விசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ்வஜஸ்ரம்
தயாஸ்யந்திஷு த்வாதசஸ் வீக்ஷணேஷு |
மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்
பவேத்தே தயாசீல கா நாமஹானி ||
தேதியூர் சாஸ்த்ரிகள் மஹாபாரதத்துலேர்ந்து ஒரு ஸ்லோகம் quote பண்ணியிருக்கார்.
பன்னிரண்டு கல்யாண குணங்கள் ப்ரம்ம நிஷ்டர்கள் கிட்ட இருக்கு. அதையெல்லாம் பக்தர்களுக்கும் முருகனுடைய பன்னிரண்டு கண்கள் கொடுக்கும்ன்னு சொல்றார்.
மோக்ஷ சாதனமான ஆத்மஞானம், சத்யவசனம், மனோநிக்ரஹம், வேதாந்த விசாரம், பொறாமை இன்மை, அதர்மத்தில் லஜ்ஜை, சீதோஷணாதிகளை ஸஹிப்பது, குணமுள்ள இடத்தில தோஷாரோபணம் செய்யாமல் இருப்பது, யாகம், ஸத்பாத்ர தானம், இந்த்ரிய நிக்ரஹம், சத்கர்மாவில் தைரியம்,
இந்த பன்னிரண்டு விதமான ப்ரம்ம நிஷ்டர்களுடைய கல்யாண குணங்களை தன் பக்தரிடத்தில் முருகப்பெருமான் வர்ஷிப்பார், அப்படீன்னு சொல்லி இந்த பன்னிரண்டு கண்களால் பன்னிரண்டு அனுக்கிரஹம் பண்ணுவார்-ன்னு பொருத்தமா ஒரு ஸ்லோகத்தை எடுத்து சொல்லி இருக்கார்.
ஆதி சங்கரர் இங்கு "முருகா, உனக்கு பன்னிரண்டு கண்கள் இருக்கு. எல்லா தெய்வங்களை விட அதிகமான கண்கள் உனக்குத் தான் இருக்கு. அதுவும் எல்லா கண்களும் விசாலமா காது வரை நீண்டு இருக்கு. அப்படி இருக்கும் போது, ஒரு கண்ணால, அது கூட முழு கண் இல்ல, கடைகண்ணால என்னை ஒரு பார்வை பார்த்தேயானால் நான் பிழைச்சு போயிடுவேன். உனக்கு அதனால ஒரு குறையும் இல்லையே அப்படீன்னு சொல்றார்.
தயாசீல
,
ஹே தயவே வடிவான ஸுப்ரமண்ய மூர்த்தியே,
விசாலேஷு
விசாலேஷு
‘விசாலேஷு’ உனக்கு பன்னிரண்டு கண்கள் இருக்கு. அதெல்லாம் விசாலமான கண்கள். எவ்வளவு விசாலமாக இருக்குன்னா
கர்ணாந்த தீர்க்கேஷ்வ
கர்ணாந்த தீர்க்கேஷ்வ
காது வரைக்கும் நீண்டிருக்கு உன் கண்கள்.
அஜஸ்ரம்
அஜஸ்ரம்
எப்பொழுதும்
தயாஸ்யந்திஷு
தயாஸ்யந்திஷு
’ தயை நிரமபி வழிந்து கொண்டிருக்கிறது. உன்னுடைய கடாக்ஷத்துலேருந்து கருணை பெருகி விழுந்துண்டே இருக்குங்கறார்,
த்வாதசஸ் வீக்ஷணேஷு |
த்வாதசஸ் வீக்ஷணேஷு |
உன்னுடைய பன்னிரண்டு கண்கள்லேர்ந்து,
யீஷத் கடாக்ஷ
ஒரு கொஞ்சம் ‘ஈஷத் கடாக்ஷ:’ கொஞ்சம் உன் பார்வையை, கடைக்கண் பார்வையை
‘மயி’
என்னிடத்தில்
‘ஸக்ருத்
ஒரே ஒரு தடவை,
பாதித
என்னிடத்தில்
‘ஸக்ருத்
ஒரே ஒரு தடவை,
பாதித
’ விழப் பண்ணினேனா, ஒரு தடவை கண்ணெடுத்து நீ என்னை பார்த்தாயேயானால், எனக்கு எல்லாமே கிடைச்சுடும்.
பவேத்தே தயாசீல கா நாமஹானி ||
பவேத்தே தயாசீல கா நாமஹானி ||
உனக்கு இதுனால ஒரு ஹானியும் வராதே. அதனால கொஞ்சம் தயவு பண்ணு’ முருகா ன்னு கேட்கறார்.
நமது அருணகிரிநாதர்
உறவின் முறை கதறி அழ ஊராரும்ஆசை அற எனத் தொடங்கும்
திருப்புகழில்
"உனது முக கருணை மலர் ஓராறும்
ஆறு இருகை திரள் புயமும்
எழில் பணி கொள் வார் காது நீள் விழியும் " ......
மதலை ஒரு குதலை அடி நாயேனை ஆள இஙன் வந்திடாயோ...
என்கிறார்.
இருவினையும் எனத் தொடங்கும் திருப்புகழில் கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே
என்கிறார்
தலைவலையத்து எனத் தொடங்கும் திருப்புகழில்
கருணை விழி கற்பகத் திகம்பரி எங்களாயி என்கிறார்
முருகனது மயிலையும் , அவன் திருக்கை அயிலையும், அவன் கடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமே ...
நீங்கள் வாருமே
முருகா சரணம்
முருகா சரணம்
No comments:
Post a Comment