அபிராமி அந்தாதி ....33
அன்பரின் விளக்க உரை
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே
அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே -
அத்தனாம் (தந்தையாம்) சிவபெருமானுடைய சித்தம் எல்லாம் குழையும் படி செய்யும் மணம் வீசும் குவிந்த முலையை உடைய இளையவளே! மென்மையானவளே!
இங்கு அத்தன் என்றால் தந்தை என்று பொருள்.
அத்த சித்தமெல்லாம் என்பதை அத்தர்+சித்தம்+எல்லாம் எனப்பிரிக்க வேண்டும். 'தந்தை மனம் முழுதும்'
களபம் என்றால் சேறு, சாந்து என்று பொருள். இங்கே மஞ்சள், குங்குமம் மற்றும் சந்தனம் கலந்த மணங்கமழ் சாந்து என்ற பொருளில் வருகிறது.
அந்தச் சித்தமெல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே!
பிரபஞ்சத்தின் தந்தை சிவபிரான்; அவன் என் அத்தன். அப்பெருமானின் உள்ளம் குழைந்து மனம் நெக்கு உருகச் செய்பவள் யாமளை! அதற்குக் காரணம் நறுமணக் கலவை பூசி அவளை நெகிழ வைப்பவை அவளது அழகான குவிந்த தனபாரங்களே! அப்பெருமாட்டி இளைய மெல்லியள் ;
சியாமளைக் கோமளமே! ( கோமளம் - இளமை; மாணிக்க வகை) . ' யாமளையே! ' என்று தன் கவிவெண்பாவில் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் குறிப்பிடுவார். யாமளை - சிவனோடு ஐக்கியமாய் இருக்கும் வடிவம்.
அன்னையின் அவ்விரு தனங்களும் பர, அபர ஞானங்களே ஆதலின் ' பவித்ர, பயோதரம் ' எனப்பட்டது".
உன்னையே அன்னையே என்பன்
அம்மா ' என்று கூப்பிட்ட குரலுக்கு ( காத்திருப்பவள்போல) ஓடிவருபவள் அவள். ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ' ஸ்ரீமாதா ' என்று ஆரம்பிக்கிறது. 1000 - வது நாமமாக ' லலிதாம்பிகா ' அம்பாளின் முத்திரையோடு லலிதமாக பூரணமாகிறது. மனதிற்கு சந்தோஷம் கொடுக்கும் எல்லா பாவங்களும் லலிதம் என்று சொல்லப்படும் ( அதாவது ப்ரகாசம், தோற்றம், இனிமை, ஆழம், ஸ்திரத்தன்மை, சக்தி, நளினம், தாராளம். )
823- ஜனனீ - தாயார் சகல ஜகத்தையும் சிருஷ்டிக்கிறள் தகப்பனால் தன் சரீரத்தில் சேர்க்கப்பட்ட சுக்லத்திற்கு கருவாக உருக்கொடுப்பவள்.
457. மாதா - கருவை தன்னுள் அடக்கி வைத்து காப்பாற்றுபவள்.
(அடைகாப்பது போல்)
826. ப்ரசவித்ரீ - தக்க தருணத்தில், தேவையான அளவுக்கு கரு வளர்ந்த பிறகு, அதை வெளியில் கொண்டு வந்து விடுபவள்.
337. விதாத்ரீ - சிசுவை போஷித்து வளர்ப்பவள்.
935. ஜகத்தாத்ரீ - உலகத்தை தாங்குபவள்.
985. அம்பா - ஆபத்து வேளையில் தானே வந்து விடுபவள்.
295. அம்பிகா - சிறந்த தாயாக இருப்பவள்.
நித்திரையையும், ஓய்வையும் தருபவள்.
934. விஸ்வமாதா - உலகம் அனைத்திற்கும் அன்னையானவள்.
உலகமனைத்தையும் ஈன்ற அன்னையை ஆப்ரஹம கீட ஜனனினும் ஸஹஸ்ரநாமாவுல வாக்தேவதைகள் சொல்லியிருக்கா.
நான் இழைக்கும் (செய்யும், செய்த, செய்யப் போகும்) நல்வினைத் தீவினைகளுக்கேற்ப எனை தண்டிக்கும் கால தேவன் (எமன்) நான் நடுங்கும்படி என்னை அழைக்கும் போது
எல்லாவற்றையும் வரையறுக்கும் விதியின் படி ( அடியேன் பல பிறவிகளில் இழைத்த வினையின் பயனாய்) கொல்ல வரும் காலன், என்னை நடுங்கச் செய்து அழைக்கும்போது, அடியேன் யமவாதனைப் பட்டு கலங்கும்போது உன்னைத்தான் ' அம்மா ' என்றுகூப்பிடுவேன்.
உழைக்கும் போது - அப்போது உயிரும் உடலும் ஊசலாடி நான் மரண வேதனையில் துன்புறும் போது
ஓடி வந்தே (வந்து) அஞ்சல் என்பாய்
என் முன்னே ஓடி வந்தே அஞ்சாதே என்று சொல்வாய்.
இந்த அந்தாதில பட்டர் சொல்லவரும் கருத்து என்னவென்றால்,
குழந்தை ஏதேதோ விளையாட்டு எல்லாம் விளையாடிண்டு இருக்கு. திடீர்னு அதுக்கு அம்மா நினைவு வந்ததும், அம்மான்னு சொல்லிண்டு அம்மாட்ட ஓடிப்போய் தஞ்சம் அடைந்துவிடும் இல்லையா? அதேபோல் தான் பட்டரும் தாயிடம் செல்லத் தவிக்கும் சேயைப் போல , அவள் குழந்தைகளாகிய நாம், அவளைப் பிரிந்து, இப்பிறவி எடுத்தோம் இல்லையா!! நாமும் சேயைப் போல, அவள் திருவடிகளுக்கு திரும்பச் சென்று விடவேண்டும் , என்பதையே பட்டர் இந்த அந்தாதில நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.
பாடலை குருஜி கற்பிக்கிறார் இசையுடன்
பாடலை குருஜி கற்பிக்கிறார் இசையுடன்
அன்பர்கள்
அபிராமி சரணம் சரணம்
முருகா சரணம்
No comments:
Post a Comment