Friday, 20 April 2018

அபிராமி அந்தாதி - 29



                                                                  அபிராமி அந்தாதி - 29

                                                                                           
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

அன்பரின் விளக்கவுரை 

சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், 
அபிராமித் தேவி! நீயே சகலத்திற்கும் சித்தியாவாய். அச்சித்தியைத் தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாய். பராசக்தியாகிய நீ கிளைத்தெழக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம் முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என் நின்று, சகல பந்தங்களினின்று, காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர்?



199. ஸர்வ ஸக்திமயீ - எல்லா சக்திகளையும் உடையவள்.
த்யானம், கீர்த்தனம், பூஜை முதலிய பக்திகளை செய்து பரதேவதையை த்ருப்தி படுத்திய
வர்களுக்கு ( அவர்கள் மூடர்களாய் இருந்தாலும் கூட) விரும்பிய ஸுகத்தை தருகிறவள் எனப்படுகிறது. ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் பூர்வ பாகத்தில் ' மங்களானாம் ச மங்களம் ' - என்பதையும் ஒப்பிடலாம். எல்லாப் பொருளும் அவள், எல்லாவற்றிற்கும் மூலமும், முடிவும் அவளே. அதாவது திரிபுரசுந்தரியாகிய அன்னை அபிராமி எல்லாமாகி இருக்கிறாள் என்பது கருத்து.

, சக்தி தழைக்கும் சிவமும்
சக்தியும் சிவமும் இணைந்து ஒன்றாயிருப்பர். சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சக்தியோடு சேர்ந்தே சிவம் தொழிற்படுகிறது. ' சிவமெனும் பொருளும் ஆதிசக்தியோடு சேரின் எத்தொழிலும் வல்லதாம். அவர் பிரிந்திடின் இயங்குவதற்கும் அரிதாம். ' என்று கூறுகிறது. - ஸௌந்தர்யலஹரி ( 1 ) " சிவசக்தியா யுக்தோ ". ( முன்னும் பார்த்தோம்)
சிவமூர்த்தி - சிவனையே தன் மூர்த்தியாகக் கொண்டவள். அதாவது, சிவபெருமானது திருஉருவமாக இருப்பவள். இதனையே மனதில் கொண்டு, '
சக்தி தழைக்கும் சிவமும் என்று பாடுகிறார் அபிராமபட்டர்.


, தவம் முயல்வார்
முத்தியும்,


முக்தியும் அவள் சொரூபந்தான்.இதை லலிதா ஸஹஸ்ரநாமம் ( 737) ' முக்திரூபிணீ - முக்தியையே ரூபமாக உடையவள். 736. முக்திதா - முக்தி அளிப்பவள், என்று கூறுகிறது.
இந்த சக்திதான், முக்தி வேண்டி நிற்போருக்கு, முக்தியும் அளிக்கிறது. முக்தி அளிப்பது மட்டுமல்ல. அந்தச் சக்தி இல்லையேல், அந்த முக்தி வேண்டி நிற்போ எப்படி தவம் செய்ய முடியும்? அப்படி, முக்தி அளிப்பது மட்டுமல்ல, அந்த முக்தி வேண்டுவோர் செய்ய்ய வேண்டிய தவமுமாகி, அந்தத் தவத்திற்கு வேண்டிய வித்தாய், அந்த முயற்சிக்கு மூலமாய் அமைகிறதும் அந்த சக்தியேதான்
தவம் செய்பவர்கள் அடையும் இலக்குகள் பல. சிலருக்கு இலக்கு, அந்தத் தவத்தின் வாயிலாக, பல சித்திகளை அடைதல். மற்ற சிலருக்கு இலக்கு, அந்த சித்திகளை அருளும் அந்த தெய்வத்தையே அடைவது. இன்னும் சிலருக்கோ, அந்த தெய்வம் தரும் முக்தியே குறிக்கோள்.


