Friday, 10 June 2016

குருமஹிமை ...இசை ...மோகன ராகம்


குருமஹிமை ...இசை ...மோகன ராகப்பாடல்கள் பகுதி ...1

                                                                                        வினாயகர் துதி


                                                   பக்கரை விசித்ரமணி " என்று தொடங்கும் பாடல்

                                                               வயலூர் திருத்தலம் (செய்ப்பதி )


எவருமே ‘கைத்தல” பாடல்தான் முதல் பாட்டு எனக் கருதினாலும் ஆராய்ச்சியாளர் கூறுவது என்னவென்றால் ‘பக்கர விசித்திரமணி”தான் அவர் பாடிய முதல் பாடல் என்று.

“எனது மயிலையும், வேலையும், மாலை அணிந்த தோள்களையும், தெய்வ யானையையும் வள்ளிநாயகியையும், சதங்கை அணிந்த திருவடிகளையும் வைத்துப் பாடு” என்ற கந்தனின் ஆணைப்படி மயில், வேல், மலர்மாலை, சேவல், தெய்வயானை, வள்ளி, திருவடிகளை வைத்து முதல் பாடலை கணபதி துதியாக அமைத்து அதிலேயே,
முருகனுடைய மயில் - பக்கரை விசித்ர மணி பொற்கலனை இட்ட நடை  பட்சி எனும் உக்ர துரகம்,
மலர்மாலை - நீபப் பக்குவ மலர்த் தொடை
வேல் - அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேல்
சேவல் - திக்கு அது மதிக்க வரும் குக்குடம்
முருகனுடைய திருவடி - ரக்க்ஷ தரு சிற்றடி
பன்னிரு தோள் - முற்றிய பன்னிரு தோள்
முருகனுடைய திருப்பதி - செய்ப்பதி வைத்து உயர் திருப்புகழ்  விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே 
என ‘பக்கரை விசித்திரமணி’ பாடலை வயலுரில் உள்ள பொய்யா கணபதி முன் பாடினார். முருகன் குறிப்பிட்ட அனைத்தையுமே அமைத்துப் பாடிவிட்டார். தாம் பாடுவது திருப்புகழ் என்று பெயரையும் குறிப்பிட்டுவிட்டார். அவர் இந்த அமைப்பில் பாடிய பதினாறாயிரம் பாடல்களும் திருப்புகழ் என்ற பெயரைப் பெற்றன. இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. விநாயகப் பெருமானுக்கு உகந்த நைவேத்தியங்களையெல்லாம் வரிசையாகப் பட்டியல் போட்டிருக்கிறார்.

இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள்பொரி, அவல், இளநீர், தேன் (வண்டெச்சில்) பயறு, அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள்ளரிப்பழம், இடியப்பம் வகையறா, தனிமூலம் மிக்க அடிசில், கடலை.....
இந்தப் பாடலை அருணகிரிநாதர் பாடியபோது விநாயகர் அதில் மிகவும் லயித்துப்போய், ரசித்து தலையை அசைத்துக் கேட்டாராம். திருப்புகழ் நூலுக்கு அதிகாரபூர்வமாகப் பாடப்பட்ட முதற்பாடல் வயலூர் விநாயகரைத் துதித்து முருகனின் சிறப்பம்சங்களை அமைத்து முருகன் ஆணையிட்டது போலப் பாடிய 'பக்கரை விசித்ரமணி' திருப்புகழ் பாடல்தான். அந்த பாடலில்தான் கணபதியை ‘வித்தக மருப்புடைய பெருமாளே! என் விளித்து 'உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பென எனக்கு அருள்கை மறவேனே’ என்கிறார் எதை கூற அருள் வேண்டுகிறார்? “திருப்புகழை”. ஓப்புதல் அளித்தவர் யார்? அந்த பொய்யா கணபதி. அதனால் அருணகிரியின் பாடல்களுக்குத் ‘திருப்புகழ்’ என்ற பெயர் அளித்தது வயலூர்ப் பொய்யா கணபதியேதான்!  

-    சாந்தா & சுந்தரரஜன்

அருளாளர்களுக்கு நன்றிகள் பலப்பல 

                                                                              பொய்யா கணபதி 
                                                  (தட்சிணா மூர்த்தி ,ஆதிநாதர்,ஆதிநாயகி அம்மையுடன் )



                                                                                                   பாடல்





                                                                விருத்தம்........பாடல்.........நிரவல் 




                                                                   


                                                                   

"


                                                                                 

                               


                                                                                                                                                                   


                                                                               

                                                                         மும்பை குரு பாலு சார் 



                                                               


https://www.youtube.com/watch?v=aMgGuW1iWqs  

மோகன ராகம் தொடரும் 

முருகா சரணம்                                                                                

1 comment:

  1. விநாயக தெய்வ சகோதரனை அடையும் வாகனமாக மோகன ராகப் பாடல்கள்! பக்கரை விசித்ரமணி பாடல் விளக்கம் பரவசப்படுத்துகிறது.

    ReplyDelete