Tuesday, 14 November 2017


    பிரம்மஸ்ரீ .அ.சு.சுப்பிரமணிய ஐயர் நூற்றாண்டு நினைவு விழா

                                               நிறைவு பகுதி ...2

                                                                         


 விழாவுக்கு சென்னை அன்பர் நீலகண்டனிடமிருந்து வந்த   வாழ்த்து செய்தியை மணிசார்  அன்பர்களுக்கு தெரிவித்தார்.


ஐயர் குடும்பத்தின் பிரதிநிதியாக  அன்பர் சுரேஷ்  விழா அமைப்பாளர் ரமேஷ் குடும்பத்தினருக்கும்,விழாவை சிறப்பாக நடத்த பல விதங்களில் உதவிய அனைவருக்கும் நன்றி செலுத்தினார்.


அதுவரை பலவித உணர்ச்சிக் கலவையில்    மெய் மறந்திருந்த அன்பர்கள் வழிபாடு தொடங்கும் நிலையில் தங்களை "தவமுறை த்யானம் "வைக்க தயாரானார்கள்.

வழிபாட்டைப் பற்றி பேசுவது நம் மரபு இல்லை என்றாலும் இங்கு சில குறிப்பிட்ட தகவல்களை கூற வேண்டியது கடமை என்ற அளவில் வெளிப்படுத்துகிறோம்.

மூன்றரை மணி நேரம் நீடித்த வழிபாட்டில் இடம் பெற்ற 12 விருத்தங்களும் அன்பர்களை நெகிழ வைத்து பெருமான் சந்நிதானத்துக்கு அழைத்துச் சென்றன.. அதில்  6 விருத்தங்களை  அய்யரவர்களது குடும்பத்தின் அன்பர்கள் இசைத்தார்கள் என்பது குறிப்பிடப்படவேண்டிய அம்சமாகும்.

"வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
     வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர

வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
     வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும்"


என்று மனம் உருகி அழைத்தபோது பெருமான் அன்பர்களின் மனக்கண்களின்  முன் தோன்றி அன்பர்களை பரவசப் படுத்தினான் .


பிரார்த்தனை,சாந்தி ஸ்லோகத்துடன் இனிதே நிறைவுற்றது.

வழிபாட்டை  முழுவதும் திரும்பவும் கேட்டு அனுபவிப்போம்.


                                                                                                        
                                                    

                                                             U Tube Link for  ANDROID  and   IPAD   PHONE

                                                                         https://youtu.be/MgKjpvp8clA  

விழாவில் பெருமளவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதோடு நம் கடமை முடிந்ததா ?இல்லை.மாறாக ஆரம்பம் தான்.அன்பர்கள் எல்லோருடைய மனத்திலும் நம் இயக்கத்தின் எதிர்காலம் பற்றி பெரும் கவலை பற்றியுள்ளது மறுக்க முடியாத உண்மை.குருஜியின் மீதுள்ள பக்தியாலும்,குருத்துவ தத்துவத்தினாலும்எண்ணற்ற  குடும்பங்கள் அவர்களது  சொந்தங்கள் எல்லோரும்முழுமையாக  இன்றளவும் இயக்கத்துக்கு தங்களை அர்ப்பணித்துள்ளார்கள்  என்பது கண்கூடு.அந்த வகையில் நாம் அடுத்த தலைமுறையினரை ஈடு படுத்த வேண்டியது நம் கடமை. அவர்களை வகுப்புக்களுக்கும்,வழிபாட்டுகளுக்கும் அழைத்துச் செல்வோம்.தினம் ஒரு திருப்புகழ் என்ற தத்துவத்தோடு பொருளுடன்,இசையுடன் கற்போம்.தற்போதுள்ள பல இணையதள வசதிகள்,மின்அனு சாதனங்களின்மூலமாகசுலபமாகவும்,விரைவாகவும் கற்போம். தொண் டர்களை உருவாக்கி மூத்த அன்பர்களின் சுமையை குறைப்போம்.இயக்கத்தை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்வோம்.


இதுவே நம் நிறுவனர் அய்யருக்கும்,குருஜிக்கு செலுத்தும் காணிக்கையாகும்.


முருகா சரணம்.
          

No comments:

Post a Comment