திருப்புகழ் கற்பதில் எளிமை
நம் அன்பர்கள் குறிப்பாக தில்லி அன்பர்கள் குருகுல முறையில் தான் திருப்புகழை குருஜியிடம் கற்று தேர்ந்தார்கள் . அவர்கள் பாக்கிய சாலிகள்.கால ஓட்டத்தில் மற்ற அன்பர்களை கருத்தில் கொண்டு ஒலிநாடா வெளிவந்தது.பின்னர் CD ,U TUBE முதலியவை உலகிலுள்ள எல்லா அன்பர்களுக்கும் பெருமளவில் சேவையை தொடர்கின்றன.
இப்போது சிகரம் வைத்தாற்போல், முருகன் அருளால் PP T என்று அழைக்கப்படும் நவீன யுக்தியுடன் வடிவு எடுத்துள்ளது.
இதன் சிறப்பு என்னவென்றால்,குருஜி கற்பிக்கும் முறையில் அமைந்துள்ள 503 திருப்புகழ் பாடல்களை இசையுடன் நாம் கற்றுக்கொள்ளும்போதே அதன் பாடல் வரிகள் நம் முன் திரையில் தோன்றி நம்மை பரவசப்படுத்தி கற்பதை எளிதாக்கும்.
இந்த அற்புத யுக்தியை அரும் பாடு பட்டு தயாரித்து அன்பர்களுக்கு அளித்தவர்கள் ஹைதராபாத் அருளாளர்கள் உமா ஜெயராமன் மற்றும் பவானி சுப்பிரமணியம்.இணைப்பாளர் அருளாளர் பாலாஜி அவர்கள்.
அன்பர்கள் Cell Phone .Labtop மற்றும் கம்ப்யூட்டர் மூலமாக எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் மிக எளிதாக கற்றுக்கொள்ளலாம்.
PP T யின் குறியீடு
(After opening double click the arrow )
பாடல்கள் புது திருப்புகழ் வழிபாடு புத்தகத்தின் எண் வரிசை அடிப்படையில் அமைந்துள்ளன. அன்பர்களின் விருப்பத்திற்கு இணங்க தமிழைத்தவிர மற்ற மலையாளம் ,கன்னடம்,ஹிந்தி மொழி வடிவங்களிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிகிறோம்.
அரும்பாடுபட்டு தயாரித்துள்ள அருளாளர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனா க திருப்புகழ் பாடல்கள் முழுவதையும் விரைவில் கற்று வழிபாடுகளுக்கு நம்மை தயார் நிலைக்கு கொண்டு செல்வோம்.
முருகா சரணம்