அபிராமி அந்தாதி - 17
அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே
அதிசயம் ஆன வடிவுடையாள் -
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே
அதிசயம் ஆன வடிவுடையாள் -
அபிராமி அன்னை மிகவும் அதிசயமான அழகான உருவத்தை உடையவள். தாமரை மலரை முதற்கொண்டு எல்லா அழகிய மலர்களும் துதி செய்யக்கூடிய வெற்றி பொருந்திய திருமுகத்தை உடைய அழகிய கொடி போன்றவள். அவளின் கணவனோ இரதியின் கணவனாம் மன்மதனின் வெற்றிகளெல்லாம் தோல்வியாக நெற்றிக்கண்ணால் அவனை எரித்தவர். அப்படி மன்மதனை வென்றவர் தம் மனத்தையும் நீர் போல் குழையச்செய்து வெற்றிகொண்டு அவருடைய இடது பாகத்தையும் கவர்ந்து கொண்டாளே. அது பெரும் அதிசயம்.
காணஅரிதானபேரழகும்ஒருவகைஅதிசயம்தான்.வாஞ்சையும்வாத்சல்யமும் பொங்கும் திருவுருவும் அதிசயம்தான்.
அம்பிகைஅத்தகைய அழகு. அம்பிகையின் திருவுருவைக் கண்டுதான்கறுப்பே அழகு”என்ற முடிவுக்கு உலகம் வந்தது.
அம்பிகைஅத்தகைய அழகு. அம்பிகையின் திருவுருவைக் கண்டுதான்கறுப்பே அழகு”என்ற முடிவுக்கு உலகம் வந்தது.
ஆதிசங்கரரும் செளந்தர்யலஹரில 45 வது ஸ்லோகத்துல அன்னையின் முகம் தாமரைப் புஷ்பமாகவும், அவளது முன்னுச்சியில் இருக்கும் சுருண்ட முடியானது தாமரையை மொய்க்கும் வண்டுகளாகவும் சொல்கிறார். அம்பிகையின் சிரிப்பினால் வெளிப்படும் பல்வரிசை மூலம் வெளிவரும் காந்தியுடன் கூடிய அந்த முகத்தைக் கண்ட பரமசிவன் மயங்கிவிடுகிறராம்.
அரவிந்தம் எல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி -
குளத்தில் பூத்திருக்கும் அரவிந்தமாகிய தாமரை மலரை முதற்கொண்டு எல்லா அழகிய மலர்களும் அவளைக் கண்டு அவள் முகம் சூரியனோ என எண்ணித் துதிக்கின்றது.
அந்தத் தாமரைக்கொடி மெல்லியதா; அன்னையின் உடல் மெல்லியதா என்னும் வண்ணம் மெல்லிய கொடியைப் போன்ற சுந்தரமான அழகுடையவள்
மலர்களிலேயே மிக அழகானது தாமரை.அந்தத் தாமரை மலர்களில்
செந்தாமரைகளின் தலைவி திருமகள். வெண்தாமரைகளின் தலைவி
கலைமகள். அபிராமியை அலைமகளாம் திருமகளும் கலைமகளும்
துதிப்பதாலேயே அம்பிகையின் அழகில் மயங்கி தாமரைகள் எல்லாம்துதி செய்யும் பேரழகி அபிராமி.
தாமரை மலர்கள் மட்டுமல்ல. உலகில் பூக்கும் மலர்களும், தேவலோக புஷ்பங்களும் அம்பிகையை சதாசர்வ காலமும் துதித்துக்கொண்டுதானே இருக்கின்றன. இங்கு கூறிய தாமரை என்ற உவமை யோக மார்க்கத்தில் கூறப்படும் ஆறு தாமரைகளாகிய ஆதாரச்சக்கரங்கள் ஆகும். இவை அம்பாளை துதிசெய்ய அதன்மேல் அரியணை போன்ற வித்யா பீடமாகிய சஹஸ்ரார கமலத்தில் அன்னை வீற்றிருக்கிறாள் என்பதே இந்த உவமையின் தாத்பர்யம்.”
(ஆனனம் = திருமுகம். எடுத்துக்காட்டுகள்: கஜானனன் - யானைமுகன்; ஷடானனன் - ஆறுமுகன்; பஞ்சானனன் - ஐந்துமுகன் (சிவன்).)
