சுப்ரமண்ய புஜங்கம் ...10
ஸுவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்
க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்
லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம்
அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை
அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை
‘தே தீப்யமானாம்’ – உன்னோட ஒளி பொருந்திய
‘கடீம்’ கடீ ன்னா இடுப்பு.
‘பாவயே’ நான் த்யானிக்கிறேன்.
அந்த கடீயோட வர்ணணை எப்படி இருக்குன்னா
‘ஸுவர்ணாபதிவ்யாம்பரைஹி’... தங்க மயமான வஸ்த்ரங்களால் அந்த இடுப்பு மறைக்கப்பட்டு இருக்கு. இடுப்புல தங்க மயமான ஜரிகையெல்லாம் வெச்சு வேஷ்டி கட்டிண்டு இருக்கார்.
‘க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்’
சலங்கை கட்டின ஒரு மேகலை(,மேகலைன்னா இடுப்புல கட்டிக்கற ஒரு ஆபரணம். கடீ ஸுத்ரம் மாதிரி.)
அந்த சலங்கையோட மணிகள் ‘க்வணத்கிங்கிணீ’-ன்னு சத்தம் பண்ணிண்டு இருக்கு. அந்த மேகலைய போட்டுண்டு
‘லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்’ belt மாதிரி ஒரு பட்டம் ஒண்ணு கட்டியிருக்கு. அது தங்க மயமா இருக்கு.
‘ஹேம பட்டேன வித்யோதமானாம்’ ஒளிவிடும் உன்னுடைய இடுப்பு பிரதேசத்தை நான் த்யானம் பண்ணுகிறேன்.
அருணகிரியாரின் வர்ணனை
எழுதரிய ஆறுமுகமும், மணிநுதலும், வயிரமிடையிட்டுச் சமைந்த செஞ்சுட்டிக் கலன்களும் , துங்க நீள் பன்னிரு கருணை விழிமலரும், இலகு பதினிரு குழையும், ரத்னக் குதம்பையும், பத்மக் கரங்களும், செம்பொனூலும், மொழி புகழும் உடைமணியும், அரைவடமும், அடியிணையும், முத்தச் சதங்கையும், சித்ர சிகண்டியும், செங்கை வேலும், முழுதும் அழகிய குமரன்.
முருகா சரணம்
முருகா சரணம்
No comments:
Post a Comment