வெளிப்பட்ட திருநாள். அதனால் விசாகன் என்பதும் முருகனுடைய திருப்பெயர்களில் ஒன்று. தாவரங்களும், விலங்குகளும், மனிதர்களும் ஓன்றே என்ற உண்மையின் தத்துவத்தை விளக்குதலே இந்நாளின் சிறப்பாகும். ஆறுமுகன் அவதாரம் “அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்ம ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய" என்று முருகப் பெருமானின் அவதாரத்தை கந்தபுராணம் கூறுகிறது. அசுரசக்திகளை அழிக்க பரமனின் நெற்றிக்கண்ணில் உதித்த சக்திச் சுடர்களை அக்னிதேவன் கங்கையில் சரவணப் பொய்கையில் இட, அங்கு தோன்றினர் ஆறு குமாரர்கள். கார்த்திகைப் பெண்கள் அவர்களைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். அதனால் அக்னிகர்ப்பன், காங்கேயன் (கங்கையின் மைந்தன்), சரவணன் (சரம் என்ற நாணல் புதர்கள் மண்டிய பொய்கையில் அவதரித்தவன்), கார்த்திகேயன் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவன்) ஆகிய திருநாமங்களால் முருகப் பெருமானை வணங்குகிறோம். பரம்பொருளாகிய பிரம்மமே திருமுருகனாகி உலகைக் காக்கின்றது. சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்றது என்பதனை, “ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே" என்று அருணகிரியார் பாடுவார். மாசியில் சிவபிரான் மன்மதனை எரித்துப் பின்னர் உயிர்ப்பித்த காமதகனம் (ஹோலி, காமன் பண்டிகை). பின்னர் பங்குனி உத்திரம், சித்திரா பௌர்ணமியில் சிவ-பார்வதி திருக்கல்யாணம். வைகாசி விசாகத்தில் குமரன் உதயம். அழகாக, தொடர்ச்சியாக இந்த தெய்வத் திருவிழாக்கள் வருகின்றன. அறுபடை வீடுகளில் திருவிழா ஆறுபடைவீடுகளிலும் விசாகத்திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்கின்றனர். இரண்டாம் படை வீடான கடலாடும் திருச்செந்தூரில் விசாகப் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வசந்த விழாவாக கொண்டாடப்படும் ப‌த்து நா‌ட்களு‌ம், முருக‌ப் பெருமானு‌க்கு ‌சிற‌ப்பு பூஜைக‌ள் நடைபெறு‌ம். மாலை‌யி‌ல் ‌திரு‌‌வீ‌தி உலாவு‌ம் நடைபெறு‌ம். அத‌ன்படியே, முருக‌ப் பெருமா‌ன் மாலை‌யி‌ல் ‌சிற‌ப்பு பூஜைக‌ள் நட‌ந்த ‌பி‌ன்ன‌ர் வச‌ந்த ம‌ண்டப‌த்தை 11 முறை வல‌ம் வருவா‌ர். சுவா‌மி வச‌ந்த ம‌ண்டப‌த்தை சு‌ற்‌றி வல‌ம் வரு‌ம் போது ஒ‌வ்வொரு சு‌ற்றுக‌ளி‌ன் முறையே வேதபாராயண‌ம், தேவார‌ம், ‌திரு‌ப்புக‌ழ், ‌பிர‌ம்ம தாள‌ம், ‌ந‌த்‌தி ம‌த்தள‌ம், ச‌ங்கநாத‌ம், ‌பி‌ள்ளை‌த் த‌மி‌ழ், நாகசுர‌ம், ‌வே‌ல்வகு‌ப்பு, ‌வீர வா‌ள் வகு‌ப்பு, க‌ப்ப‌ல் பா‌ட்டு உ‌ள்‌ளி‌ட்ட பா‌ட‌ல்க‌ள் இசை‌க்க‌ப்படு‌ம். “துள்ளியோடும் மீன்களின் விளைடாட்டால் செந்தூரின் வயல்கள் அழிந்தன. அவன் கடம்பமலர் மாலையின் மயக்கும் வாசத்தால் பூங்கொடிபோன்ற பெண்கள் மனம் அழிந்தது. மயிலேறிவரும் அந்த மாவீரனின் வேல் பட்டு கடலும், மலையும், சூரனுமாய் வந்த அசுர சக்திகள் அழிந்தன. அவன் திருவடிகள் பட்டு பிரமன் என் தலைமேல் எழுதியிருந்த தலையெழுத்து அழிந்து விட்டது" என்று அருணகிரிநாதர் முருகனை வணங்கித் தான் உயர்வு பெற்றதைக் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கம்போல் நம்  வைகாசி விசாகம்11.06.14 புதன் கிழமை அன்று காலை 8.00 மணி சுப்ரமணிய சஹஸ்ரநாம அர்ச்சனையுடன் தொடங்கி சுப்ரமண்ய புஜங்கம் பாராயணம் முடிந்தபின், திருப்புகழ் இசை வழிபாடு நடைபெறும். அன்பர்கள் முன்னதாகவே வந்து அர்ச்சனையில் கலந்துகொள்ள வேண்டுகின்றோம். அன்பர்களின் வசதிக்காக சுப்பிரமணிய புஜங்கத்தின் மூலம்,பொருள்  தமிழிலும் ஆங்கிலத்திலும் Link கீழே கொடுத்துள்ளோம்.

சுப்பிரமணிய புஜங்கம்  மூலம் 



பொருள் தமிழில் (கவிதை வடிவில் )



Meaning  in English
  


இசை வடிவில் பாராயணம் 




அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது




கௌமாரம், சிருங்கேரி இணைய தளத்துக்கு இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்குகொள்கிறோம்..

முருக சரணம்!

No comments:

Post a Comment