மும்பை பங்குனி உத்திர வைபவம் நிறைவு
மும்பை ஸ்ரீ ஹரிஹர புத்ர சமாஜத்தினர் ஒவ்வொரு ஆண்டும்
அய்யப்பன் அவதார தினமான பங்குனி உத்திரம் வைபவத்தை விமரிசையாக கொண்டாடும் தருணத்தில் திருப்புகழ் அன்பர்களை அன்புடன் அழைத்து ,திருப்புகழ் வழிபாடு நடத்தி அன்பர்களை கௌரவப் படுத்துவதை தங்கள் கடமையாகக் கொண்டு செயலாற்றி வருகிறார்கள்..வழக்கம்போல் இந்த ஆண்டு வழிபாடு மார்ச் 30ம் நாள் வெள்ளி திங்கள்மும்பை செம்பூர் சங்கராலயம் சன்னிதானத்தில் பிற்பகல் 4மணி அளவில் பூஜா விதிகளுடன் தொடங்கி மூன்று மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.மும்பையின் பல பாகங்களிருந்து அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அய்யப்பன் லட்சார்ச்சனையில் பூஜிக்கப்பட்ட திருவிளக்குகள் தொடர்ந்து சுடர் ஒளி வீசி பிரகாசித்து தெய்வீக சூழ்நிலையை உருவாக்கி வழிபாட்டு நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டின.
வழிபாட்டு முடிவில் சமாஜ் நிர்வாகிகள் பாலு சார் ,மாமி,மணிசார் மற்ற அன்பர்களுக்கும் ஆலய மரியாதை யுடன் கெளரவித்தனர்
அன்பர்கள் சார்பில் ஹரிஹர புத்ர சமாஜத்துக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
சில புகைப்பட காட்சிகள் அன்பர்களின் பார்வைக்காக
ஐயப்ப ஸ்வாமியின் ரத ஊர்வலம்
வழிபாட்டின் சில பகுதிகள்
Utube Link for ANDROID and IPAD PHONE
ஆடியோ மற்றும் புகைப்பட உதவி
அன்பர் கே. ஆர் .பாலசுப்ரமணியம் .மும்பை
முருகா சரணம்
No comments:
Post a Comment