அபிராமி அந்தாதி - 34
வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,
பைந்தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந்தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே :
அன்பரின் விளக்கவுரை
இந்தப் பாடலில், பட்டர் நமக்கு, அன்னையின் ஸ்வரூபத்தினை அழகாகக் காட்டுகிறார்
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம் தந்தே பரிவொடு - தன் திருவடிகளை வந்தடைந்த அடியார்களுக்கு அன்னையின் பரிவோடு வானுலகம் தந்து
யார் யாரையோ தேடிப் போகாமல் தாய் உள்ள இடத்தை அறிந்து வந்துசரணம் புகுகிறவர்கள் அடியார்கள். தாயினிடம் ஓடிவந்து காலக் கட்டிக்கொள்ளும் குழந்தையை அன்னை உடனே எடுத்துக் கொஞ்சுவாள். அவர்களுடைய பழைய நிலையை யும் இப்போதுள்ள ஆர்வத்தையும் கண்டு அன்னை பரிவோடு நோக்குகிருள். இவர்கள் சில காலம் இந்தப் போகத்தை நுகரட்டும் என்று அமரல்ோக வாழ்வை அருளுகிருள். பக்தர்களுக்கு இனிய போக வாழ்வைத் தருகிறவள் அன்னை!!
தான் போய் இருக்கும் - (அன்னை அபிராமி) என்றும் இருக்கும் (இடங்கள்):
அன்னை என்பது யார்? எங்கெல்லாம் அவள் இருக்கிறாள்? யாராகவெல்லாம் அவள் இருக்கிறாள்?
சதுர்முகமும் - வேதங்களை ஓதி உலகங்களை எல்லாம் படைக்கும் நான்முகனின் திருமுகங்கள் (கலைமகளாக).
சதுர்முகமும் - வேதங்களை ஓதி உலகங்களை எல்லாம் படைக்கும் நான்முகனின் திருமுகங்கள் (கலைமகளாக).
லலிதா ஸஹஸ்ரநாமத்தில எப்படியெல்லாம் அன்னையை அர்ச்சனை பண்ணுகிறார்கள் வாக்தேவதைகள்னு பார்ப்போமா!!
ஸஹஸ்ராராம்புஜாரூடா (105) .
ஸஹஸ்ரதள பத்மஸ்த்தா ( 528) என்ற திருநாமங்கள் அன்னைக்கு உரியவைஆயின.
452.தேஜோவதி - தேஜஸ்ஸை உடையவள்.
ஸஹஸ்ரதள பத்மஸ்த்தா ( 528) என்ற திருநாமங்கள் அன்னைக்கு உரியவைஆயின.
452.தேஜோவதி - தேஜஸ்ஸை உடையவள்.
117. பக்த ஸௌபாக்யதாயினி - பக்தர்களுக்கு ஸௌபாக்கியத்தைத் தருபவள்
201. ஸக்கதிப்ரதா - நல்ல கதியை வழங்குபவள்.
692 ஸாம்ராஜ்யதாயினீ - பக்தர்களுக்கு ஸாம்ராஜ்யத்தைக் கொடுப்பவள்.
675. ப்ராஹ்மீ - ப்ரம்மாவின் பத்னீயான ஸரஸ் திவாக்வடிவானவள்.
675. ப்ராஹ்மீ - ப்ரம்மாவின் பத்னீயான ஸரஸ் திவாக்வடிவானவள்.
704. ஸரஸ்வதி - ஞான அபிமான தேவியான ஸரஸ்வதியாக இருப்பவள்.
313. ரமா - லஷ்மீ ரூபமாக இருப்பவள்
313. ரமா - லஷ்மீ ரூபமாக இருப்பவள்
892. வைஷ்ணவி - விஷ்ணுவின் சக்தியாக இருப்பவள்.
265. ப்ரஹ்மரூபா - ப்ரஹ்மாவின் வடிவமாயிருப்பவள். படைக்கும் தொழிலைச் செய்யும் ப்ரஹ்மா பரம்பொருளின் வடிவமான தேவியின் மாயையினால் வேறுபடுத்திக் காட்டப்பட்ட உருவம்.
266. கோப்த்ரீ - காத்தல் என்ற தொழிலைச் செய்கிறவள்.படைக்கப்பட்ட ப்ரபஞ்சத்தை தேவி தன்னுடைய ஸத்வகுண ப்ரதானமான வடிவினால் காக்கிறாள்.
269. ருத்ர ரூபா - ருத்ரன் வடிவானவள். பரம்பொருளான தேவியின் தமோகுணம் மிகுந்த வடிவு ருத்ரன். இது உலகை ஸம்ஹாரம் செய்கிறது.
ஆக அன்னை அபிராமி, பிரம்மனின் திருமுகங்களிலும், திருமாலின் மார்பிலும், சிவபெருமான் இடது பாகத்திலும், பொற்தாமரையிலும், கதிரவனிலும், சந்திரனிடத்தும் போய்த் தங்குகிறாள் என்று ஆறு இடங்களைச் சொல்லுகிறார்.
சிவன் அக்னியில் சிகையிலிருப்பதாகவும், அம்பாள் சந்த்ரமண்டலத்திலிருப்பதாகவும் சிவபுராணம் கூறுகிறது. ' சந்த்ர மண்டலமே ஸ்ரீ சக்ரம். ஸ்ரீ சக்ரமே அன்னை என்பது ரஹஸ்யம்.
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் -
நறுந்தேன் நிரம்பிய மலர்களால் ஆன மாலைகளும் பெரிய மாணிக்க மாலைகளும் விளங்கும் திருமாலின் நெஞ்சகமும் (திருமகளாக)
பாகமும் - சிவபெருமானின் உடலில் ஒரு பாகமும்
பாகமும் - சிவபெருமானின் உடலில் ஒரு பாகமும்
பொற் செந்தேன் மலரும் - பொன்னிறத்துடன் நறுந்தேனை உடைய தாமரை மலரும்
அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே
அடுத்து சொல்வது, சூரியனும், சந்திரனும், பகலில் சூரியன் ஒளி தருகிறான். இரவில் சந்திரன் ஒளி வீசுகிறான். இவை காலம் தவறாமல் தன் கடமையைச் செய்கின்றன. இந்நிலையில் சிறிது தவறினாலும் பிரபஞ்சத்தின் போக்கில் பெரிய மாறுதல்களும், துன்பங்களும் உண்டாகும். இந்த இரண்டு மண்டலங்களும் வழுவாமல் ஒளி வழங்குவதற்கு காரணம் இவற்றினூடே அன்னை அபிராமி இருந்து இயங்குவது தான்னு சொல்றார்.
பாடலை குருஜி கற்பிக்கிறார் இசையுடன்
அன்பர்கள்
அன்பர்கள்
அபிராமி சரணம் சரணம்
முருகா சரணம்
No comments:
Post a Comment