வள்ளிகல்யாணம் சுவாமிமலையில்
இறையருளாலும் குருவருளாலும்,திருவருளாலும் அடுத்த வள்ளிகல்யாண வைபவம் அறுபடை வீடு சுவாமிமலையில் வரும் டிசம்பர் மாதம் 10 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் திருப்புகழ் அன்பர்களால் வெகு சிறப்பாக நடை பெற உள்ளது என்பதை மீண்டும்நினைவூட்டுகிறோம்.இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் அன்பர்கள் தயார் நிலையில் உள்ளார்கள் என்பதில் ஐயமில்லை.
திருப்புகழ் தொண்டர்கள் எல்லோருடைய ஒத்துழைப்பில் மட்டுமே நடை பெற உள்ள இந்த வைபவத்துக்கு அன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து குடும்பத்துடன் பெருமளவில் கலந்து கொண்டு வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானின் பேரருள் பெற வேண்டுகிறோம்.
அழைப்பிதழ்
இந்த சந்தர்ப்ப பத்தில்,அருணகிரியாரின் நவமணிகளாகத் திகழும் ஒன்பது படைப்புகளிலிருந்து எடுத்து தொகுக்கப் பட்டுள்ள வள்ளி கல்யாண பாடல்களின் (TEXT) தொகுப்பை அன்பர்களின் பயனுக்காக வழங்குகிறோம்.
புத்தகத்தொகுப்பின் முன்னுரையில் வள்ளி கல்யாண வைபவம் சிறப்பை போற்றியும் எப்படி மற்ற சம்பிரதாய பந்ததிகள்,பாடல்களிலிருந்து மாறுபட்டு தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் திருமணத்துக்கு தமிழ்ப் பாடல்களைக் கொண்டே நிகழ்த்த வேண்டும் என்ற அன்பர்களின் எண்ணத்தையும்,ஆசையையும் அற்புதமாக விளக்கியுள்ளார்கள்.
பாடல்களை பார்ப்போம்.
Kindly Click and you can view all 40 Pages of the Book
New Doc 2017-11-21 (5).pdf
மற்றும் குருஜி 2004ம் ஆண்டு பழனியில் நிகழ்த்திய வள்ளி கல்யாண வைபவத்தையும் அளிக்கிறோம்.
மற்றும் குருஜி 2004ம் ஆண்டு பழனியில் நிகழ்த்திய வள்ளி கல்யாண வைபவத்தையும் அளிக்கிறோம்.
U Tube Link for ANDROID and I PAD PHONE
முருகா சரணம்
No comments:
Post a Comment