துணை இரதிபதி ஜெயமானது அபஜெயமாக முன் பார்த்தவர் - தம் மதி ஜெயமாக அன்றோ
அவளின் கணவனோ இரதியின் கணவனாம் மன்மதனின் வெற்றிகளெல்லாம் தோல்வியாக நெற்றிக்கண்ணால் அவனை எரித்தவர். அப்படி மன்மதனை வென்றவர் தம் மனத்தையும் நீர் போல் குழையச்செய்து வெற்றிகொண்டு அவருடைய இடது பாகத்தையும் கவர்ந்து கொண்டாளே.
ஹரனாகிய ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து எழுந்த அக்னியால் எரிக்கப் பட்ட காமனைப் பிழைக்க வைத்த சஞ்ஜீவனி மருந்தைப் போன்றவள் .
அம்பிகையானவள் காமனுக்கு மட்டுமன்றி நமக்கும் ஒளஷதமாய்ச் செயல்படுவதை அறிந்து கொள்கிறோம். பராசக்தியானவள் ஈசனின் உடலில் பாதி சரீரம் எடுத்துக்கொண்டிருந்தாலும் உலகனைத்திற்கும் மருந்தாய் விளங்குகிறாள். விஷத்தை உண்டும் அவள் அருளால் ஈசன் பிழைத்து நீலகண்டனாக ஆகிய விந்தையையும் அறிவோம் அல்லவா??
அத்தகைய சக்தி வாய்ந்த அம்பிகை இப்போது உலகு உய்யும் பொருட்டு காமனைப் பிழைக்க வைக்கிறாள். எதற்கு?? யோகத்தில் ஆழ்ந்திருக்கிறான் ஈசன். காமனை எரித்துவிட்டு காமதகனராய்ச் சர்வ சக்தியும் ஒடுங்கிய வண்ணம் காட்சி அளிக்கிறான். அவன் கண்களை விழித்து அம்பிகையை நோக்கினால் அன்றோ, குமாரன் பிறப்பான்??
குமாரன் பிறந்தால் அன்றோ மிச்சம் இருக்கும் அசுரக் குலமும் அழியும்?? குமாரன் என்றால் கந்தன் ஒருவனே. அவனை மட்டுமே குறிக்கும். வேறு யாரையும் குறிக்காது. அத்தகைய கந்தனைப் பிறப்பிக்கும் பொருட்டு அம்பிகை மன்மதனை எழுப்புகிறாள். வியப்பைத் தரும் திருவுருவை உடைய அம்பிகை மன்மதனை எழுப்பி அதன் மூலம் சிவனது புத்தியை வெற்றி கொண்டதை இவ்வாறு கூறுகிறார்.
வாம பாகத்தை வவ்வியதே -
அந்த இறைவரின் இடது பாகத்திலே அமர்ந்து இருக்கிறாள். வாம பாகம் என்று சொல்லப்படும்படியான அந்த இடது பாகத்தினைத் தனதாக்கிக்கொண்டு கொலு வீற்று இருக்கிறாள். ஏப்படிப்பட்ட இறைவரது இடது பாகம் அது? மன்மதனை எரித்த இறைவரது இடப்பாகம். தன் மேல் மலர் அம்பு எய்து தனக்கு காமக் கிளர்ச்சியூட்ட முயன்ற அந்த மன்மதனை எரித்த இறைவரது இடப்பாகம். அந்த இரதியின் துணைவனை வெற்றி கொண்டவரது இடப்பாகம்.
சிவபெருமான் ஞான சொரூபி. பரமயோகி. மன்மதனை எரித்த ஞானக் கண்ணுடையவருடைய உள்ளத்தை மாத்திரமா வரித்துக் கொண்டாள் பிராட்டி? அவருடைய உடலின் பாதிப் பாகத்தையே அல்லவா வவ்விக் கொண்டாள்.
அதாவது சிவபெருமான் தன் வாம பாகத்தில் அம்பிகையை வைத்திருக்கிறார் என்று சொல்லாமல், அவர் வாம பாகத்தை அம்மை எடுத்துக் கொண்டாள் என்கிறார்.
அருணகிரிநாதரும்
"ஒருவரைப் பங்கில் உடையாள் திரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரம கல்யாணி "என்று சொல்கிறார்.
ஒட்டக்கூத்தரும் 'பாகன் அகம் குழைவித்த பவித்ர பயோதரி ' என்று சொல்லியிருக்கார்.
பட்டர் அன்னையை அர்த்தநாரீஸ்வரராகவே த்யானிக்கறார்.
பாடலை குருஜி கற்பிக்கிறார் இசையுடன்
Utube Link for ANDROID and IPAD PHONE
அன்பர்கள் இசைக்கிறார்கள்
Utube Link for ANDROID and IPAD PHONE
அன்னை அபிராமியே சரணம்
முருகா சரணம்
No comments:
Post a Comment