Tuesday, 3 July 2018

சுப்ரமண்ய புஜங்கம் 19


                                                                         சுப்ரமண்ய புஜங்கம்   19
                                                                                                


                                                                             कुमारेशसूनो गुह स्कन्द सेना-
                                                                             पते शक्तिपाणे मयूराधिरूढ ।
                                                                              पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन्
                                                                              प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥  १९ ॥

                                                            குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா
                                                             பதே சக்தி பாணே மயூராதிரூட |
                                                             புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்
                                                             ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் ||

இது முருகனுடைய நாமங்களை கூறும் ஸ்லோகம்..மந்திரம்.குமரனை அவன் பெயர்களால்  அர்ச்சிக்கிறார். 

 குமார= குமரக் கடவுளே, 
‘குமார: ங்கறது பன்னிரண்டு வயது பிள்ளையை குமாரன்னு சொல்லுவா. அப்படி முருகப் பெருமான் பிறந்து ஒரே நாள்ல குமாரனாக வளர்ந்து, தேவர்களுக்கு சேனாதிபதியா அவருக்கு பட்டாபிஷேகம் பண்ணி வச்சா. பார்வதி தேவி கொடுத்த சக்தி ஆயுதம், வேலை எடுத்துண்டு போய், அசுரர்களோடு யுத்தம் பண்ணி சூரபத்மனை வதம் பண்ணறார். அந்த குமரா-ங்கறது 

ஈஷஸுனோ= ஈசனின் புதல்வனே, 


‘ஈஷ:’ ன்னா உலகத்துக்கே தலைவன் பரமேஸ்வரன் ன்னு 

 ‘ஸூனு:’ அவருடைய குழந்தை 

ஸ்கந்த= கந்தனே, பக்தர்களுடைய பாபங்களை போக்குபவர், முக்தி என்ற பரம புருஷார்த்தத்தை அளிப்பவர்.

‘ஸேனாபதே’ தேவர்களுடைய சேனைக்கு அதிபதியா இருந்தவர். தேவஸேனாங்கற இந்திரனுடைய பெண், ஐராவதம் வளர்த்த அந்த தேவசேனையினுடைய பதி கணவர்ங்கற அர்த்தத்திலேயும்  ‘ஸேனாபதே’.  


‘சக்திபாணே’ அம்பாள் கொடுத்த சக்தி ஆயுதம் வேலாயுதத்தை கையிலே வச்சிண்டிருக்கார். 


‘மயூரதிரூட’  வேதமாகிய மயிலின் மேல் அமர்ந்திருப்பவர் 
,
‘புளிந்தாத்மஜாகாந்த’ புளிந்தன் என்ற வேடனுடைய பெண் வள்ளியினுடைய கணவன்.

‘பக்தார்த்தி ஹாரின்’ ஆர்த்தி-ன்னா கஷ்டம், பக்தர்களுடைய கஷ்டங்களை போக்குபவர்

 ப்ரபோ,தாரகார= = ப்ரபுவே, தாரகனை வதைத்தவனே,

 ‘மாம்  ஸதா த்வம் ரக்ஷ’ நீ என்னை எப்பொழுதும் காப்பாற்ற வேண்டும்.

சுப்ரமண்ய புஜங்கத்தைக் கோயமுத்தூரைச் சேர்ந்த 'கவியரசு' என்ற பேரறிஞர் அவர்கள் அழகாகத் தமிழில் வடித்துள்ளார். 'கவியரசு' அவர்கள் சங்கரரது செளந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, சிவபாதாதி கேசாந்தவர்ணனம், சிவகேசாதி பாதாந்த வர்ணனம் முதலிய தோத்திரத் தொகுப்புக்களை யாப்புடனமைந்த மிக அழகான தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.).

 இந்த ஸ்லோகத்துக்கு அவருடைய தமிழாக்கம் 

                                                   குமாரா சிவன்சேய் குறக்கன்னி நாதா
                                                   குகாகந்த சேனாப தீசத்தி பாணீ
                                                   எமார்வ ப்ரபோ தாரகாரீ மயூரா
                                                   இனாநீவு வாய்செந்தி லாயஞ்ச லென்னே.
 


பொருள்       

மாரன் என்ற மன்மதனை வென்ற குமரா! சிவகுமாரா! குறவள்ளியின் கணவனே! ஆன்மாக்களின் இதய தாமரைக் குகையில் வாழ்பவனே! ஆறு குழந்தைகளும் ஒன்றாகத் திரட்டப்பட்டுக் கந்தன் என்ற திருப்பெயருடன் வழங்குபவனே! தேவசேனாபதியே! பராசத்தியின் வடிவாகிய சத்தி வேலினைக் கையில் ஏந்தியவனே! எம்முடைய அன்பினை உடைய பிரபுவே! தாரகாசூரனை அழித்தவனே! மயில்வாகனனே! என்று நாமங்கள் பல ஓதித் தொழுவாரின் துன்பங்களை நீக்குபவனே!. செந்திலாதிபனே! என்னை அஞ்சல் என்று அருள்வாயாக.

குமரன் - என்றும் இளையோன், மாரனைத் (மன்மதன்) தாழ்வுசெய்தவன்; அஞ்ஞானத்தை அழிப்பவன் எனப் பலபொருள்கள் தரும். சிவன் சேய் - 'சிவனின் சேய்' என்றும் 'சிவனே சேயாக வந்தவன்' என்றும் பொருள்படும்
.


கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றிகள் பல 


அருணகிரி நாதர் எத்தனையோ பாடல்களில் முருகப் பெருமானுடைய நாம மஹிமையை பத்தி சொல்லி இருக்கார்.
கந்தர் அலங்காரத்தில் 
"முருகனுடைய திருநாமத்தைச் சொல்பவர்கள் ,’முடியாப் பிறவிக் கடலில் புகார்’. திரும்ப வந்து இங்க பிறக்க மாட்டார்கள். அவர்கள் முக்தி அடைவார்கள். ‘முழுதும் கெடுக்கும் மிடியால் படியில் விதனப் படார்’. நம்மை முழுதும் கெடுக்கக் கூடிய வறுமையோட வாசல்ல நிற்க வேண்டிய நிலை  வந்தாலும் துவண்டு போக மாட்டார்கள் ." என்கிறார்.
“முருகன், குமரன், குகன், என்று மொழிந்து "கந்தர் அநுபூதியில் 
பிள்ளையார்பட்டி திருப்புகழில் 12நாமங்கள் த்வாதச நாமார்ச்சனையாக அருளியுள்ளார
1)சரவணஜாதா நமோ நம
2) கருணை அதீதா நமோ நம
3)சததள பாதா  நமோ நம
4)தருணக தீரா நமோ நம
5)நிருபம வீரா  நமோ நம
6)சமதளவூரா நமோ நம  
7) பரம சொருபா நமோ நம
8)சுரர்பதி பாலா நமோ நம
9)பரிமளநீபா நமோ நம
10)பகவதிபாலா நமோ நம
11)இகபர முலா நமோ நம
12)பவுருஷ சீலா நமோ நமோ  

                                             முருகா சரணம் 


No comments:

Post a Comment