மஹாம்போதிதீரே மஹாபாபசோரே
முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே |
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் ||
அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை
அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை
மஹாம்போதி தீரே’
‘அம்போதின்னா’
-கடல், பெரிய கடலின் கரையில்,
‘அம்போதின்னா’
-கடல், பெரிய கடலின் கரையில்,
‘மஹாபாபசோரே'
நம்முடைய பாபங்கள் எப்படி போச்சுன்னு நமக்கே தெரியாத மாதிரி நம்முடைய பாபங்களை எல்லாம் திருடிடறார் முருகப் பெருமான்.
முனீந்த்ரானுகூலே’
முனிவர்களுக்கு அனுகூலமாக இருக்கக் கூடிய, முனிவர்கள் தவம் செய்ய ரொம்ப சௌகர்யமா இருக்கக்கூடிய
‘ஸுகந்தாக்யசைலே’
ஆக்யம்-னா பெயர்ன்னு அர்த்தம்.
ஆக்யம்-னா பெயர்ன்னு அர்த்தம்.
அனுகூலமாக்க இருக்கும் அந்த மலையில்
‘குஹாயாம் வஸந்தம்’
ஒரு குஹையில் முருகப் பெருமான் வசிக்கிறார்.
‘ஸ்வபாஸா லஸந்தம்’
குஹை கோடி ஸூர்ய ப்ரகாசமா இருக்கு. ஏன்னா அந்த குஹைக்குள்ள தன்னுடைய ஒளியினாலேயே பிரகாசிக்கக் கூடிய ஸ்வாமி குஹன். அவர் பேரும் குஹன். குஹைக்குள்ள வசிக்கிற அந்த குஹனை
‘ஜனார்திம் ஹரந்தம்’
ஜனங்களுடைய ‘ஆர்த்தி’ன்னா கஷ்டம், கஷ்டங்களை போக்கும்,
ஜனங்களுடைய ‘ஆர்த்தி’ன்னா கஷ்டம், கஷ்டங்களை போக்கும்,
‘தம் குஹம்’
அந்த முருகப் பெருமானை
அந்த முருகப் பெருமானை
‘ஸ்ராயமஹ’
நாங்கள் ஆஸ்ரயித்திருக்கிறோம்’
நாங்கள் ஆஸ்ரயித்திருக்கிறோம்’
இந்த ஸ்லோகத்தில் ஹ்ருதய குகையில் வசிக்கும் ஆயிரம் சூரியர்களின் ஔியோடு விளங்கும் முருகப் பெருமானை எவர்கள் தரிசிக்கிறார்களோ , அவர்கள் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு பவக்கடலையும் தாண்டுவார்கள். இந்த ஞான மார்க்க முனிவர்களுக்கு அனுகூலமாக திகழ்பவர்.
முனிவர்கள் என்பவர்கள் யார்? மௌனமாக இருந்து அந்த மௌனத்திலே லயித்து அதி ரஹசியமான பொருளை உணர்பவர்கள்..
உணர்ந்த பின்பு உலக மக்களுக்காக வாழ்பவர்கள்....ஆதி சங்கரர், அருணகிரி போன்ற மஹான்கள் செய்யும் காரியங்களுக்கு அனுகூலமாக இருப்பவர்..
இந்த ஸ்லோகத்தை படித்தவுடன் ஞாபகத்திற்கு வருவது சீர்பாத வகுப்பிலே
' சதகோடி சூரியர்கள் உதயமென யுக முடிவின் இருள் அகல ஒரு ஜோதி வீசுவதும் என்ற வரிகள்..
அடுத்து வீரவாள் வகுப்பில் வரும் வரிகளான
' யாருமே அற்றவன் என் மீதோர் ஆபத்துற வராமலே சுற்றிலும் இருந்து காத்திடுமே என்ற வரிகள்..
இருவினைப் பிறவிக் கடல் மூழ்கி இடர்கள் பட்டு அலையப் புகுதாதே,
இதயந்தனிலிருந்து க்ருபையாகி இடர்சங்கைகள் கலங்க அருள்வாயே முருகா..
பணியும் அடியார் சிந்தை மெய்ப் பொருள் அது ஆக நவில் சரவணபவா ஒன்றும் வல் கரமாகி வளர் பழநிமலை மேல் நின்ற சுப்ரமண்யா சரணம்..
முருகன் , குமரன், குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய் முருகா....
முருகா சரணம்
முருகா சரணம்
No comments:
Post a Comment