குருமஹிமை ...இசை ...மோகன ராகப்பாடல்கள் பகுதி ...2
வயலுரைப்பற்றி மேலும் தகவல்கள்
"முருகா சரணம்.. தாயை நோக்கி ஓடிவரும் கன்றினைப் போல் வயலூர் முருகனைத் தேடி வருகிறார் அருணகிரியார். அடிக்கடி அவர் கனவில் வந்து அழைத்தவன் அல்லவா ? அங்குள்ள சக்தி தீர்த்தத்தில் நீராடுகிறார்.தரிசனம் தந்த தயாளன் அவரைப் பொய்யா கணபதி சன்னிதிக்கு அனுப்பி வைக்கிறான். கணபதியின் முன் நிற்கிரார். ஐங்கரன் அருட் பார்வை அவர் மேல் படுகிறது. - _ "அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருளிய "கணபதி அல்லவா? அக்கணமே, நினைத்தவுடன், பாடல் புனையும் ஆசுகவி யாக அருணகிரியாரை மாற்றுகிறார், வித்தைகள், கற்றுத் தரும் அந்த வித்தகன் . துள்ளி வருகின்றன பாடல்கள் ."கைத்தல நிறை கனி" " பக்கரை விசித்ரமணி", "உம்பர் தரு தேனு மணி " , " நினது திருவடி" என்று தொடங்கும் பாடல்களால் விநாயகனைப், பரவசத்துடன் துதிக்கிறார்... "பக்கரை விசித்ரமணி ...... மறவேனே". அழகிய மயில், விரிந்து விகசிக்கும் கடப்ப மாலை, சக்திவேல், சேவல் கொடி, கந்தனின் காக்கும் திருவடிகள். திண்ணிய புயங்கள், செய்ப்பதி என்னும் வயலூர் , இவற்றை எல்லாம் வைத்துத் திருப்புகழ், பாடல்கள், ஆயிரமாயிரம் புனைய அருள் புரிந்து விட்ட ஜேஷ்ட ராஜனாம் விநாயகனைப் பாடி அகம் மகிழ்கிறார். வயலூர் முருகன் சன்னிதியில், கண் குளிர, இதயம் குளிர தரிசனம். ஆடுகிறார், பாடுகிறார். "என்னால் பிறக்கவும் " என்று தொடங்கும் அருமையான பாடல் பிறக்கிறது. _ " என்னால் பிறக்கவும் ...... தந்த கோவே " பிறப்பும், இறப்பும், இந்திரிய இயக்கங்களும், இன்ப துன்பங்கள் அனுபவிப்பதும், அவற்றில் சலிப்படைந்து தள்ளுவதும், சிந்தனைகளும், செயல்பாடுகளும் என் கைவசம் இல்லை. எனக்கு அவற்றின் மேல் எந்த உரிமையும் இல்லை. இயக்குபவன் நீ. நீ இல்லை என்றால் நான் வெறும் ஜடம். கல்லிலிருந்து, நார் உரிப்பது போல், என்னிடமிருந்து, பக்தி உணர்வு பாடலாய் வெளிவரச் செய்த, என்,வயற்பதி மன்னா, வள்ளி நாயகா சரணம், என அந்த சக்தி தீர்த்தம் போல், நெஞ்சம் தெளிய, விழிகள் குளமாகப் பாடுகிறார் அருணகிரியார்..
அருளாளர் புனே ஜானகி மாமியின் விளக்க உரையை அளித்தவர் அருளாளர் புனே தாரிணி கணேஷ் .
தலத்தைப்பற்றிய மற்ற தகவலுக்கு
http://temple.dinamalar.com/
மற்ற பாடல்கள்
"கரிய பெரிய " என்று தொடங்கும் பழனி திருத்தலப்பாடல்
"கடாவினி " என்று தொடங்கும் சுவாமி மலை பாடல்
"காணாத தூர " என்று தொடங்கும் திருஅருணை திருத்தலப்பாடல்
"அவகுண " என்று தொடங்கும் சிதம்பரம் திருத்தலப்பாடல்
"அணிசெவ்வியார் " என்று தொடங்கும் பாடல்
வடதிருமுல்லை வாயில் திருத்தலம் தகவலுக்கு
http://temple.dinamalar.com/
"தோரண கனக " என்று தொடங்கும் பொதுப்பாடல்
"பகலிரவினில்" என்று தொடங்கும் திருச்சிராப்பள்ளி பாடல்
மோகன ராகம் தொடரும்
முருகா சரணம்
வயலூர் பற்றிய விளக்கம் வியப்பூட்டுகிறது! அமோகமாக மோகன ராகப் பாடல்கள்.
ReplyDelete