சுப்ரமண்ய புஜங்கம் 21
முருகா சரணம்
चण्डेषु कोपाद्
दहच्छिन्द्धि भिन्द्धीति मां तर्जयत्सु ।
मयूरं समारुह्य मा भैरिति त्वं
पुरः शक्तिपाणिर्ममायाहि शीघ्रम् ॥२१॥
க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷுகோபாத்
தஹச்சிந்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு |
மயூரம் ஸமாருஹ்ய மாபைரிதி த்வம்
புர : ஸக்திபாணிர் மமாயாஹி ஸிக்ரம் ||
தஹச்சிந்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு |
மயூரம் ஸமாருஹ்ய மாபைரிதி த்வம்
புர : ஸக்திபாணிர் மமாயாஹி ஸிக்ரம் ||
க்ருதாந்த: னா எமன்,
‘க்ருதாந்தஸ்ய தூதேஷு’ – எமனுடைய தூதர்களால்,
அவா எப்படி இருக்கான்னா –
‘சண்டேஷு’ – ரொம்ப உக்ரமா இருக்கா, பயங்கரமா இருக்கா.
‘கோபாத்’ – அவா கோபத்தோடு ‘
தஹ’ – எரி இவனை.
‘ச்சிந்தி’ – வெட்டு,
‘பிந்தி’ – இவனை வெட்டி இரண்டா பிளந்து போடு.

இப்படியெல்லாம்
‘மாம் தர்ஜயத்ஸு’ – என்னை அதட்டி பயமுறுத்தி ஹிம்ஸை பண்றா. அப்போ
‘ஹே ஸ்வாமின்’ – ஹே குமாரக் கடவுளே ‘
த்வம்’ – நீ ‘சக்திபாணி’ கையில் வேலோடு
‘மயூரம் ஸமாருஹ்ய’ மயில் மேல் ஏறி என் முன்னாடி வந்து
‘மா பைஹி’ பயப்படாதே என்ற உபதேசத்தை பண்ணி ‘
இதி மம புர:’ என் முன்னாடி
ஷீக்ரம் ஆயாஹி= சீக்கிரம் வந்து அபயத்தைக் கொடு
‘மா பைஹி’ என்ற வார்த்தைகளைச் சொல்லி அபயம் கொடுன்னு கேட்கறார்
.இந்த பயப்படாதேன்னு குரு சொல்ற வார்த்தை அது சொன்ன நாள்லேயிருந்து உயிர் பிரியற நாள் வரைக்கும் கூட துணையாக நிற்கும். ‘பயந்த தனிவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே’ அப்டினு சொன்னா மாதிரி அந்த ‘மா பைஹி’ எங்கறது ஒரு மந்திரம். அது கொடுக்கற தைரியம், எத்தனை ஜன்மா வேணா எடுக்கலாம். அவ்ளோ தைர்யம் கொடுக்கும்.

இந்தக் கடைசிக் காலத்துல படுக்கையில படுத்த படற அவஸ்தையை முருகப் பெருமான் வந்து காப்பாத்தணுங்கிற வேண்டுதல் அருணகிரி நாதரும் சில பாடல்கள்ல சொல்லியிருக்கார்.
‘தலைவலி மருத்தீடு’ன்னு பழனித் திருப்புகழ் ஒண்ணு. பெரிய பாட்டு. அதுல பல விதமான வியாதிகள் வந்து அது ஒவ்வொண்ணுக்கும் பேர் வெச்சுடறா. வயசான காலத்தில காது கேட்க மாட்டேங்கிறது. கண் தெரிய மாட்டேங்கிறது. இப்படி இருக்கும் போது,
” …உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தே தொடா மாலிகாபரணம்
உனதடியினிற் சூடவே நாடு மாதவர்கள் இருபாதம்
உளமது தரித்தே வினாவோடு பாடியருள்
வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ
உரகமதெடுத்தாடும் ஏகார மீதின்மிசை. வரவேணும் ..”
வகைவகை யெடுத்தே தொடா மாலிகாபரணம்
உனதடியினிற் சூடவே நாடு மாதவர்கள் இருபாதம்
உளமது தரித்தே வினாவோடு பாடியருள்
வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ
உரகமதெடுத்தாடும் ஏகார மீதின்மிசை. வரவேணும் ..”
அழகான பூக்களை தேர்ந்து எடுத்துத் தொடுத்து, மாலையாக பண்ணி உன்னுடைய பாதத்துல போடறதில சந்தோஷப் படற அடியவர்களுடைய திருப்பாதங்களை என்னுள்ளத்தில் தரித்து, எனக்கும் அந்த பக்தி வருமா, மோக்ஷம் கிடைக்குமா, எனக்கும் அந்த முருகப் பெருமானுடைய பக்தர்கள் கூட்டத்தில் சேர முடியுமா அப்படின்னு ஏங்கி வேண்டிண்டு, அந்த தயவுக்காக காத்திருக்கும் எனக்கு உதவ, உரகமது (வாசுகி என்ற பாம்பை) எடுத்தாடும் அந்த மயில் ‘ஏ’கார மீதின் மிசை வரவேணும்ன்னு ஒரு பாட்டுல சொல்றார்.
பாடலை குருஜியுடன் சேர்ந்து இசைத்து அருள் வேண்டுவோம்
பாடலை குருஜியுடன் சேர்ந்து இசைத்து அருள் வேண்டுவோம்
"பஞ்ச பாதகம் உறுபிறை "எனத் தொடங்கும் பாடல்
நீடிய கருமுகில் உருவொடு பண்பிலாதொரு பகடது முதுகினல் யமராஜன் அஞ்சவே வரும்
அவதரம் அதிலொரு தஞ்சமாகிய வழி வழி அருள் பெறும்அன்பினால் உனதடி புகழடிமை என் எதிரே வரவேணும் எப்படி வரவேணும்..
அண்ட கோளகை வெடிபட இடிபட எண்டி சாமுக மட மட நடமிடும் அந்த மோகர மயிலின் இயலுடன் வர வேணும் "
பாடலை குருஜியுடன் சேர்ந்து இசைத்து அருள் வேண்டுவோம்
முருகா சரணம்
No comments:
Post a Comment