முக்திக்கு வித்தும் 

நம் அன்னை, அபிராமி, தவத்தின் பயனாய் மட்டுமில்லாது, அந்த தவமாகவும் அவளே இருக்கிறாள். அந்தத் தவத்தினை விளைவிக்கும் வித்துமாகவும் அவளே இருக்கிறாள்.


 வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும்,
,  அந்த முயற்கி ஏற்பட, முதலில் புத்தி வேண்டும் அல்லவா? அப்படி, இந்த சக்தியே, அந்த முயற்சி முதன் முதலில் எழும் புத்தியுமாகி இருக்கிறது.

இப்படி, சித்தியாகி, சித்தி தரும் சக்தியும் ஆகி, அந்தச் சக்தியும் கூட, சிவத்துடன் நின்று, அந்தச் சக்தி பெரும் தவமுமாகி, அந்தத் தவத்தினை விளவிக்கும் புத்தியுமாகி நிற்கும் இந்த பெரும் வடிவம் யார்?

அந்த முப்புரங்களும் கொண்ட திரிபுர சுந்தரியே அல்லவா?

ஸித்த வித்யா - ஸித்தமான ( சாஸ்வதமான) வித்யையாக இருப்பவள். மனனம் செய்பவரைக் காப்பாற்றுவது மந்த்ரம் எனப்படும். புருஷ தேவனாக இருந்தால் - மந்த்ரம் ஸ்த்ரீ தேவதை - வித்யை
473. ஸித்தமாதா - சித்தர்களுக்கு தாயாக, காப்பாற்றுபவளாக இருப்பவள். அன்னை அபிராமிக்கு, மேலே எந்த. சக்தியோ அல்லது எவரும் இல்லாதவள்.
572. பராஸக்தி - மிகவும் உயர்ந்த, மேலான சக்தி வடிவினள். ( பர - மிகவும் சிறந்த) சக்தியின் சேர்க்கையால் தான் சிவனுக்கு உத்கர்ஷம் ஏற்படுகிறது என்பது சாக்தர்களின் கொள்கை. பரா எனப்படும் மந்த்ரத்தின் சக்தி ரூபமாக இருப்பவள்.

 புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.
அம்பிகை அவரவர்களுடைய அறிவினுக்குள் இருந்து அதை அறியும்படி செய்கிறவள். அறிவு வயிரம் போன்றது. வயிரம் இருளில் ஒளிவிடாது. ஒளியில் மிகச்சிறந்து ஒளிரும். அதுபோல அறிவு ஒளிர்வது, அதனூடே அன்னை இருந்து அறிவிப்பதனால் தான். அறிவென்னும் விளக்குக்கு ஒளிதரும் சுடர் அவள். அறிவென்னும் மலரை மணக்கச் செய்கிறவள் அவள். மக்களுடைய புத்தியில் இருந்து பாதுகாக்கும் இறைவி அபிராமி புத்தியை மட்டுமா பாதுகாக்கிறாள்?
அவள் திருபுரங்களாகிய மூன்று மூன்று பொருள்களைப் புரக்கிறாள் ( காக்கிறாள்). அதனால் திரிபுரசுந்தரி என்ற திருநாமம் பெற்றுள்ளாள். இதையே கருத்தில் கொண்டு, அபிராமபட்டரும் ' - புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே ' - என்றார்.
இப்படி, முயற்சிக்கு உண்டான பலனாய் மட்டுமல்லாது, முயற்சியாகவும், அவளே இருக்கிறாள் ; முயற்சியாக மட்டுமல்லாது, அந்த முயற்சியை விளைவிக்கும் புத்தியும், அந்த புத்தியும் சிந்தனையும் விளையும் வித்தாகவும் கூட அவளே இருக்கிறாள் என்று மிக அழகாகச் சொல்லுகிறார் பட்டர்.



                                                                பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்



                                                                                                                     






                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHONE

                                                           https://youtu.be/YHaWpCuVxDs
                                                                        அன்பர்கள் இசைக்கிறார்கள் 

                                                                                                    



                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHONE


                                              அபிராமி சரணம் சரணம்!!
                                                    முருகா சரணம் 


No comments:

Post a Comment